தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக அறியப்படுபவர் ரம்பா.

90-களில் விஜய், அஜித், கார்த்தி, என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார்.

குறிப்பாக இவர் தமிழில் நடித்த உள்ளைத்தை அள்ளித்தா, அருணாச்சலம், காதலா காதலா, சுயம்வரம் போன்ற பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது.

இதையும் படிங்க: பான் இந்தியா நடிகராக உருவெடுத்துள்ள சம்பத் ராமுக்கு விருது வழங்கி கௌரவிப்பு!
பட வாய்ப்புகள் குறைய துவங்கிய பின்னர், திரையுலகில் இருந்து விலகி இலங்கையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இந்த ஜோடிகளுக்கு 2 பெண் குழந்தைகளும், 1 மகனும் உள்ளனர்.

தன்னுடைய குழந்தைகள் ஓரளவுக்கு வளர்ந்து விட்டதால், மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ரம்பா வாய்ப்பு தேட துவங்கியுள்ளார். ரம்பாவின் முயற்சிக்கு அவரது கணவர் மற்றும் குழந்தைகள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள்.

ரம்பாவின் குழந்தைகள் தற்போது கன்னடாவில் வசித்து வருவதால், ரம்பா மட்டுமே சென்னையில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. அதே போல், விஜய் டிவி தொலைக்காட்சியில் டான்ஸ் நிகழ்ச்சியிலும் நடுவராகவும் உள்ளார்.

இந்நிலையில், ரம்பா கேரவனில் இருந்தபடி எடுத்து கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது. 48 வயதிலும், 23 வயது இளமையான லுக்கில் ரசிகர்கள் மனதை ரம்பா கவர்த்திழுக்கிறார் என்பது குறிபிடித்தக்கது.
இதையும் படிங்க: தீபாவளிக்கு சீறிக்கொண்டு வரும் 'பைசன் காளமடான்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!