ரூ.100 கோடி பட்ஜெட்டில், ஏ.வி.ஏ என்டர்டெயின்மென்ட் மற்றும் 24 பிரேம்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், ஸ்டீபன் தேவாசி இசையில், பிரபாஸ், மோகன்லால், விஷ்ணு மஞ்சு, அக்ஷய் குமார், காஜல் அகர்வால், பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் தான் கண்ணப்பா.

இப்படத்தில், திண்ணு கண்ணப்பர் கதாபாத்தில் விஷ்ணு மஞ்சுவும், இளம் தின்னடு கதாபாத்திரத்தில் அவ்ராம் பக்த மஞ்சுவும், மகாதேவ சாஸ்திரி கதாபாத்திரத்தில் மோகன் பாபுவும், நாதநாடுடாக கதாபாத்திரத்தில் ஆர்.சரத்குமார், பன்னகா கதாபாத்திரத்தில் மதுவும், கம்படு கதாபாத்திரத்தில் முகேஷ் ரிஷியும், கவ்வராஜா கதாபாத்திரத்தில் பிரம்மஜியும், வீரா கதாபாத்திரத்தில் கருணாஸும், பிலாகா கதாபாத்திரத்தில் பிரம்மானந்தம் ஆகியோரும் நடித்துள்ளனர். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது.
இதையும் படிங்க: CODE WORD மர்மம்? - சைபர் க்ரைம் கைக்குப் போன கிருஷ்ணாவின் செல்போன்... அடுத்தடுத்து சிக்கப்போவது யார்?

இந்த படம் தற்பொழுது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி, ஏற்கனவே இந்த கண்ணப்பா படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இத்திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாகவும் பிரம்மிப்பாகவும் இருக்கிறது என தனது முதல் கருத்தை தெரிவித்தார். இப்படி இருக்க இத்திரைப்படத்தை குறித்துப் பார்த்தால், நியூசிலாந்தில் படமாக்கப்பட்ட இந்த கண்ணப்பா திரைப்படம் மிகப்பெரிய அளவிற்கு பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என பலரும் தங்களது கருத்துக்களை தற்பொழுது தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பிரபல காலஹஸ்தி கோவிலுக்கு செல்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக கண்ணப்பர் கோவிலுக்கு சென்று வந்தே தீருவர்.

இப்படி இருக்க வேடர் குளத்தைச் சேர்ந்த கண்ணப்பா, சிவலிங்கத்தின் கண்ணில் ரத்தம் வழிவதை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாமல் தனது கண்களையே பிடுங்கி லிங்கத்துக்கு வைத்து தன்னுடைய பக்தியை வெளிப்படுத்தி இருப்பார் என பல புராணங்களின் கதைகளை நாம் படித்து இருப்போம். அதையே திரைப்படமாக எடுத்தால் எப்படி இருக்கும் என யோசித்த இயக்குனர் இத்திரைப்படத்தில் கண்ணப்பாவாக விஷ்ணு மஞ்சுவை நடிக்க வைத்திருக்கிறார். ஆனால் இப்படத்தில் விஷ்ணு மஞ்சு ஏதோ நடித்திருப்பார் என பார்த்தால் அவர் படத்தில் நடிக்காமல் கண்ணப்பாவாகவே வாழ்ந்து இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

புராணக் கதைகளில் சொல்வதைப் போலவே கிளைமாக்ஸில் தனது கண்களை அம்புகளை வைத்து பிடுங்கி எடுக்கும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களை மனம் கலங்க செய்த நிகழ்வாகவே இருந்தது. மேலும் அவரது நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். சரி, விஷ்ணு மஞ்சு தான் தன்னுடைய கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார் என பார்த்தால் இத்திரைப்படத்தில் சிவனாகவே நடித்த பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் தன் நடிப்பில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். மேலும் காஜல் அகர்வால் பார்வதி தேவியாக வந்த பொழுது தியேட்டரில் ஆரவார சத்தங்கள் பறந்தது. மேலும், இத்திரைப்படத்தில் சிறப்பு காட்சியில் கேமியோ ரோலில் வந்த மோகன்லால் தனது பங்கிற்கு வந்த சில நிமிடங்களிலேயே தன்னுடைய பாராட்டுகளை அள்ளிச் சென்றார்.

குறிப்பாக இத்திரைப்படத்தில் ருத்ரா எனும் கதாபாத்திரத்தில் தோன்றி இருப்பார் நடிகர் பிரபாஸ். 20 நிமிட காட்சிகளில் தோன்றினாலும் படத்தை மிகவும் பலமாக்கி சென்றவரே இவர் தான் எனக் கூறுகின்றனர். காரணம் சிவனுடைய திருவிளையாடலில் கண்ணப்பாவை சோதிக்க அனுப்பப்பட்ட நபராகவே இருப்பார் பிரபாஸ். அவரைக் குறித்து பல விமர்சனங்கள் பாசிட்டிவாகவே கிடைத்திருக்கிறது. இப்படி படங்கள் அட்டகாசமாக இருக்கிறது என்று சொன்னாலும் ரூ.100 கோடிக்கு மேல் பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும்

இப்படம் சீஜியில் ஹாலிவுட்டை மிஞ்ச நினைத்தாலும் அதன் பக்கத்தில் எட்ட கொஞ்சம் சிரமமாகவே இருக்கிறது என்றே கூறலாம். அந்த வகையில் கண்ணப்பா படத்தில் சில காட்சிகளில் சீஜி குறைகள் இருக்கத்தான் செய்கிறது என நெட்டிசன்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருவதுடன் அந்த சிறு சிறு காட்சிகள் சீஜ குறைபாடாக இருந்தாலும் நடிகர்களின் நடிப்பால் அவை அனைத்தும் மறைந்து போய்விட்டது என்றும் பாராட்டி வருகின்றனர்.

தற்பொழுது தெலுங்கு சினிமாவில் இதுவரை ராமர், சிவன், ஹனுமான் என ஏகப்பட்ட கடவுள்களின் பிரம்மாண்ட படங்களை நாம் பார்த்திருப்போம். அந்த வரிசையில் தற்பொழுது கண்ணப்பா படமும் சிறந்த பக்தி படமாக இருப்பதாக ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை மனமுகர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் குபேரா திரைப்படம் தற்பொழுது ரூ.100 கோடியை மிஞ்சி உள்ள நிலையில் இந்த வாரத்தில் இத்-திரைப்படம் குபேராவின் பாக்ஸ் ஆபிஸை மிஞ்சுமா என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: ஆரஞ்சு கலர் பாவாடை சட்டையில் ஆளை மயக்கும் நடிகை அதுல்யா ரவி..!