வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பணி முடித்து வீட்டுக்குச் சென்ற தலைமை பெண் தலைமை காவலர் கணவரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, தவெக ஆட்சியில் பெண் காவலருக்கு இப்படியொரு நிலையா? முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எங்கே? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஏர்த்தாங்கல் பகுதியை சேர்ந்த தாமரைச்செல்வி (40) இவரது கணவர் ஆட்டோ ஓட்டுனர் அரவிந்தன் வயது( 45) இவர்களுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் தாமரைச்செல்வி குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்
இதனிடையே அவருக்கும் அவரது கணவர் அர்விந்தனுக்கும் கடந்த சில நாட்களாக குடும்பப் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தாமரைச்செல்வி இன்று இரவு பணி முடித்து வீட்டிற்கு சென்ற போது நெல்லூர் பேட்டை ஏரிக்கரை பகுதியில் அவரது கணவர் அர்விந்தன் மனைவி தாமரைச்செல்வியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்
இதையும் படிங்க: குடியைக் கெடுத்த குடி...!! - தலைக்கேறிய மதுபோதை... வேலூரில் பெற்ற தந்தைக்கு மகனால் நேர்ந்த பயங்கரம்...!
அப்பொழுது வாக்குவாதம் முற்றிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாமரைச்செல்வியை கை கழுத்து தலை மார்பு உள்ளிட்ட பகுதிகளில் கத்தியால் குத்திய நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்த தாமரைச்செல்வியை
அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலன்யின்றி தாமரைச்செல்வி உயிரிழந்தார்
இதனையடுத்து அவரது கணவர் அர்விந்தனை கைது செய்த போலீசார் மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குடும்பப் பிரச்சினை காரணமாக பெண் காவலரை அவரது கணவரே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சென்னை மக்களுக்கு காலையிலேயே குட்நியூஸ்... சொத்து வரி வசூலிப்பு நிறுத்திவைப்பு... மக்கள் எதிர்ப்புக்கு பணிந்த தவெக...!