ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கார்த்திகை தீபம் மற்றும் மாரி தொடர்கள் மூலம் பிரபலமானவர் ஸ்ருதி நாராயணன். இவர் விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை தொடரில் தற்பொழுது நடித்து வருகிறார். இப்படிப்பட்ட சீரியலில் வெற்றி வசந்த், கோமதி பிரியா, சால்மா அருண், அனிலா குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் அண்ணாமலை மற்றும் விஜயா ஆகிய தம்பதிக்கு மூன்று பிள்ளைகள்.
அதில் முத்த மகனான 'மகோஜ்', பார்லர் வைத்திருக்கும் 'ரோகிணி'யை திருமணம் செய்து கொண்டார், கதையின் கதாநாயகனான 'முத்து' பூக்கட்டி விற்பனை செய்யும் 'மீனா'வை திருமணம் செய்து கொண்டார். அதே போல் 'ரவி' டப்பிங் ஆர்டிஸ்ட்டான 'ஸ்ருதி'யை திருமணம் செய்து கொண்டார். இப்படி ஒரே வீட்டில் எட்டு பேர் கொண்ட குடும்ப பாங்கான கதை தான் இந்த "சிறகடிக்க ஆசை" சீரியல்.

இந்த சீரியலில் மக்களின் ஆழ் மனதில் வில்லியாகவும் பித்தலாட்ட காரியாகவும் அனைவரது மனதில் நடிப்பால் குடிபுகுந்த கேரட்ர் என்றால் அது ரோகிணி கேரக்டர் தான். இவர் எப்பொழுது குடுத்பத்திடம் சிக்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். இப்படி பட்ட ரோகிணிக்கு தோழியாக 'வித்யா' எனும் கேரக்டரில் நடித்து வருபவர் தான் ஸ்ருதி நாராயணன். இந்த சீரியலில் ரோகிணிக்கு துணை நிற்பதோடு அடிக்கடி அவருக்கு தக்லைஃப் கொடுத்து வரும் இவர் மிகவும் பிரபலமாகி உள்ளார்.
இதையும் படிங்க: நடிகை நயன்தாராவுடன் போட்டோ ஷூட் நடத்திய நடிகர் சிரஞ்சீவி..! மகிழ்ச்சியில் இயக்குனர்..!

இப்படி நடிப்பில் மிகவும் பிசியாக இருக்கும் ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ என்ற பெயரில் ஒரு வீடியோ இணையத்தில் உலா வந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த சிலர் இது 'ஏய் தொழில்நுட்பம்' மூலமாக உருவாக்கப்பட்ட மார்பிங் வீடியோ என கூறிவந்தனர். மறுபக்கம், இது ஒரு 'casting couch வீடியோ', சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஸ்ருதியை இவ்வாறு செய்ய வைத்தி இருப்பார்கள் எனவும் இருபுறமும் மாறி...மாறி... பேசி பலர் பதிவிட்டு வந்த நிலையில், தனது அனைத்து இணையதள பக்கங்களையும் பிரைவேட்டில் போட்டு அமைதியாக இருந்தார் ஸ்ருதி நாராயணன்.

திடீரென பிரைவேட்டில் போட்டிருந்த தனது இன்ஸ்டா தளத்தை மீண்டும் அனைவரும் பார்க்கும் வண்ணம் மாற்றி, தான் புடவையில் நடத்திய போட்டோஷூட் ஒன்றை பதிவிட்டு, பிறகு ஒரு ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டு இருந்தார். அதில் இரண்டு பெண்கள் ஒரே முக சாயலில் இருக்கிறார்கள். அதில் ஒருவர் ரியல், மற்றொருவர் ஏஐ.. சரியானதை கண்டுபிடியுங்கள்? என கேட்டு, அதற்கு பின், உண்மையான பெண் யார், ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட பெண் யார் என்பதையும் அதில் குறிப்பிட்டு இருந்தார். இதன்மூலம் தன்னைப்பற்றி பரவும் வீடியோ ஏஐ மூலம் மார்பிங் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை சூசகமாக அறிவித்திருந்தார் ஸ்ருதி. பின் தன்னைப்பற்றி பரவும் வீடியோ ஏஐ மூலம் மார்பிங் செய்யப்பட்டு இருக்கிறது என தெரிவித்தவர் ஒரு கட்டத்தில் அடுத்தடுத்த வீடியோக்கள் வெளிவர, அது ஏஐ அல்ல தன்னுடைய வீடியோ தான் என்பதை ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில், கடுக்கா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்ருதி நாராயணன், 12ம் வகுப்பு மாணவி சுஹாசினி பலத்தடைகளை தாண்டி தேர்வுகளை எழுதி வென்றுள்ளார். அவரை கெளரவிக்கும் விதமாக அவருக்கு ஸ்கூட்டி ஒன்றை கடுக்கா படக்குழுவினர் பரிசாக வழங்கினர். மேலும், பல தலைவர்களின் போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட, வீரமங்கை வேலுநாச்சியாரின் போஸ்டரை ஸ்ருதி நாராயணன் வெளியிட்டு, படத்தை குறித்தும் படக்குழு குறித்தும் பேசி கொண்டு இருந்தார். அப்போது குறுக்கிட்ட பத்திரிக்கையாளர் ஒருவர், வீரமங்கை வேலுநாச்சியார் போஸ்டரை வெளியிட உங்களுக்கு வேறு ஆளே கிடையாதா? அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் அவருடைய போஸ்டரை வெளியிட, இப்படி தவறான முறையில் பிரபலமான ஸ்ருதி நாராயணன் தான் உங்களுக்கு கிடைத்தாரா? என கேள்வி எழுப்ப அந்த இடமே அதகலமானது.

இதனை அடுத்து, தயாரிப்பாளர் விஜய் கெளரிஷ், பெண்ணுரிமையை பேசும் படமாக கடுக்கா படம் உருவாகி வரும் இந்த வேளையில் யாரோ செய்த ட்ராப்புக்குள் மாட்டிக் கொண்ட ஸ்ருதி நாராயணன் குறித்து தவறாக நாம் பேசவேண்டாம் என்றும் தொடர்ந்து அவருக்கு உறுதுணையாக எங்கள் 'கடுக்கா படக்குழு' இருக்கும் என்று அந்த பத்திரிகையாளரின் கேள்விக்கு பதில் அளித்தார். இந்த செய்தி தற்பொழுது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இதையும் படிங்க: யார் காலில் விழுந்தார் நடிகர் அஜித்..? ஆசிர்வாதம் பெற்று ரேஸுக்கு சென்ற AK..!