உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் காந்திநகர் ஜிஎஸ்டி சாலையில் தனியார் ஆம்னி பேருந்து தீ பிடித்து எரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி அடுத்த திசையன்விளையிலிருந்து சென்னைக்கு 43 பயணிகளோடு ஏற்றுக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்து இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தானது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் காந்திநகர் ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்தது பேருந்தில் தீ பற்றியது.
ஏரல் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த போது, ஏர் பிரேக் சிஸ்டம் உள்ள பகுதியில் புகை வருவதைக் கண்டறிந்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். பேருந்திலிருந்து பயணிகள் அனைவரையும் பத்திரமாக கீழே இறக்கிவிட்ட நிலையில், தனியார் பேருந்து முழுவதும் வேகமாக தீ பற்றி கொளுந்துவிட்டு எரிந்துள்ளது.
இதையும் படிங்க: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து...100 அடி தூரத்திற்கு சிதறிய உடல்கள்... 20 தொழிலாளர்கள் உடல் கருகி பலி...!
இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் பேருந்து தீப்பிடித்து எறிய ஆரம்பித்தது உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் விரைந்து சம்பவ இடத்துக்குச் சென்ற உளுந்தூர்பேட்டை தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்து சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து திருநாவலூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய சோகம்...!! - ஐவுளி வியாபாரி வீட்டில் பற்றிய கோர தீ... 4 மாத குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் கருகி பலி...!