தமிழ் திரையுலகம் மட்டும் அல்லாது இந்திய திரையுலகம் மற்றும் அனைத்து மக்களின் உள்ளங்களிலும் கொடைவள்ளலாகவும், நடிகராகவும், நடன இயக்குநராகவும், இருப்பவர் தான் ராகவா லாரன்ஸ். பார்க்க ஆள் கருப்பாக இருந்தாலும் கொடுப்பதிலும் நடிப்பதிலும் வெள்ளை உள்ளம் கொண்டவர். அப்படி பட்ட ராகவா லாரன்ஸ் 1993 ஆம் ஆண்டு நடன இயக்குனராக திரையுலகில் தோன்றினார். பிறகு நடிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட லாரன்ஸ், கிடைத்த சிறிய வேடங்களில் நடித்து வந்தார். அதன் பின், 1998 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். பின் 2004 ஆம் ஆண்டு இயக்குநராக புதிய அவதாரம் எடுத்த லாரன்ஸ், நாகார்ஜுனா மற்றும் ஜோதிகாவை வைத்து 'மாஸ்' என்ற தெலுங்கு திரைபடத்தை இயக்கினார்.

இப்படி இருக்க, தமிழில் 'முனி' என்கின்ற பேய் படத்தை இரண்டாவது முறை இயக்கி மாபெரும் வெற்றி கண்டார். அதன்பின் காஞ்சனா ஒன்று, இரண்டு, மூன்று எனும் பாகங்களை தனித்தனியாக பிரித்து வித்தியாசமான பேய்களை காண்பித்து தனக்கு என ஒரு அடையாளத்தை கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் உருவாக்கினார். பேய் படங்கள் பார்க்க பயமாகவும் பயங்கரமாகவும் இருக்கும் என்று பலரும் கூறி வந்த நிலையில், பேய் படத்தையும் காமெடியாக சித்தரிக்கலாம் என்பதை காண்பித்தவர் தான் நம்ப ராகவா லாரன்ஸ் என மக்களையே பேச வைத்தவர்.
இதையும் படிங்க: என்னயா படம்.. பெயர் எங்கே..? அடுக்கடுக்காக குறை சொன்ன கங்கை அமரன்..! கடுப்பில் முறைத்த இயக்குனர்..!

ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தில் கண்டிப்பாக, கோவை சரளா முதல், பல முன்னணி நடிகர்கள், சின்னத்திரை நடிகர்கள் என பலரும் இடம்பெற்று இருப்பார்கள். அவர்களின் வரிசையில், ராகவா லாரன்ஸ் படத்தில் எப்பொழுதும் சிறப்பு பாடல் ஒன்று இருக்கும். அதில் அவர் தனது பிள்ளைகளாக என்றும் நினைத்துக் கொண்டிருக்கும் கைவிடப்பட்டவர்களையும், உடல் உறுப்பு குறைபாடு உள்ளவர்களுக்கும் வாய்ப்பளித்து அவர்களது திறமைகளை உலகிற்கு வெளிப்படுத்துவார்.

இப்படிப்பட்ட ராகவா லாரன்ஸ் இதுவரை, பரவசம், பார்த்தாலே பரவசம், அற்புதம், ராஜபூழு, மாஸ், ஸ்டைல், லட்சியம், டான், டான் நம்பர் 1, முனி, பரது, பாண்டி, ராஜாதி ராஜா, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், பெண் சிங்கம், ஆரவாரம், காஞ்சனா, உயிரெழுத்து, நண்பன், கதை திரைக்கதை வசனம் இயக்கம், காஞ்சனா 2, மொட்டை சிவா கெட்ட சிவா, சிவலிங்கா, கால பைரவா, நாகா, காஞ்சனா 3, லக்ஷ்மி, ருத்ரன், ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ், சந்திரமுகி 2, புல்லர்ட் போன்ற தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து உள்ளார். மேலும், ஹண்டர், பென்ஸ், துர்கா, காஞ்சனா 4, அதிகாரம் போன்ற படங்கள் இன்னும் இவரது நடிப்பில் வரவிருக்கிறது.

இந்த நிலையில், தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ், அவரது மகன் மற்றும் தாயுடன் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர். அங்கு லாரன்ஸை பார்த்த மக்கள் தங்களது வாழ்க்கையின் குறைகளை அவரிடம் மனதார சொல்லிவிட்டு நிம்மதியாக சென்றனர். சிலர் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் 'பென்ஸ்' படத்திலும் 'காஞ்சனா 4'படத்திலும் ராகவா லாரன்ஸ் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரஜினி அரசியலுக்கு வருவது உண்மைதான்..! லதா ரஜினிகாந்த் பகீர் பேட்டி..!