இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கான சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது
புதுச்சேரியில் இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15-ஆம் தேதி அறிவித்தது. தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும். வேட்புமனு தாக்கல் தொடங்கிய தேதி மார்ச் 16, கடைசி தேதி மார்ச் 23, வேட்புமனு ஆய்வு மார்ச் 24, வேட்புமனு வாபஸ் இழுப்பதற்கான கடைசி நாள் மார்ச் 26. வாக்குப்பதிவு ஏப்ரல் 9, 2026 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்படும் என்றும் இதே நாளில் தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலத் தேர்தல் முடிவுகளும் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மூன்று தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்து இருந்தார். ஊசுடு, நெட்டப்பாக்கம், உழவர் கரை ஆகிய மூன்று தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக திருமாவளவன் தெரிவித்தார். நாங்கள் போட்டுவிடாத மற்ற தொகுதிகளில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தரப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: பானை சின்னத்தில் தான் போட்டி..! 8 தொகுதிகளுக்கு உடன்பட்டது ஏன்? திருமா. பளீச் விளக்கம்..!!
இந்த நிலையில், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ளார். ஊசுடு தொகுதியில் அரிமா தமிழன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெட்டப்பாக்கம் தொகுதியில் அமுதவன் போட்டியிடுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் உழவர்கரை தொகுதியில் புஷ்பலதா போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: தவெக ரூட் எடுத்த திருமா... விசிகவிடம் மீண்டும் டீல் பேசிய விஜய்... தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்...!