அது என்னவோ தெரியவில்லை என்ன மாயமோ புரியவில்லை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படம் என்றாலே அந்தப் படத்திற்கு மவுஸ் அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக சார்கார் திரைப்படத்தில் நடிகர் விஜயை பார்த்து ராதா ரவி, எங்கள் தலைவர் முகம் எங்கள் பிராண்ட் என்று சொல்வதைப் போல, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படங்களை எடுத்தால் அவருடைய படத்தில் அவருடைய முகமே எங்களது பிராண்ட் என ரஜினியின் ரசிகர்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்து இருக்கின்றனர்.

சினிமா துறையில் இத்தனை வருட காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படங்களை அதிகமாக சம்பாதித்தாரோ அல்லது பணங்களை அதிகமாக சம்பாதித்தாரோ தெரியாது. ஆனால் இத்தனை வருட கால சினிமா வாழ்க்கையில் அவர் கோடான கோடி ரசிகர்களை சம்பாதித்து இருக்கிறார் என்பதே உண்மை. அவரது சில படங்கள் தோல்வியின் அருகிலே சென்றாலும் வசூலில் ஒருநாளும் சரிந்தது கிடையாது. அதனால் தான் ஜெயலர் திரைப்படத்தின் போது இசையமைப்பாளர் அனிரூத், உன் ஆளும்ப பார்த்தவன்... உன் அப்பன் விசில கேட்டவன்... உன் மகனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன்... என் பெயரை தூக்க 100 பேரு... பட்டத்த பறிக்க கோடி பேரு... குட்டி செவுத்த எட்டிப் பார்த்தா...உசுர கொடுக்க கோடி பேரு... என ரஜினி குறித்து ஒரு தீவிர ரசிகன் எழுதி இருக்கும் பாட்டை போலவே இப்பாடல் வரிகளை வைத்து இசையமைத்து அசத்தியிருப்பார் அனிரூத்.
இதையும் படிங்க: என்னடா இது ரஜினிபடத்துக்கு வந்த சோதனை..! "கூலி" படத்தின் டைட்டிலை மாற்றிய படக்குழு..!

அந்த அளவிற்கு ரஜினிகாந்தின் பிறந்தநாள் என்றாலோ அவரது திரைப்படம் என்றாலோ எது வெளி வந்தாலும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவே இருக்கிறது. தனது ஒரு கை அசைவினால் தனது ரசிகர்களை உள்ளம் கையில் வைத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பது உண்மையே. இப்படிப்பட்ட ரஜினிகாந்தின் அடுத்த அடுத்த திரைப்படங்களுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வெளியாக இருப்பது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இருக்கிறது. அந்த வகையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள "கூலி" படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிந்து, தற்பொழுது அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்தும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததால் தற்பொழுது 'ஜெயிலர் 2' வில் பிசியாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த- தேவா என்ற கதாபாத்திரத்திலும், அக்கினேனி நாகார்ஜுனா "சைமன்" என்ற கதாபாத்திரத்திலும், உபேந்திரா-'கலீசா என்ற கதாபாத்திரத்திலும், சௌபின் சாகிர் 'தயன் என்ற கதாபாத்திரத்திலும், சத்யராஜ்"இராசசேகர' என்ற கதாபாத்திரத்திலும், சுருதி ஹாசன் "பிரீத்தி" என்ற கதாபாத்திரத்திலும், ஆமிர் கான் சிறப்புத் தோற்றத்திலும், பூஜா ஹெக்டே ஒரு பாடலில் நடன சிறப்புத் தோற்றத்திலும் நடித்து பிரமாண்டமாக இந்த 'கூலி' படம் உருவாகி இருக்கிறது.

மேலும்,கூலி திரைப்படத்தை ரூ.110 கோடி கொடுத்து கலாநிதி மாறனிடம் இருந்து "அமேசான் ஓடிடி தளம்" கைப்பற்றி உள்ளது. இப்படி இருக்க, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி இப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தின் மொத்த பட்ஜெட் என பார்த்தால், சுமார் ரூ.375 கோடியாம். இதில் கதாநாயகனாக நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சம்பளம் மட்டும் ரூ.150 கோடி, இயக்குநரான லோகேஷ் கனகராஜுக்கு சம்பளம் ரூ.50 கோடி, மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள், டெக்னீஷன்கள் என படத்தில் வேலை பார்த்த அனைவரின் சம்பளமும் ரூ.150 கோடி. இதுமட்டுமல்லாமல் படத்தின் ப்ரோமோஷன் மற்றும் பப்லிசிட்டி செலவுகள் மட்டும் ரூ.25 கோடி, எனவே இவை அனைத்தும் மொத்தமாக பார்த்தால் கூலி படத்தின் முழு பட்ஜெட் ரூ.375 கோடி என கூறப்படுகிறது.

இந்த சூழலில் படம் இன்னும் வெளியாக வில்லை என்ற போதிலும் ரஜினியின் இந்த கூலி திரைப்படத்தை ரூ.110 கோடி கொடுத்து கலாநிதி மாறனிடம் இருந்து "அமேசான் ஓடிடி தளம்" கைப்பறியுள்ளது. இந்த நிலையில், தற்பொழுது கூலி படத்தின் வெளிநாட்டு உரிமம் ரூ. 81 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. இப்படி இருக்க, இதுவரை தமிழ் சினிமாவிலிருந்து வெளிவந்த திரைப்படங்களில் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வெளிநாட்டில் ஒரு படத்தை வாங்கியது இல்லை. இதன்மூலம் ரஜினி படம் மாபெரும் சாதனையை படைத்துள்ளது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் படத்துக்கு செலவு பண்ண முழு பணத்தையும் இப்பவே எடுத்துட்டாரே தயாரிப்பாளர் என பெருமையாக பேசி வருகின்றனர்.
இதையும் படிங்க: சீக்கிரம் செத்துடுவீங்க.. போதை நல்லா இருக்கும் ஆனா.. நடிகை அம்பிகா காட்டமான பேச்சு..!