தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் பிரபல ஹீரோவாக வலம் வரும் மாதவன், சினிமாக்காரர்களின் புள்ளைகள் என்றாலே மிகவும் சொகுசாகவும், ஜாலியாகவும் வளருவார்கள் என்ற கருத்தை உடைத்திருக்கிறார்.
மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் வீரர். மலேசிய ஓபனில் ஐந்து தங்கப் பதக்கங்களையும், டேனிஷ் ஓபனில் ஒரு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களையும், லாட்வியன் மற்றும் தாய்லாந்து ஓபனில் வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளார். காமன்வெல்த் இளைஞர் விளையாட்டுப் போட்டிகளிலும் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் மாதவன் தனது மகன் எவ்வளவு ஒழுக்கமானவர், அவர் தினமும் எதையெல்லாம் செய்வார் என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தினமும் காலையில் 4 மணிக்கே எழும் வேதாந்த், இரவு 8 மணிக்கு எல்லாம் தூங்கச் சென்றுவிடுவாராம். வெறுமன சாப்பிடுவது மட்டுமின்றி சாப்பாட்டை சரியாக மென்று சாப்பிட வேண்டும் என்பதையே ஒரு பயிற்சியாக செய்வாராம். நீச்சல் வீரருக்கு தேவையான 6.3 உயரத்தில் இருந்தாலும், உடலை ஒல்லியான தோற்றத்தில் பராமரிக்க வேதாந்த் உணவுக்கட்டுப்பாட்டிலும் சிறப்பு கவனம் செலுத்துகிறாராம்.
இதையும் படிங்க: கால்ஷீட் கொடுத்தும் வேலை தொடங்கல.. ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்கும் நடிகர் ரவி மோகன்..!
குழந்தை வளர்ப்பு குறித்து பேசியுள்ள மாதவன், வேதாந்த் கிட்ட 5 வயசில் இருந்தே தினந்தோறும் பேசுவேன் என்றும், மகன் சொல்வதை தீவிரமாக கேட்டு செயல்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார். உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதும், அவர்களின் சூழல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதும் மட்டுமே நீங்கள் செய்ய முடியும் எனக்கூறும் மாதவன் குழந்தைகள் மீது தங்கள் கருத்துக்களை பெற்றோர்கள் திணிக்கக்கூடாது என்கிறார்.
இதையும் படிங்க: காற்றில் கலந்த 'கன்னடத்து பைங்கிளி'.. அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்..!