தற்பொழுது பல தொலைக்காட்சிகள் நம் மத்தியில் வந்தாலும் ஒவ்வொரு வார இறுதியிலும், " இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக.. திரைக்கு வந்து சில மாதங்களை ஆன.. புத்தம் புதிய மெகா ஹிட் திரைப்படம்.." என்ற வார்த்தைகளை கேட்டால் நம் அனைவருக்கும் உடனே நினைவுக்கு வரும் தொலைக்காட்சி தான் சன் தொலைக்காட்சி.

இந்த சன் குடும்பத்தில் பல சேனல்கள், வானொலி, பத்திரிக்கை, சன் நெக்ஸ்ட் ஆஃப், படத்தின் தயாரிப்பு, கிரிக்கெட் என பல பிஸ்னஸ்களை தன் கையில் வைத்துள்ள இந்நிறுவனத்தின் தலைவர் தான் கலாநிதி மாறன். இப்படிப்பட்ட இவருக்கு மகள் ஒருவர் இருக்கிறார் அவர் பெயர்தான் 'காவியா மாறன்', இவர் தற்பொழுது 'சன்ரைஸ் ஹைதராபாத்' கிரிக்கெட் அணியின் தலைவராக இருப்பவர். இவரைப் போலவே தமிழ் சினிமா மட்டுமல்லாது அனைத்து சினிமாக்களிலும் பல ரசிகர்களை தன் வசம் வைத்திருப்பவர் தான் இசையமைப்பாளர் அனிருத்.

இசைமயமைப்பாளரான அனிருத் ஆரம்பத்தில் தனது இசை பயணத்தை "ஜினகஷ்" என்ற இசைக்குழு பள்ளியில் ஆரம்பித்தார். அதற்கு பின் அவரது 21ம் வயதில் தனுஷின் '3' படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் "போ நீ போ", "why this கொலவெறி" போன்ற பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து சினியுலகில் இவரது பெயர் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் மத்தியில் அடிபட துவங்கியது. இதனை அடுத்து இவர் இசையில் வெளியான "டேவிட்" திரைப்படத்தின் "கனவே கனவே" பாடல் ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகியது. பின்பு மீண்டும் நடிகர் தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான "எதிர்நீச்சல்" திரைப்படத்தில் வந்த அனைத்து பாடல்களுக்கும் இசையமைத்து தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறினார்.
இதையும் படிங்க: "அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை".. விமான விபத்து குறித்து கண்கலங்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா..!

இதுவரை இவர், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம், கத்தி, என்னமோ ஏதோ, மான் கராத்தே, வடகறி, வேலையில்லா பட்டதாரி, ரோமியோ ஜுலியெட், மாரி, நானும் ரௌடி தான், காக்கி சட்டை, தங்க மகன், வேதாளம், ரெமோ, விவேகம், ரம், கோலமாவு கோகிலா (கோ கோ), தானா சேர்ந்த கூட்டம், Mr.லோக்கல், தும்பா, பேட்ட, தனுசு ராசி நேயர்களே, சங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை, சாஹோ, பாவ கதைகள், தாராள பிரபு, பட்டாஸ், தர்பார், பூமி, மாஸ்டர், அனபெல் சேதுபதி, டாக்டர், ஜகமே தந்திரம், சுல்தான், ப்ரின்ஸ், டான், ஆர் ஆர் ஆர் - (இரத்தம் ரணம் ரௌத்திரம்), விக்ரம், பீஸ்ட், எதற்கும் துணிந்தவன், காத்துவாக்குல ரெண்டு காதல், திருச்சிற்றம்பலம், ஜவான், மாவீரன், ஜெயிலர், வீரன், லியோ, வாரிசு, துணிவு, LIC - லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், அமரன், வேட்டையன், அந்தகன், இந்தியன் 2, ஆக்கோ, விடாமுயற்சி போன்ற படங்களுக்கு இசையமைத்தும் பாடல்களை பாடியும் உள்ளார் அனிருத்.

இதுமட்டுமல்லாமல் அடுத்ததாக, ஜெயிலர் 2, கைதி 2, மதராஸி, கூலி, ஜனா நயகன், எஸ் கே 17, இருபத்தியாறு 26 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இப்படி இசையில் வல்லவரான அனிருத்தும் கிரிக்கெட் அணியை தன் கையில் வைத்திருக்கும் காவியா மாறனும் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக டேட்டிங்கில் இருப்பதால் தற்பொழுது இருவரும் திருமணத்திற்கு தயாராகி வருவதாகவும் கூடிய விரைவில் அதற்குண்டான அதிகாரப்பூர்வ தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும் எனவும் இணையத்தில் ஒரு பதிவு வந்திருந்தது. இந்த பதிவானது தற்பொழுது சோசியல் மீடியாக்களில் வேகமாக பரவி வர, அனிருத்தும் காவியா மாறனும் தான் இன்று அனைத்து தளங்களிலும் பேசு பொருளாகி இருக்கின்றனர்.

இப்படி இருக்க இந்த செய்திகளை அறிந்த இசையமைப்பாளர் அனிருத், அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார் அதில் " கல்யாணமா.. எனக்கா? கொஞ்சம் அமைதியா இருங்க நண்பர்களே... தயவு செய்து வதந்திகளை பரப்புவதை நிறுத்திக் கொள்ளுங்கள் " என பதிவிட்டு வெளிவரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: 1000 கோடி பட்ஜெட் நடிகை ராஷ்மிகாவா..! சொல்லவே கூச்சமா இருக்கு.. தனுஷ் பேச்சுக்கு ஹீரோயின் ரியாக்ஷன்..!