திரையுலகில் குழந்தையிலேயே நடிப்பில் நட்சத்திர நாயகன் பட்டத்தை வென்றவர் தான் நடிகர் கமல் ஹாசன், இவர் இதுவரை அபூர்வ ரகங்கள், மூன்று முடிச்சு, 16 வயதினிலே, சட்டம் என் கையில், சிகப்பு ரோஜாக்கள், நட்சத்திரம், குரு, வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிலா, தில்லு முல்லு 1981, ராஜ பார்வை, மூன்றாம் பிறை, அக்னி சாட்சி, உருவங்கள் மாறலாம், நாயகன், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், குணா, பகடை பன்னிரண்டு, சிங்காரவேலன், தேவர் மகன், மகராசன், கலைஞன், மகாநதி, மகளிர் மட்டும், நம்மவர், குருதிபுனல், சதி லீலாவதி, அவ்வை சண்முகி, இந்தியன், உல்லாசம், உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்களை தன்வசம் வைத்திருக்கிறார்.

இப்படி பல படங்களில் நடித்த நடிகர் கமல்ஹாசன், நடிகர் மட்டுமல்லாமல் கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப்பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக சினிமாவில் போற்றப்படுகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும், "ராஜ்கமல் பிலிம்ஸ்" என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க: தக் லைஃப் படத்திற்கு அமோக வரவேற்பு..! ப்ரீ புக்கிங்கில் சாதனை..!

இப்படிப்பட்ட கமல் ஹாசனின் அட்டகாசமான நடிப்பில், மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாக தயாராக இருக்கும் தக்லைஃப் படத்தில் நடித்து இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். இந்த சூழலில் இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த சமயத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் "ஓ மாறா" பாடலின் லிரிக் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர். 'ஜம்பப்பா மன்னாரே' என தொடங்கும் இப்பாடலின் வரிகள் அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும், ஊர் எதிர்த்தாலும் அவனுக்கு ஆயிரம் யானை-யின் பலம் ! யார் தடுத்தாளும் அதை போரிட்டு முடிகிற குணம் ! இது யாருக்கும் அடங்காத ரணம் !இங்கே அவனுக்கும் பயம் இல்லே டா என்ற வரிகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது என்றே சொல்லலாம்.

இப்படி இருக்க, சமீபத்தில் வெளியான தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் பலரது பாராட்டையும் பெற்று வந்தாலும் அப்படத்தில் வந்த கமல் மற்றும் அபிராமியின் முத்தக்காட்சிகள் மிகவும் சர்ச்சையான நிலையில், தற்பொழுது அபிராமி அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், " தக் லைஃப் படத்தில் வந்த முத்தக்காட்சி வெறும் 3 செகண்ட் கிஸ் காட்சி தான். அது டிரைலரில் வந்ததை பார்த்து அனைவரும் தவறாக புரிந்துகொண்டுள்ளனர்.

ஆனால் அந்த முத்தக்காட்சி இந்த படத்துக்கு தேவையானது தான் என்பது படத்தை பார்க்கும் போது உங்களுக்கே புரியும். தற்போது இது குறித்து பேசுவது தேவையில்லாதது அதே சமயம் கதையையும் அது பாதித்துவிடும். ஆதலால் படம் வெளியான பின்பு நீங்களே எப்படி உள்ளது என சொல்லுங்கள்" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கர்நாடகத்தில் எதிர்ப்பு.. மன்னிப்பு கேட்க முடியாது.. கமல்ஹாசன் நெத்தியடி ரியாக்ஷன்!!