உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் தினமும் தன் வாழ்வில் மறக்காமல் செய்யும் மூன்று விஷயங்கள் ஒன்று வேலைக்கு செல்வது, இரண்டு நன்றாக சாப்பிடுவது, மூன்று செல்போன் பார்ப்பது. இப்படி ஒரு சூழலை உருவாக்கி அந்த வட்டத்திற்குள் நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையில் காலம் மாற...மாற..நம் கண்முன் டிஜிட்டல் துறையும் வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த அடிப்படையில் பார்த்தால், ஆரம்பத்தில் "டெலிபோன்" உபயோகித்து பின் "நோக்கியா 1100" என்ற செல்போனை பயன்படுத்தி அந்த போனில் வரும் "பாம்பு கேமையே பிரதான விளையாட்டாக" நினைத்து விளையாடிய காலங்கள் எல்லாம் உண்டு. அப்படியே காலம் மாறி உலகத்தில் உள்ள அனைத்தையும் இன்று நம் கைகளில் கொடுத்திருக்கிறது செல்போன்கள்.
இதையும் படிங்க: அஷ்வத் மாரிமுத்து நம்பியதால் நல்லா மாட்டிக்கிட்டேன்.. கயாடு லோஹர் போட்ட ஒற்றை பதிவு..!

டீவியில் படம் பார்க்கும் காலங்கள் போய் தற்பொழுது செல்போன் இருந்தால் போதும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற அளவிற்கு டிஜிட்டல் உலகம் நம்முடைய வாழ்க்கையை மாற்றி இருக்கிறது.

பிறந்த குழந்தை முதல் பள்ளு போன கிழவர் வரை செல்போன் இல்லாமல் இன்று வாழமுடியாமல் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், ஆரம்பத்தில் பணம் எடுக்க வங்கிகளுக்கு சென்ற காலம் மாறி, ஏடிஎம் என்ற தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தினர், பின்பு வரிசையில் நிற்க தயங்கிய மக்களுக்கு வேலையை சுலபமாக மாற்ற "டிஜிட்டல் இந்தியா பரிவர்த்தனை" என்று கொண்டு வந்து, தற்பொழுது செல்போனிலேயே பணத்தையும் அனுப்பலாம் என்ற காலம் மாறிவிட்டது.

இப்படி டெக்னாலஜி வளர்ந்து வரும் சூழலில், ஆட்டோமேட்டிக் கார்கள், ரோபோக்கள், மூலையில் சிப்பை பதித்து கொண்டால் எந்தவிதமான நோயையும் வென்று விடலாம் என்ற வகையில் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள், கேன்சரை குணப்படுத்தும் தொழில்நுட்பம், விண்வெளிக்கு சென்று மீண்டும் திரும்பி வரக்கூடிய அளவிற்கு தொழில்நுட்பங்கள் வளர்ந்து இன்று கணினியின் வளர்ச்சியில் மூழ்கி இருக்கிறது மனித வாழ்க்கை.

இப்படிப்பட்ட தொழில்நுட்பங்கள் எவ்வளவு வளர்ந்தாலும் அதனை மனிதர்கள் மட்டுமே இயக்க கூடிய வகையில் தயார் செய்து வைத்திருந்தனர் முந்தைய அறவியல் ஆராய்ச்சியாளர்கள். ஆனால் தற்பொழுது மனிதனையே மிஞ்சும் அளவிற்கு தொழில்நுட்பத்தை உருவாக்கி, பிரிண்டிங் தொழிலையும், துணிகள் டிசைன் செய்யும் தொழில்களையும், கணினி சார்ந்த அனைத்து தொழில்களையும் மனிதர்களிடம் இருந்து பறித்து வருகிறது இந்த ஏஐ தொழில்நுட்பம்.
இப்படி இருக்க, இறந்தவர்களை மீண்டும் உயிருள்ள காட்சிகளாக கொண்டு வருவது, இறந்தவர்களின் குரலை வைத்து பாட வைப்பது, பேச வைப்பது, பழைய திரைபடங்களை இன்றைய கால டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மீண்டும் வெளியிட வைப்பது என கொஞ்சம் கொஞ்சமாக சினிமா துறையிலும் அடியெடுத்து வைத்து இருக்கிறது ஏஐ.

இனி பிரபலங்கள் இல்லை என்றாலும் அவர்களது குரலை ஏஐ வைத்து கொண்டு வரலாம் என சொல்லி டப்பிங் ஆர்டிஸ்டுகள் வயிற்றில் அடித்தனர். பின் இறந்தவர்கள் குரலை வைத்து பாட வைக்கலாம் என அவர்களது வயிற்றில் அடித்தனர். தற்பொழுது ஹரோயின்கள், நாங்கள் ஹீரோக்களுக்கு குறைந்தவர்கள் இல்லை என்று சம்பளம் உயர்த்தி வரும் சூழலில் இனி நடிக்கும் வேலையையும் ஏஐ இடமே கொடுத்து விட்டால் சம்பளமே தேவையில்லை கரண்டும் கம்யூட்டரும் ஸ்கிரிப்டும் இருந்தால் போதும் என்ற நிலைமையை உருவாக்கி நிரூபித்தும் இருக்கின்றனர் படக்குழுவினர். இந்த தகவலை அறிந்த ஹீரோ ஹீரோயின்கள் அனைவரும் திகைத்துப் போய் இருக்கின்றனர்.

அதன் படி, தற்போது ஹிந்தியில் "நைசா" என்ற படம் தயாராகி வருகிறது. விவேக் அஞ்சலியா இயக்கத்தில் காதல் கதையம்சத்தில் தயாராகி வருகிறது இப்படம். முழுக்க....முழுக்க... ஏஐயில் உருவாக்கிய இப்படத்தில் நாயகன் நாயகியின் காதல் காட்சிகள் மற்றும் அவர்கள் பேசும் வசனங்கள் அனைத்தும் படத்தில் இடம்பெறுகிறது. அதுமட்டுமல்லாமல் ரயில், விமானம், மலை, அருவி, நகரம், கட்டிடங்ள் என அனைத்துக்கும் பலகோடி செலவு செய்யாமல் ஏஐயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதனை பார்த்த சினிமா ரசிகர்கள், இனிமே எல்லா பிரபலங்களும் அரசியலுக்கு வர வேண்டியதுதான், போற போக்கை பார்த்தால் சினிமா பிரபலங்களுக்கும் சம்பளமும் இருக்காது படமும் இருக்காது போல என கமெண்ட்டில் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மஞ்ச காட்டு மைனா "ஸ்னேகா" வடிவில் வந்து போனா...! ஒரே போட்டோ ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்..!