ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஷாலினி என்ற 12 ஆம் வகுப்பு மாணவி அரசு பள்ளியில் பயின்று வந்துள்ளார். அவரை சேரல் கோட்டையைச் சேர்ந்த முனியராஜ் என்பவன் ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. தொடர்ந்து மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மாணவி பள்ளிக்குச் செல்லும் வழியில் வழிமறித்து தன்னை காதலிக்க சொல்லி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார் முனியராஜ். அவரின் காதலை ஏற்க மாணவர் ஷாலினி மறுத்ததாக தெரிகிறது. மாணவியை தொடர்ந்து காதல் தொந்தரவு கொடுத்து வந்த முனியராஜ் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
காதலை ஏற்காமல் பேச மறுத்த நிலையில் பள்ளிக்கு சென்ற 12 ஆம் வகுப்பு மாணவி ஷாலினியை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மாணவியை கொலை செய்த முனியராஜுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று ஒருமித்த குரல் எழுந்துள்ளது.

இந்த நிலையில், மாணவி ஷாலினியை கொலை செய்த இளைஞர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதாக தெரிகிறது. தொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் உண்மை நிலையை கண்டறிந்துள்ளது. இராமேஸ்வரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவியைக் கொன்றது பட்டியலின இளைஞர் என்றுக் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறான தகவல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெட்டி காவு குடுங்க அவன..! என் பிள்ளை துடிச்சு துடிச்சு செத்துடுச்சே... கதறும் உறவினர்கள்..!
இராமேஸ்வரத்தில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட விவகாரத்தில் முனிராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் இவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கைதான நபரும், கொல்லப்பட்ட மாணவியும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை விளக்கமளித்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: துரத்தி துரத்தி காதல் தொல்லை… 12 ஆம் வகுப்பு மாணவியை குத்திக் கொலை செய்த கொடூரம்…!