சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் "கூலி" . இப்படத்தின் தலைப்பை இதற்கு முன்பாக எங்கையோ கேட்டதை போல் இருந்திருக்கும். ஆம், இது ஒரு பிரமாண்ட படத்தின் தலைப்பு தான் கூலி, இப்படத் தலைப்புக்கு சொந்தமான படம், கடந்த 1995ம் ஆண்டு மாணிக்கம் நாராயணன் தயாரிபில், இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சரத்குமார், மீனா, ராதாராவி, ராஜா மற்றும் கவிதா விஜயகுமார் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படமாகும்.

இப்படத்தின் தலைப்பை வைத்து தான் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார். அந்த வகையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள "கூலி" படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிந்து, தற்பொழுது அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்தும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததால் தற்பொழுது 'ஜெயிலர் 2' வில் பிசியாக நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: விஜய் பற்றியும் என்னை பற்றியும் உனக்கு என்ன தெரியும்..! ஆவேசப்பட்ட நடிகை த்ரிஷா..!

இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த- தேவா என்ற கதாபாத்திரத்திலும், அக்கினேனி நாகார்ஜுனா "சைமன்" என்ற கதாபாத்திரத்திலும், உபேந்திரா-'கலீசா என்ற கதாபாத்திரத்திலும், சௌபின் சாகிர் 'தயன் என்ற கதாபாத்திரத்திலும், சத்யராஜ்"இராசசேகர' என்ற கதாபாத்திரத்திலும், சுருதி ஹாசன் "பிரீத்தி" என்ற கதாபாத்திரத்திலும், ஆமிர் கான் சிறப்புத் தோற்றத்திலும், பூஜா ஹெக்டே ஒரு பாடலில் நடன சிறப்புத் தோற்றத்திலும் நடித்து பிரமாண்டமாக இந்த 'கூலி' படம் உருவாகி இருக்கிறது.

மேலும்,கூலி திரைப்படத்தை ரூ.110 கோடி கொடுத்து கலாநிதி மாறனிடம் இருந்து "அமேசான் ஓடிடி தளம்" கைப்பற்றி உள்ளது. இப்படி இருக்க, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி இப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தின் மொத்த பட்ஜெட் என பார்த்தால், சுமார் ரூ.375 கோடியாம். இதில் கதாநாயகனாக நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சம்பளம் மட்டும் ரூ.150 கோடி, இயக்குநரான லோகேஷ் கனகராஜுக்கு சம்பளம் ரூ.50 கோடி, மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள், டெக்னீஷன்கள் என படத்தில் வேலை பார்த்த அனைவரின் சம்பளமும் ரூ.150 கோடி. இதுமட்டுமல்லாமல் படத்தின் ப்ரோமோஷன் மற்றும் பப்லிசிட்டி செலவுகள் மட்டும் ரூ.25 கோடி, எனவே இவை அனைத்தும் மொத்தமாக பார்த்தால் கூலி படத்தின் முழு பட்ஜெட் ரூ.375 கோடி என கூறப்படுகிறது.

இப்படி பல எதிர்பார்ப்புகளை தூண்டியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் சிட்டு பாடல் இன்று வெளியாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக வீடியோ வெளியிடப்பட்டு இருந்தது. இப்படி இருக்க தற்பொழுது இப்படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா திரைப்படமாக வெளிவரவிருக்கும் இந்த 'கூலி' திரைப்படத்திற்கு ஹிந்தியில் 'Majadoor' என தலைப்பு வைத்துள்ளனர் படக்குழுவினர். இதனை பார்த்த ரஜினி ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர். ஏன்..? "கூலி" என்கிற தலைப்பை ஹிந்தியில் மாற்றவேண்டும் அப்படியே வைக்கலாமே... நன்றாக தானே உள்ளது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இப்படி இருக்க, படக்குழு தரப்பில் ஏற்கனவே 1983ம் ஆண்டு நடிகர் அமிதாப் பச்சன் நடிப்பில் ஹிந்தியில் வெளியான படம் பெயரும் 'கூலி' என்றும் கடந்த 2020-ம் ஆண்டு நடிகர் வருண் தவான் நடிப்பில் வெளியான படம் பெயரும் "கூலி நம்பர் 1" என்பதால் மாற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சவுரவ் கங்குலி பயோபிக் படத்தில் இந்த நடிகரா...! வியப்பில் ரசிகர்கள்...!