சென்னையிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் கரையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்று மாலை சென்னையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் தெரிவித்துள்ளதாவது: இன்னும் சற்று நேரத்தில் 30 கிலோ மீட்டர் அருகே சென்னையை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெருங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னையில் மழை நீடிக்கும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப்பகுதியைச் சுற்றிலும் மேகங்கள் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இது வடக்கு வடமேற்கு திசையை நோக்கி நகரும் போது, நாளை இரவு வரைக்குமே சென்னை கடற்கரைக்கு அருகிலேயே நிலைகொண்டிருக்கும்.
இந்த காற்றழுத்த சுழற்சியானது நீடித்துக்கொண்டே இருக்கும் வரையில் மழை மேகங்கள் மீண்டும், மீண்டும் உருவாகிக்கொண்டே இருக்கும். இதனால் இன்று இரவு முதல் நாளை வரையில் கூட மழை தொடரக்கூடும். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை வரை சென்னைக்கு அருகிலேயே நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாளை காலை புதிய மேகங்கள் உருவாகி சென்னை முழுவதும் இதேபோல் தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னைக்கு அருகே நீடிக்கும் வரை மழை தொடர்ந்து கொண்டே இருக்கும். நாளை மாலை அல்லது புதன் கிழமை காலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கக்கூடும். அது வரை சென்னைக்கு மழையானது நீடிக்கும்.
இதையும் படிங்க: #BREAKING வேதாரண்யத்தை நெருங்கும் டிட்வா... நள்ளிரவு முதல் நாளை மாலை வரை காத்திருக்கும் தரமான சம்பவம்...!
நாளை மாலை அல்லது நாளை இரவு வரைக்குமே வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்க வாய்ப்பே கிடையாது என்றும், இதனால் ஆந்திர கடற்கரையை ஒட்டியுள்ள திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தென் ஆந்திராவின் கடற்கரையை ஒட்டியுள்ள நெல்லூர், ராயல சீமா பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காலை 11:30 மணி அளவில் அதே பகுதிகளில் சென்னைக்கு கிழக்கே 50 கிலோமீட்ட தொலைவில் நிலை கொண்டிருந்தது. இது இன்று மாலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் நகர்ந்து செல்லக்கூடும். அதன் பின்னர் அதற்கடுத்து 12 மணி நேரத்தில் வடதிசையில் நகர்ந்து காற்றழுடத்து தாழும் மண்டலமாக பெயக்கூடும். இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கன மழைக்கும் ஓரிரு இடங்களில் அதிக மழைக்கும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
நாளை இரண்டாம் தேதி அன்று, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழக கடலோர பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளிலும் ஆந்திர கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும், வட தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளிலும் நாளை சூறாவளி வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆட்டத்தை ஆரம்பித்த ‘டிட்வா’ - கோடியக்கரையில் கொட்டித்தீர்த்த கனமழை... ஒரே நாளில் 25.08 செமீ மழை பதிவு...!