காஷ்மீர் தாக்குதலில் இறந்தவர்களுக்காக களமிறங்கியுள்ள இந்திய ராணுவம் தங்களது முழு பலத்தையும் இந்த முறை காண்பித்து வருவதால் பாக்கிஸ்தான் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறி வருகிறது. ஏப்ரல் 22ம் தேதி நடிப்பெற்ற இந்த தாக்குதலில் இந்திய ராணுவ கடற்படை வீரரும் இறந்ததால் இந்திய ராணுவம் தீவிரவாத அமைப்பை அடியோடு முடித்து கட்ட நினைத்தது. ஆனால் இதனை பார்த்து பயந்து போன பாக்.ராணுவம் மற்றும் அதிகாரிகள் இந்த பிரச்சனைக்கும் எங்களுக்கு எந்திவித சம்மந்தமும் இல்லை ஆதலால் எந்த சம்மந்தமும் இல்லாத எங்களை இந்தியா சீண்டினால் நாங்களும் பதிலுக்கு எங்கள் தாக்குதலை கொடுப்போம் என தெரிவித்து வந்தது.

இந்த சூழலில், இந்திய ராணுவத்தின் அமைதியால் சற்று குழப்பத்தில் இருந்தனர் பாகிஸ்தான் ராணுவத்தினர். அவர்கள் நினைத்ததை போல இந்திய ராணுவம், தான் உறுதிப்படுத்திய 9 பயங்கரவாத அமைப்பின் இடங்களையும் குறிவைத்தது. பின் எப்படி தாக்குதல் நடத்தலாம் தரைவழியாக நடத்தலாமா அல்லது வான்வழி தாக்குதல் நடத்தலாமா. 200 கிலோமீட்டர் தூரம், இந்தியாவிலிருந்து எப்படி என அனைத்தையும் யோசித்து முடிவு செய்த பின்னர் ராணுவ அதிகாரிகள் நள்ளிரவு நேரத்தில் பிரதமரை சந்தித்து "இந்தியாவில் இருந்தபடியே ட்ரோன் வழி தாக்குதல் நடத்தி அழிக்கலாம்" என சொல்ல, பிரதமர் மோடியும் ஒப்புதல் அளித்து கையெழுத்து போட, அதன் பின் ராணுவ வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு பின் தாக்குதல் 1.44 மணியளவில் அரங்கேற்றப்பட்டது. இந்த தாக்குதலை துல்லியமாக கணக்கிட்ட இந்திய ராணுவ அதிகாரிகள் பொதுமக்களுக்கும் பாக்கிஸ்தான் ராணுவ தலங்களுக்கும் எந்த சேதமும் இல்லாமல் தீவிரவாத அமைப்புகளை மட்டுமே குறிவைத்து அழித்துள்ளது.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்: சர்தார் ஜி-3 இந்தியப் படத்தில் தூக்கியடிக்கப்பட்ட பாக்., நடிகை..!

இப்படி பாக்கிஸ்தான் ராணுவத்திற்கும் அவர்களது மக்களுக்கும் எந்த வித சேதமும் இந்திய ராணுவம் செய்யாத வகையில், இந்திய ராணுவத்தின் மீது தனது தாக்குதலை தொடங்கியுள்ளது பாகிஸ்தான் ராணுவம். அதன்படி, இந்திய எல்லைப் பகுதிகளில் இரவு நேரத்தில் பாக்கிஸ்தான் ட்ரோன்கள் அத்துமீறி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் இந்த மோதல் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மோசமான சூழல் உருவாகி வருகிறது. மேலும், பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை பகுதிகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனை அடுத்து, இந்தியாவில் உள்ள பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், ஜம்மு, காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் இந்திய விமானப்படைத் தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. ஆனால் இந்திய விமானப்படை அதற்கு கொஞ்சமும் இடம் கொடுக்காமல் தகுந்த பதிலடி கொடுத்து, பாகிஸ்தான் ட்ரோன்களை நடுவானிலேயே சுட்டு வீழ்த்தி உள்ளது. இந்த தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாத இந்திய ராணுவம் உடனே, பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி, சியால்கோட் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.

இப்படிப்பட்ட பதற்றமான இந்த சூழலில், இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் "பாக்கி இல்லாமல் பாக்கிஸ்தான் சீர்குலைக்கப் படலாம் -இந்தியாவின் பழிக்குப் பழி படலத்தில் பதுங்குக் குழியில் பாக். பிரதமர் ஒதுங்கி ஓரோரமாய் குந்திகினு இருப்பதாக ஒரு தகவல். போர் முறையுடன் அனுகும் நம் இந்தியாவை எதிர்கொள்ள இயலாத பாக், நம் பொதுமக்களுக்கு சேதம் விளைவிக்கும் வன்முறை தாக்குதலில் ஈடுபடுகிறது அதை நம் வான்வெளி அதிரடி yes! S -400 வானிலேயே சுட்டு வீழ்த்தி (காறி துப்பியது போல்) நெருப்பு எச்சிலாய் தரையில் வீழ்த்துவதை மொபைல் திரையில் பார்க்கும் போதே பரவசம் ஆகிறது. ஆயினும் உலக நாடுகள் ஒன்றினைந்நு பாக் அராஜகத்திற்கு தீர்வு சொல்லி மக்களின் அமைதியை உறுதி செய்ய வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சண்டைய ஆரம்பிச்சுட்டீங்க... ஆனா மக்கள மறந்துட்டீங்க... நடிகை சிம்ரன் பேச்சு..!