நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்பதாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய இருப்பது இந்திய அரசியல் மற்றும் நிதி வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாக அமைகிறது. 2026-27 நிதியாண்டுக்கான இந்த மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 11 மணிக்கு லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இது சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிகழ்வு என்பதால் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. நிர்மலா சீதாராமன் 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டுடன் தொடங்கி, தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் முழு பட்ஜெட்டுகளை அவர் தாக்கல் செய்து வருகிறார்.

தற்போது நாடாளுமன்றத்தில் ஒன்பதாவது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்தியாவின் வளர்ச்சிக்கு அனைத்து எம்பிக்களும் உறுதுணையாக இருப்பார்கள் என நம்புவதாக தெரிவித்தார். ஆக்கபூர்வமான விவாதத்திற்கு எப்போதும் தயாராகவே இருப்போம் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: ஒவ்வொரு துறையிலும் ஊழல்... பணம் போகும் இடம் குழந்தைக்கும் தெரியும்..! திமுகவை வசைப்பாடிய பிரதமர் மோடி..!
உலகத்தின் நம்பிக்கையாக தற்போது இந்தியா வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தங்களால் ஒளிமயமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது என்றும் கூறினார். இளைய சமுதாயம் மற்றும் சேவை துறையினரை மனதில் வைத்து திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். ஜிஎஸ்டி வருவாயில் 1.65 லட்சம் கோடியை திரட்டி சாதனை படைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டணும்..! செய்வீர்களா? ஜெ. பாணியில் இபிஎஸ் FIRE ஸ்பீச்..!