ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் விராட் கோலியின் அபாரமான சதம் ஆர்.சி.பி அணியை புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
193 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி தூணாக நின்றார். கடந்த இரண்டு போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த கோலி, இந்தப் போட்டியில் 60 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 105 ரன்கள் குவித்தார். இரண்டாவது விக்கெட்டிற்கு தேவ்தத் படிக்கல்லுடன் (37 ரன்கள்) இணைந்து 92 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஆர்.சி.பி அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

போராடிய கொல்கத்தாமுன்னதாக முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் சேர்த்தது. விக்கெட் கீப்பர் பேட்டர் அங்க்ரிஷ் ரகுவன்ஷி 46 பந்துகளில் 71 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ரின்கு சிங் 29 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியின் ஸ்கோர் 190-ஐ தாண்ட உதவினார். ஆர்.சி.பி பந்துவீச்சாளர்கள் அனுபவமற்ற கே.கே.ஆர் வேகப்பந்து வீச்சாளர்களை விட சிறப்பாக செயல்பட்டு ரன்களை கட்டுப்படுத்தினர்.
இதையும் படிங்க: சஞ்சு சாம்சன் புதிய சாதனை!! அதிவேக 5000 ரன்கள்! 5 சதம், 26 அரை சதங்களுடன் பட்டியலில் இணைந்தார்!
புள்ளிப்பட்டியலில் முதலிடம்இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியும் அதே 16 புள்ளிகளுடன் இருந்தபோதிலும், ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தனி ஒருவனாய் CSK-வை மீட்ட கேப்டன் ருதுராஜ்! மோசமான சாதனை படைத்தது ஆறுதல்!!