90களில் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த நடிகைகளில் முக்கியமான ஒருவராக இருந்தவர் நடிகை மீனா. சிறு வயதிலேயே குழந்தை நடிகையாக திரையுலகில் அறிமுகமான இவரின் நடிப்பு பயணம், தொடர்ந்து பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக உயர்வதற்கான அடித்தளமாக அமைந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு திரைத்துறைகளிலும் மீனா மட்டுமே முன்னணி கதாநாயகியாக வளர்ந்தவர். மீனாவின் திரையுலகப் பயணம் "என் ராசாவின் மனசிலே" படத்தில் கதாநாயகியாக தொடங்கியது. அதற்கு முன் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களில் அவர் கலக்கியிருந்தார்.
மிகக் குறுகிய காலத்திலேயே அவரது இயல்பான நடிப்பும், அழகு மிகுந்த முகபாவனைகளும், பாசத்தையும் வலியையும் வெளிப்படுத்தும் திறனும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்தக் காலகட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சரத்குமார், அரவிந்த்சாமி, விஜய் ஆகிய முன்னணி நடிகர்களின் ஜோடியாக பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருந்தார். இப்படி இருக்க, 1995-ல் வெளியான 'முத்து' திரைப்படம் மீனாவின் திரைப்பட வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இந்தப் படம், ரஜினிகாந்த். கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் உருவாகி, தமிழ் சினிமாவின் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக மாறியது. இதன் கதாநாயகியாக மீனா, கதாநாயகியாக நடித்துள்ளார். அவருடைய அழகு, மேடை நுட்பங்கள், மற்றும் ஒளிப்பட இயக்குநரின் வெளிப்பாடுகள் என இவை அனைத்தும் ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டன. இந்த சூழலில், சமீபத்தில் தனியார் சேனல் நேர்காணலில் மீனா, முத்து படத்தின் ஷூட்டிங்கின் போது நடந்த உணர்ச்சிவயப்பட்ட ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் " முத்து படத்தின் படப்பிடிப்பின் போது, மிகவும் பரபரப்பாக இருந்தது. அப்போது உள்ள காலகட்டத்தில் பவுன்சர்கள் இல்லை. மக்கள் எல்லாம் எங்களை சுற்றி வந்துட்டாங்க. ரஜினி சார் மட்டும் எதையுமே கவலைப்படாம, சீக்கிரமா நடந்து சென்று விட்டார். அவருடைய வேகத்துக்கேற்ப என்னால நடக்க முடியாம போச்சு. அந்தக் கூட்டத்தில் நானே நெறையா பயந்துட்டேன். எனக்கு யாருமே சப்போர்ட் இல்லாத மாதிரி ஒரு நொடி உணர்ந்தேன். அப்ப தான் லைட் மேன்கள், வேறு சிலர் வந்து என்ன காப்பாத்தினாங்க. அந்த நேரத்தில் பயமும், குழப்பமும் ஏற்பட்டு நான் அழுதேன்னு நினைக்கிறேன். அதுக்கு பிறகு ரஜினி சார் வந்து என்ன சமாதானப்படுத்தினாரு. ரவிக்குமார் சாரும் பேசினாரு. அவங்க ரொம்ப நம்பிக்கையா இருந்தாங்க.. அப்பறம் தான் அழுகையை நிறுத்தினேன்" என கூறினார். இந்த சம்பவம் ஒரு நடிகையின் மனதுக்குள் இருக்கும் பாதுகாப்பு உணர்வும், ஒரு சூப்பர் ஸ்டாருடன் பணியாற்றும் போது ஏற்படும் திடீர் நெருக்கடிகளும், அந்த சந்தர்ப்பங்களில் தோன்றும் உண்மையான மனித உணர்வுகளையும் வெளிக்காட்டி இருக்கிறது. அதே நேரத்தில், ஒரு நடிகைக்கு அந்த கூட்டத்தில் ஏற்படும் மன அழுத்தத்தையும் மீனா வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு சில ஆண்டுகள் திரைப்படங்களில் இருந்து விலகியிருந்த மீனா, சமீப காலங்களில் மீண்டும் சில முக்கியமான துணை மற்றும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது நடிப்புத் திறன் இன்னமும் குறையாமல் தொடர்கிறது என்பதை ரசிகர்கள் மீண்டும் உணர்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: உங்களுக்கு ஏன் தேசிய விருது என கேட்ட கமல்ஹாசன்..! ஷாக்கிங் பதில் கொடுத்த எம்.எஸ்.பாஸ்கர்..!
சமீபத்திய திரைப்படங்களில் அவர் தனது கதாபாத்திரத்தை உயிரோடு நிறுத்திய விதம், விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. குறிப்பாக 90களில் தமிழ் சினிமாவின் Golden Era என அழைக்கப்பட்டவர். அந்தக் காலகட்டத்தில் சிம்ரன், ஜோதிகா, ரம்பா, கவுதமி, நமிதா உள்ளிட்ட பலருடன் இணைந்து மீனாவும் தனக்கென ஒரு முத்திரையை ஏற்படுத்தியிருந்தார். பல வெற்றிப் படங்கள், உணர்ச்சி வெளிப்பாடுகள் மிகுந்த கதைகள், குடும்பம் சார்ந்த மனநிலை கொண்ட கதாபாத்திரங்கள் என இவை அனைத்தும் அவருக்கு அதிகமான ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கின. நடிகை மீனா ஒருபோதும் கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தது இல்லை. இன்றைய திரைப்பட சூழலில், பழைய தலைமுறை நடிகைகள் திரும்பி வரும் போக்கு காணப்படுகிறது. இதில் மீனாவும் ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளார். ரசிகர்களின் மனதிற்கு மிகவும் பிடித்த முகமாக அவர் மீண்டும் திரையில் பளிச்சென்று தெரிகிறார். வெறும் பழைய நினைவுகளுக்காக மட்டுமல்ல, அவரின் திறமையின் மீதும் திரையுலகம் மீண்டும் நம்பிக்கை வைக்கத் தொடங்கியுள்ளது. மீனாவின் “முத்து” பட அனுபவம், ஒரு காலகட்டத்தின் உணர்வுகளை வெளிக்கொணர்கிறது. அப்போது நடக்கும் நெருக்கடிகளும், அதை சமாளிக்கும் மனவலிமையும், பின்னர் அதை ஒரு நகைச்சுவையான சின்னக் கதையாகக் கொண்டு பேசும் திறனும் என இவை அனைத்தும் மீனாவின் அழிவில்லா அழகையும், நடிப்பின் அழுத்தத்தையும் விளக்குகின்றன.

தற்போதைய தலைமுறையிலும், அவர் தொடரும் சிறப்பான பாதை, இன்னும் பல முக்கிய வாய்ப்புகளைத் திறக்கக்கூடியது. ரஜினியுடன் மீனா நடித்த ஒவ்வொரு தருணமும் ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும். அதில், இந்த ஒரு உணர்ச்சி பொங்கிய சம்பவம் தமிழ் சினிமாவின் உருக்கமான தருணங்களில் ஒன்று என்பதை மறுக்க இயலாது.
இதையும் படிங்க: வரலாற்று சாதனை படைத்த நடிகை ஸ்வேதா மேனன்.. AMMA சங்கத்தின் முதல் பெண் தலைவரானார்..!!