சினிமாவில் போதை கலாச்சாரம் அதிகமாக இருப்பதாக தற்பொழுது அனைவராலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. பல நடிகர் நடிகைகள் போதை பார்ட்டிகளை வைத்து தங்களது மகிழ்ச்சியை பெருக்கி கொள்வதாகவும், கதாநாயகிகள் பலரும் தங்களது சருமத்தை மினுமினுக்க செய்யவும், மன அழுத்தம் நீங்கவும், முகத்தில் சோர்வுகள் தெரியாமல் இருக்கவும், பசிக்காமல் இருக்கவும் போதை பொருட்களை அதிகமாக உட்கொள்வதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இன்று பலரும் போதை பொருள் புழக்கம் சினிமாவில் தான் அதிகம் உள்ளது என சொல்ல காரணம் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள பிரபல நடிகரால் தான். இவர் சிக்கிய பின்பு தான் பலரது பார்வையும் தற்பொழுது சினிமா பிரபலங்களின் பக்கம் மாறியுள்ளது. குறிப்பாக சமீபத்தில் யுடியூபரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், சினிமா துறையில் பல நடிகர் மற்றும் நடிகைகள் போதைப் பொருளுக்கு அடிமையாக இருப்பதாகவும், ஆரம்பத்தில் இருந்தே பல நடிகர்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பல நடிகைகளுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து உள்ளதாகவும் பல கிசுகிசுக்கும் தகவல்களை இணையத்தில் கசிய விட்டிருந்தார். இதுவும் தற்பொழுது பூதாகாரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மணிரத்தினம் என் பொண்ணு விஷயத்தில் இப்படி பண்ணுவாருன்னு நினைக்கல..! நடிகை குஷ்பூவின் பதிவு வைரல்..!

இப்படி இருக்க, இப்பொழுது சினிமா துறையினரின் மீது பலரும் குறை சொல்ல காரணம் நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டதே. சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருளை தன்னிடம் வாங்கி பயன்படுத்தியதாக அதிமுக பிரமுகரான பிரசாந்த் தெரிவிக்கையில் அதிரடியாக போலீசார் நடிகர் ஸ்ரீகாந்தை கைது செய்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அதில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர் காவல்துறையினர். மேலும் போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தின் நெருங்கிய நண்பரான நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு உள்ளது என கூறப்பட்ட நிலையில் போலீசார் இந்த வழக்கில் அவரது பெயரையும் லிஸ்டில் சேர்த்தனர்.

இதனை அடுத்து காவல்துறையினர் தன்னை தேடி வருவதை அறிந்து கொண்ட கிருஷ்ணா, தான் தவறு செய்தால் தானே தலைமறைவாக வேண்டும் நான் படப்பிடிப்பில் தானே இருக்கிறேன் என்று சொல்லி அவரே காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின்பு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட பொழுது, நீங்கள் சொல்வதைப் போல நடிகர் ஸ்ரீகாந்த் எனக்கு நெருங்கிய நண்பர்தான் அதை நான் ஒரு பொழுதும் மறுக்க மாட்டேன். ஆனால் நான் எதற்காக போதை பொருளை பயன்படுத்த வேண்டும். எனக்கு ஏற்கனவே இரைப்பை அலர்ஜி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இதயத்துடிப்பும் எனக்கு அதிகமாக இருப்பதால் தற்பொழுது அதற்கான சிகிச்சை மட்டுமே நான் மேற்கொண்டு வருகிறேன்.

இவ்வளவு குறைபாடுகள் உள்ள என்னால் போதை பொருளை பயன்படுத்த முடியாது. மேலும் பிரசாந்திடம் போதை பொருளை நான் வாங்கினேன் எனக் கூறிய பிரதீப்பின் வாக்குமூலம் அனைத்தும் பொய்யே. பிரதிப்பிடம் எனக்கு எந்த விதமான நட்பும் இல்லை தொடர்புமில்லை அதை நான் திட்டவட்டமாக சொல்லுகிறேன். அதுமட்டுமல்லாமல் முதலில் நீங்கள் தேடுகின்ற கிருஷ்ணா நானே கிடையாது என தெரிவித்து இருந்தார்.

இந்த சூழலில் இந்த வழக்கானது தற்பொழுது சூடுபிடித்துள்ள நிலையில், தொடர்ந்து மக்கள், சினிமா துறையினரை அவதூறாக பேசி வருவதுடன் சமூக வலைத்தளம் பக்கம் சென்றாலே அவர்களை குறித்த விமர்சனமும் பெருகி இருக்கிறது. இதற்கு என்ன செய்வது என தெரியாமல் தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் முழித்து வருகின்ற இந்த வேளையில் பிரபல நடிகை குஷ்பூ தனது கருத்தை பகிரங்கமாக தெரிவித்து இருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பூவிடம், சினிமா துறையில் தான் போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்து இருப்பதாக சொல்லுகிறார்களே அது உண்மையா..? என கேள்வி எழுப்பப்பட்டது.

இதனை கேட்டு கோபமான நடிகை குஷ்பூ, " சுமார் 3000 கிலோ போதை பொருள் போலீசாரிடம் சிக்கினால் அது எல்லாமே சினிமா துறையில் தான் பயன்படுத்தப்பட்டது என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது. சினிமா துறையைச் சார்ந்த ஸ்ரீகாந்தும்.. கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்ட உடனே சினிமாவில் போதை பொருள் புழக்கம் அதிகமாகிவிட்டது என்று கதை கட்டி விடுகிறீர்கள். எதுக்கு இதெல்லாம் இதனால் உங்களுக்கு என்ன கிடைக்க போகிறது? இனி அப்படி சொல்லாதீங்க. போதைப் பொருள் புழக்கம் என்பது சினிமாவில் மட்டுமல்ல எல்லா இடத்திலும் தான் இருக்கிறது. சினிமா நடிகர்களும் எல்லோரையும் போன்று சாதாரண மனிதர்கள் தான். அதனால் சினிமா துறையில் நடப்பதை மட்டும் பூதக்கண்ணாடி வச்சு பார்க்காதீங்க.

நன்றாக இருந்த ஒருவர் போதைப் பொருளுக்கு அடிமையாகி விட்டார் என்றால், அவர் எதனால் போதைக்கு அடிமை ஆனார் என்று யோசித்து அந்த பிரச்சனைகளை தீர்க்க என்ன வழி என்பதை மட்டுமே யோசிக்க வேண்டும்.. அதை ஊதி பெருசாக்கி அதில் குளிர்காய கூடாது " என காட்டமாக பேசி சென்றார்.
இதையும் படிங்க: ரூ.2000 கோடி சொத்து.. கார் வேண்டாம் பஸ்ஸே போதும்.. பிரபல நடிகர் மகனின் வாழ்க்கை..! வியப்பில் நெட்டிசன்கள்.!