அணு ஆயுத தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டுத்தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த 28ம் தேதி போர் தொடங்கிய நிலையில், பதிலடி கொடுப்பதற்காக ஈரான் மத்திய கிழக்கில் உள்ள ராணுவ நிலைகள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரான் மீதான தாக்குதலுக்கு எபிக்ஃபியூரி என அமெரிக்க ராணுவம் பெயரிட்டுள்ளது. இந்த ஆபரேஷனை வழிநடத்தும் ராணுவ காமண்டர் அட்மிரல் பிராட் கூப்பர் அளித்துள்ள பேட்டியில், முதல் 100 மணி நேரத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஈரான் மீது 24 மணி நேரமும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதுவரை சுமார் 2,000 இலக்குகளை தாக்கியுள்ளோம். ஈரானின் வான் பாதுகாப்பு மோசமான அளவில் பாதிப்படைந்துள்ளது. ஈரானின் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அழித்துள்ளோம்.
ஈரான் கடற்படையை ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டோம். ஈரான் கடற்படையில் ஒரு நீர்மூழ்கி கப்பல் உட்பட 20 போர்க்கப்பல்கள் இருந்தன. அனைத்தையும் மூழ்கடித்துவிட்டோம். சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு தடையாக இருந்த ஈரானின் அனைத்து இடங்கள் மீதும் பி-2 குண்டு வீச்சு விமானங்கள், எப்-35 போர் விமானங்கள், டொமஹாக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார். ஐஆர்ஐஎஸ் மக்ரான், பகேரி, ஜமரான், சாஹந்த், சபாலன், பேயந்தர், நக்தே உள்ளிட்ட கப்பல்கள் மற்றும் தரேக் என்ற நீர்மூழ்கி கப்பலையும் அமெரிக்க படை மூழ்கடித்துள்ளது.
இதையும் படிங்க: “வக்காலத்து வாங்க மாட்டேன்”... காங்கிரஸ், திமுக விவகாரத்தில் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த நச் பதிலடி...!
நேற்று அதிகாலை இந்தியாவுடன் விசாகப்பட்டினத்தில் மிலன் 2026 கூட்டுப் பயிற்சியை முடித்துவிட்டு திரும்பிய ஈரானின் தேனா என்ற போர்க் கப்பலை இலங்கை அருகே, இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் டார்பிடோ குண்டுகளை ஏவி மூழ்கடித்தது. இதில் 80 வீரர்கள் உயிரிழந்தனர். இங்கு இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை மீட்பு பணியை மேற்கொண்டது. ஈரான் கடற்படையில் மொத்தம் இருந்த 20 போர்க் கப்பல்களையும் அமெரிக்க கடற்படை அழித்துவிட்டதால் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஈரானுக்கு அடுத்தடுத்து ஆபத்து..!! நிலநடுக்கம் ரிக்டரில் 4.3ஆக பதிவு..!! நடுக்கத்தில் மக்கள்..!!