மனிதன் தோன்றிய காலத்திலிருந்து அவனுக்கு தேவையான மூன்று காரியங்கள் என்னவென்றால், உண்ண உணவு.... உடுக்க உடை... தங்க இருப்பிடம்... இவை மூன்றும் இருப்பவர்கள் இந்த உலகத்தில் மிகவும் புண்ணியம் செய்தவர்கள் என்று கூறுவர். அதுமட்டுமல்லாமல் இவை மூன்றும் இருப்பவர்கள் நிம்மதியாக உறங்கவும் செய்வார்கள். இல்லையெனில் எப்பொழுது நாம் வீடு வாங்குவோம், நமக்கு வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது என்ற எண்ணத்தில் தூக்கத்தை தொலைத்து மனவேதனையுடன் சுற்றித் திரிபவர்கள் இங்கு அநேகர் இருக்கின்றனர்.

அந்த வகையில் சமீபகாலமாக கோலிவுட்... பாலிவுட்.. சினிமாக்களில் அதிரடி ஆக்சன் காட்சிகளும், கேங்ஸ்டர் பற்றிய கதைகளும் பெருகி இருப்பதால், ஃபேமிலி ஆடியன்ஸ்கள் பலர் திரையரங்குகளுக்கு வந்து திரைப்படத்தை பார்ப்பதையே முழுவதுமாக விட்டு இருக்கின்றனர். அதற்கு உதாரணமாக கே.ஜி.எப் திரைப்படம் முதல் சலார், விக்ரம், ரெட்ரோ என பல படங்கள் வந்தாலும் அதில் காண்பிக்கின்ற ஆக்ஷன் காட்சிகளை பார்க்க ஆர்வம் குறைந்து போனதால் குடும்ப ஆடியன்ஸ்கள் அனைவரும், 'அண்ணாத்த திரைப்படத்தைக் கூட பார்ப்போம் ஆனால் நீங்கள் எடுக்கும் கேங்ஸ்டர்ஸ் படத்தை பார்க்க மாட்டோம்' என பிடிவாதம் பிடித்து வருக்கின்றனர்.
இதையும் படிங்க: கண்களில் கண்ணீர் வரவைத்த "3BHK" பட ட்ரெய்லர்..! பலரின் கனவை அப்படியே காண்பித்த இயக்குநர்..!

ஆளாகப்பட்ட ஹாலிவுட் சினிமாவிலேயே ஆக்சன் காட்சிகள் அனைத்தையும் குறைத்து விட்டு தற்பொழுது குடும்பம் தான் முக்கியம் என்றும் குடும்பத்துக்காக தந்தையான நான் எது வேண்டுமானாலும் செய்வேன் என்று சொல்லத் தக்கதான பல சினிமாக்கள் அங்கேயே உருவாகி இருக்கின்ற வேலையில், நமது கலாச்சாரமாக பார்த்து வந்த குடும்பத் திரைப்படங்கள் எதனால் மாறியது என்று தெரியவில்லை என பலரும் குழம்பி தவிக்கின்றனர். இப்படிப்பட்டதான சூழலில் சமீபகாலமாக குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி, மாமன், மெட்ராஸ் மேட்னி என பல சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாகி ரூ.100 கோடியை கடந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது.

அதேசமயம் ரூ.300 கோடி ரூ.400 கோடி செலவு செய்து பிரமாண்டமான ஆக்ஷன் திரைப்படங்களை எடுத்த மணிரத்தினத்தின் தக் லைஃப்.. கார்த்திக் சுப்புராஜின் ரெட்ரோ.. முதலானவை தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. இதிலிருந்து தற்பொழுது சினிமா துறையினர் கற்றுக் கொண்ட பாடம் என பார்த்தால் மக்களுக்கு ஆக்ஷனை விட ரியாக்ஷன் நிறைந்த செண்டிமெண்ட் படங்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அதுவும் அவர்கள் வாழ்க்கையில் ஒத்துப்போகக்கூடிய கதைகளை இயக்கினால் அத்திரைப்படம் 100 நாட்களைக் கடந்து வெற்றி படமாகவும் மாறி வருகிறது.

இப்படிப்பட்டதான சூழலில் தான் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் தங்களது வாழ்க்கையில் வீடு என்பதை எவ்வளவு முக்கியமாக கருதுகின்றனர் என்றும் தங்களால் வாங்க முடியாத வீடு என்ற விஷயத்தை தங்களது பிள்ளைகளுக்கு படிப்பை கற்றுக் கொடுத்து அவர்களை முதலீடாக வைத்து வீட்டை வாங்கும் கனவு நிறைந்த பல குடும்பங்களின் உண்மை கதைகளை திரையில் கண்டால் எப்படி இருக்கும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றனர் "3bhk" படக்குழுவினர். வந்த வகையில், இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கிய இத்திரைப்படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், சைத்ரா, மீதா ரகுநாத் ஆகியோரின் நடிப்பில் உருவான திரைப்படம் தான் இந்த "3BHK".

இந்த சூழலில் ஜூலை 4-ம் தேதி வெளியாக உள்ள "3BHK" திரைப்படத்தின் ஃப்ரீ ரிலீஸ்-ல் முழு படத்தையும் பார்த்த நடிகர் சிம்பு அவரது எக்ஸ் தளப்பக்கத்தில் உணர்ச்சிபூர்வமான கருத்தை பதிவிட்டு இருக்கிறார். அதன்படி அவரது பதிவில், " நான் இப்பொழுது தான் 3BHK படத்தை பார்த்தேன். உண்மையிலே திரைப்படம் உணர்ச்சி பூர்வமான ஒரு பயணத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். மேலும் இதயபூர்வமான அழகான படமாக இருக்கும். அதிலும் நடிகர் சித்தார்த் மற்றும் சரத்குமார் சாரின் நடிப்பு பிரமாதமாக இருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என உணர்ச்சிப்பொங்க பதிவிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் படத்தின் ட்ரெய்லரை கண்டே நாங்கள் கண்கலங்கி போனோம் சீக்கிரம் படத்தை ரிலீஸ் செய்யுங்க என பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மஞ்சள் நிற சேலை அழகிய புன்னகை..! ரசிகர்களை மயக்கிய நடிகை ரம்யா பாண்டியன்...!