தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியமான ஒரு நிகழ்வாக அமையவிருக்கிறது. விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை 2024 பிப்ரவரி மாதம் தொடங்கிய பிறகு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவரது கட்சி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களிடையே தனது கொள்கைகளையும், தொலைநோக்கு திட்டங்களையும் எடுத்துச் செல்வதற்காக பல்வேறு மாநாடுகளையும், சுற்றுப்பயணங்களையும் மேற்கொண்டு வருகிறது.
இதற்கு முன்னர், விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெகவின் முதல் மாநில மாநாடு மற்றும் மதுரை பாரபத்தியில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாடு ஆகியவை கட்சியின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தன. இந்த மாநாடுகளில், விஜய் சமூக நீதி, பெண்களுக்கான பாதுகாப்பு, மற்றும் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து பேசியிருந்தார்.

இது அவரது அரசியல் பயணத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் சுற்றுப்பயணங்கள் மற்றும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த 13ம் தேதி திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இதையும் படிங்க: உண்மையாவே திமுகவை எதிர்த்தா விஜய் அதிமுகவுக்கு வரணும்! சவால்விட்ட மாஜி அமைச்சர்...
திருவாரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, ஜேசிபி மூலம் பிரம்மாண்ட மாலை விஜய்க்கு அணிவிக்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கருதி தமிழக வெற்றி கழகத்தினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: நம்மள பாத்தாலே நடுங்குறாங்க... நம்ம ஆட்டம் தான் இனி! விஜய் அறைகூவல்..!!