2025 ஆம் ஆண்டு, இந்திய அரசியல் களத்தில் ஒரு பெரும் புயல் போன்று வெடித்தது வாக்குத் திருட்டு என்ற குற்றச்சாட்டு. இது வெறும் அரசியல் பிரச்சனை அல்ல. அது இந்தியாவின் ஜனநாயக அடித்தளத்தை நடுங்க வைக்கும் ஒரு சர்ச்சை. குறிப்பாக, ஒரே வீட்டில் பல ஓட்டுச் சீட்டுகள் பதிவாகியிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியது.
இந்த சர்ச்சை, 2024 சட்டமன்ற தேர்தல்களுக்குப் பின் தீவிரமடைந்து, 2025ல் பீகார், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களை சூழ்ந்தது. குறிப்பாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குத்திருட்டு நடந்ததை சுட்டிக்காட்டினார். பாஜக அரசு மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதனிடையே, தமிழ்நாட்டின் குன்னூர் சட்டமன்றத் தொகுதி, கோடேரி கிராமத்தில் 11 என்ற வீட்டு எண்ணில் 79 பேர் இருப்பதாக வாக்காளர் பட்டியலில் பதிவாகியுள்ளது என்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இது குறித்த உண்மை நிலவரத்தை தமிழக அரசின் தகவல் சரிப்பார்ப்பகம் விளக்கி உள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியலில் பாகம் எண் 210ல் வார்டு எண் தவறுதலாக வீட்டு எண்ணாகப் பதிவாகியுள்ளது என கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் வருகைக்காக பனைமரம் வெட்டப்பட்டதா? முற்றுப்புள்ளி வைத்த TN FACT CHECK...!
அதனைத் திருத்தச் சம்மந்தப்பட்ட வாக்காளர்களுக்குப் வழங்கப்பட்டுக் கடந்த மாதமே மேற்கொள்ளப்பட்டுவிட்டது என்று படிவம்-8 திருத்தம் குன்னூர் வாக்காளர் பதிவு அலுவலர் விளக்கம் அளித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குன்னூரில் ஒரே வீட்டு எண்ணில் 79 வாக்கு, வார்டு எண் தவறுதலாக வீட்டு எண்ணானது, திருத்தம் செய்யப்பட்டது என்றும் விளக்கம் அளித்து உள்ளது.
இதையும் படிங்க: நெருங்கும் SIR... அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க தவெகவுக்கு அழைப்பு...!