“அட்டகத்தி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தினேஷ். தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கட்டி இழுத்த இவர், தொடர்ந்து தனது திரைபயணத்தில் பல்வேறு திருப்பங்களையும், சவால்களையும் எதிர்கொண்டுள்ளார். இப்போது, அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையின் சில மிக முக்கியமான தருணங்களை பகிர்ந்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறிய சில உரைகள், இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. இப்படி இருக்க தனது கடந்த காலம் குறித்து பேசும்போது, தினேஷ் கூறியவை உணர்ச்சி மிக்கவையாகவும், எளிமையுடனும் இருந்தன.
அதன்படி, "சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எனக்கு கூச்ச சுபாவம் நிறைய இருந்தது. இதனாலேயே கல்லூரி முடித்த பிறகும், வேலைக்குச் சேராமலே இருந்துவிட்டேன். நன்றாக பேசக்கூட தெரியாது. நெருக்கமான சுற்றமும் இல்லை” என் இவ்வாறு ஆரம்பித்த அவர் பேச்சு, இன்று ஒரு நடிகராக தனக்கென ஒரு நிலையை உருவாக்கியதற்கான பின்புலப் பயணத்தை வெளிப்படுத்தியது. மேலும் தினேஷ், ஒரு சாதாரண பின்னணியிலிருந்து வந்தவர். திரைக்கலைகள் பற்றிய அறிவும், பெரிய கனெக்ஷன்களும் இல்லாத நிலையில், சினிமா உலகம் என்பது மிகவும் தொலைவாகத் தோன்றியதாக அவர் கூறியிருக்கிறார். அதை பற்றி தெரிவிக்கையில் "பல இடங்களிலும் வாய்ப்பு கேட்டு அலைந்தேன். சில நேரங்களில் பழிவாங்கும் போல் நடந்தவர்கள் இருந்தார்கள். ஆனால் சிலரின் நம்பிக்கையால் தான், இன்று நான் இங்கே இருக்கிறேன்" என்றார். அவருடைய இந்த வார்த்தைகள், சினிமா உலகிற்கு வெளியே உள்ள புதியவர்களின் மனநிலையை பிரதிபலிக்கின்றன. தினேஷின் முதல் திரைப்படம் அட்டகத்தி. பா.ரஞ்சித் இயக்கத்தில், சென்னை பக்கத்து பையனின் உண்மை குணங்களுடன் படமாகியிருந்த இந்த படம், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பின்னர், விசாரணை, ஒரு நாள் கூத்து, அனேதி, இரண்டாம் காலம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தாலும், அவருடைய நடிப்பை மீண்டும் வலுவாக நம்ப வைத்த படம் “லப்பர் பந்து”. இதனை குறித்து அவர் பேசுகையில், “லப்பர் பந்து படம் எனக்கு ஒரு ரீஎன்ட்ரி மாதிரி. அந்த கதாபாத்திரம் நான் வாழ்ந்தது போலவே இருந்தது. அதனால் தான் அந்த படத்திற்கு பிறகு மீண்டும் அட்டகத்தி தினேஷ் என்று கூற ஆரம்பித்தார்கள்” என்றார்.

அத்துடன் தினேஷ் சிறப்பாக நடித்த ஒரு முக்கியமான படம் “குக்கூ”. இந்த படத்தில் பார்வையிழந்தவராக நடித்ததன் மூலம், தனது திறமையை நிரூபித்தார். அதனை குறித்து அவர் பேசுகையில், “கேமராவை பார்த்தாலே சிரிப்பு வராது. நடிக்கத்தான் முடியாது போல தோன்றும். ஆனால் ‘குக்கூ’ படத்தில் நடித்த பின், என்னுடைய நடிப்பில் மாற்றம் வந்தது. அந்த படம் எனக்குள்ள தைரியத்தை கொடுத்தது.. மேலும் நாம் சம்பாதிக்க வேலை செய்கிறோம். ஆனால் வாழ்ந்துவிட வேண்டும் என்றால் அதைத் தவிர வேறென்ன இருக்கிறது என்பதை உணர வேண்டும்.
இதையும் படிங்க: 5 வருஷ லவ்-மா..அப்படியெல்லாம் விட முடியாது..! காதல் கதையை போட்டுடைத்த நிவேதா பெத்துராஜ்..!
சினிமாவும் ஒரு வேலை தான். ஆனால் வாழ்க்கை என்பது நம் தன்மையை நாம் ஏற்றுக்கொள்வதில்தான் இருக்கிறது. முக்கியமாக லப்பர் பந்து பின் 100 கதைகள் கேட்டிருக்கிறேன். ஆனால் அதில் எதுவுமே அமையவில்லை. சில கதைகள் ஆர்வமில்லாமல் சொல்லப்பட்டன. சில கதைகள் நன்கு இருந்தாலும், அது எனக்கு சரியாக போகவில்லை. எனவே எனக்கு பிடிக்கவில்லை என்றாலும், அதைச் சொல்லும் போது சிரித்தபடி அமைதியாகவே சொல்வேன். யாருக்கும் வேதனை ஏற்படக் கூடாது. யாருடைய கனவையும் நாங்கள் விளையாட்டு விஷயமாகக் கூட யோசிக்க கூடாது” என்றார். இந்த சூழலில் பா. ரஞ்சித், வெற்றிமாறன், கௌதம் கார்த்திக், மன்சி ஹீரோயின்கள் என திரையுலகத்திலிருந்து தினேஷின் நடிப்பிற்கு தொடர்ந்து வரவேற்பும் ஆதரவும் உண்டு. அவருடைய படங்கள் சிறந்த விமர்சனங்களை பெற்றுள்ளன. புதுவிதமான கதாபாத்திரங்கள், நிகழ்வுகளின் மீதான நம்பிக்கை, பட்ஜெட்டுக்கு உட்பட்ட கலை, இவைதான் தினேஷ் தேர்ந்தெடுக்கும் படங்களை உருவாக்கும் விதிகள்.

ஆகவே நடிகர் தினேஷ், தனது திறமையையும், தவறுகளை ஒப்புக்கொள்ளும் மனநிலையையும், அடைந்த வெற்றிகளுக்குப் பிறகும் நிலைத்திருக்கிறார் என்பதையும் இந்த பேட்டியின் வாயிலாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார். சினிமா என்பது ஒரு பயணம்தான். அதில் விழுந்தாலும் எழும் மனநிலை மிக முக்கியம்.
இதையும் படிங்க: நடிகர் பிரேம்ஜி வீட்டில் விஷேசம்...! 'அப்பா' ஆக போகிறாரா..? இணையத்தில் அலைமோதும் வாழ்த்து மழை..!