பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக, இந்திய ராணுவம் நள்ளிரவில் காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு தளங்கள் மற்றும் பயங்கரவாத முகாம்கள் அனைத்தின் மீதும் அதிரடி தாக்குதல் நடத்தியது. "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தத் அதிரடி தாக்குதலில், பாக்கிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டதாகவும், அதில் சுமார் 30ற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் மத்திய அரசு தகவல்கள் தெரிவித்தது.

இந்த தாக்குதலை பற்றி குறிப்பிடுகையில் 9 இடங்கள் தாக்கப்பட்டது. ஆனால் ஒரு பாகிஸ்தான் மக்களையும் இந்தியா தாக்காமல் பயங்கரவாதிகளின் கூடாரங்களையும் அவர்களது பயிற்சி இடங்களை மட்டும் குறிவைத்து துல்லியமான ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது இந்திய ராணுவம். மேலும், இந்திய எல்லையில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தை கடந்து இந்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது இந்தியா. குறிப்பாக இந்த தாக்குதலில் பகவல்பூரில் உள்ள ஜெய்ஸ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பின் தலைவரது வீடும் பயிற்சியகமும் நான்கு ட்ரோன்களின் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க: திருப்பி அடிச்சா தாங்க மாட்ட..! பாக். தாக்குதலுக்கு பார்த்திபன் காட்டமான பதிவு..!

இந்த தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைப் பகுதிகளில் இரவு நேரத்தில் பாக்கிஸ்தான் ட்ரோன்கள் அத்துமீறி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் இந்த மோதல் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மோசமான சூழல் உருவாகி வருகிறது. மேலும், பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை பகுதிகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை அடுத்து, இந்தியாவில் உள்ள பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், ஜம்மு, காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் இந்திய விமானப்படைத் தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன.

ஆனால் இந்திய விமானப்படை அதற்கு கொஞ்சமும் இடம் கொடுக்காமல் தகுந்த பதிலடி கொடுத்து, பாகிஸ்தான் ட்ரோன்களை நடுவானிலேயே சுட்டு வீழ்த்தி உள்ளது. இந்த தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாத இந்திய ராணுவம் உடனே, பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி, சியால்கோட் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இப்படியான இந்த பதற்றமான சூழலில் இந்தியா மீது உள்ள அதீத பாசத்தால் கொதித்தெழுந்த திரை பிரபலங்கள் வரிசையாக தங்களது பாராட்டுகளை பதிவிட்டு வந்தனர்.
அதன்படி சிவகார்த்திகேயன், "இது தான் இந்திய ராணுவத்தின் முகம்.. ஜெய் ஹிந்த்" எனவும், மலையாள நடிகர் மம்முட்டி " மீண்டும் நிரூபிக்கப்பட்டது, தேசம் அழைக்கும்போது, #இந்திய இராணுவம் பதிலளிக்கிறது. உயிர்களைக் காப்பாற்றியதற்கும் நம்பிக்கையை மீட்டெடுத்ததற்கும் நன்றி. நீங்கள் தேசத்தைப் பெருமைப்படுத்தி உள்ளீர்கள். ஜெய் ஹிந்த்!" எனவும்

நடிகர் மோகன்லால் " நாங்கள் சிந்தூரத்தை ஒரு பாரம்பரியமாக மட்டுமல்ல, எங்கள் அசைக்க முடியாத உறுதியின் அடையாளமாகவும் அணிந்தோம். எங்களுக்கு சவால் விடுங்கள், நாங்கள் அச்சமின்றி, எப்போதும் இல்லாத அளவுக்கு வலிமையாக எழுவோம். இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் ஒவ்வொரு துணிச்சலான இதயத்திற்கும் வணக்கம். உங்கள் துணிச்சல் எங்கள் பெருமையைத் தூண்டுகிறது. ஜெய் ஹிந்த்!" எனவும் நடிகை கங்கனா "ஆபரேஷன் சிந்தூர்: பயங்கரவாதத்திற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற தலைப்பை வைத்து, இந்திய ஆயுதப்படைகள் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற துல்லியமான திட்டத்தைத் தொடங்கின; பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு & காஷ்மீர் முழுவதும் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. சாட்சிகள் இதோ" எனவும் நடிகர் பிரகாஷ்ராஜ், "வணக்கம் செலுத்துகிறேன்.. இந்தியா ஒருபோதும் பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ளாது.. எனவும் பதிவிட்டு இருந்தனர். இன்னும் பல பிரபலங்கள் தங்களது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், "போர் வந்தால் தனக்கோ தன் குடும்பத்திற்கோ, எந்தவொரு பாதிப்பும் நடக்காது எனும் ப்ரிவிலேஜுடன் வாழும், பொறுப்பற்றவர்களின் முகம் இது. கொஞ்சமாவது பொறுப்புடன் பேசுங்கள் . போர் அறைகூவல் விடுப்பதும், போரை கொண்டாடுவதும், உங்கள் தேசபக்தியை காட்ட பயன்படுத்துவது, அயோக்கியத் தனத்தின் உச்சம்." என பலர் சமூக வலைதளத்தில் தங்கள் விமர்சனங்களை திரை பிரபலங்களுக்கு எதிராக பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மனைவிமார்களுடன் நடுவில் மாற்றி நின்ற அஜித்- சிவா... ஆபாசப்படுத்திய திமுக பேச்சாளர்..!