கோலிவுட் மற்றும் பாலிவுட் நடிகர்களில் தங்களுக்கு பிடிப்பதை செய்யும் நடிகர் வரிசையில் என்றும் நம்பர் ஒன்னாக இருப்பவர் நடிகர் அஜித். இவர் தனது நடிப்பில் ஒரு புறம் ஆர்வத்தை காட்டினாலும் மறுபுறத்தில் கார் ரேஸ்களிலும், உலகம் சுற்றும் வாலிபனாக இன்றும் மலைகள் முதல் குன்றுகள் வரை அனைத்து இடங்களுக்கும் பயணம் செய்து தன் வாழ்க்கையை இனிமையாக கழித்து வருகிறார்.

இந்த சூழலில், ரசிகர்களின் பல வருட போராட்டங்களுக்கு பின் வெளியான திரைப்படம் தான் அஜித்தின் "விடாமுயற்சி". இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு திரையரங்குகளில் ஓடவில்லை என்றும் ஓடிடியிலும் பெரிதாக வரவேற்பு இல்லை எனவும் இப்படத்தால் தங்களுக்கு ரூபாய் 128 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் லைக்கா நிறுவனம் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் மற்றும் த்ரிஷா நடித்து சமீபத்தில் வெளியான படம் தான் "குட் பேட் அக்லி". இப்படம் நல்ல வெற்றியை அடைந்துள்ள நிலையில் வரும் அக்டோபர் மாதம் ஏகே64 படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இதையும் படிங்க: "ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்" திரைப்படத்தில் நடிகர் அஜித்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

இப்படி இருக்க நடிகர் அஜித் தனது நடிப்பில் ஒரு புறம் ஆர்வத்தை காட்டினாலும் மறுபுறத்தில் கார் ரேசுகளிலும், உலகம் சுற்றும் வாலிபனாக இன்றும் தனது bmw பைக்கை எடுத்துக் கொண்டு மலைகள் முதல் குன்றுகள் வரை அனைத்து இடங்களுக்கும் பயணம் செய்து தன் வாழ்க்கையை இனிமையாக கழித்து வருபவர் என்பது அனைவருக்கும் தெரியும்.இப்படி இருக்க பைக் ரெய்டுகளில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்க நடிகர் அஜித்குமார், தற்பொழுது தனக்கான அணியை திரட்டி,

இந்தியாவிற்காக கார் ரேஸில் கலந்து கொண்டு போராடி வருகிறார். ஏற்கனவே நடந்த போட்டியில் பலமுறை அவருக்கு விபத்துக்கள் ஏற்பட்டாலும், களத்தில் விடாமுயற்சியுடன் போராடிய நடிகர் அஜித், ரேசராக தனது அணியை மூன்றாவது இடத்தில் நிலை நிறுத்தி வெற்றியைக் கண்டார். இந்த வெற்றியை தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களும் கொண்டாடி தீர்த்தனர்.

மேலும் சமீபத்தில் நடிகர் அஜித்துக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த சூழலில் தற்பொழுது கார் பந்தயத்தில் முழு கவனத்தை செலுத்தி வரும் அஜித், தற்பொழுது Mercedes-AMG GT3 ரேஸிங் காரை வாங்கி இருக்கிறார்.

அந்த காருடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன்.. இந்த Mercedes-AMG GT3 ரேஸ் காரின் விலை சுமார் ரூ.10 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுவதால் அஜித்தின் ரசிகர்கள் ஷாக்கில் உறைந்து போயினர்.இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த முறை கண்டிப்பாக அஜித் குமார் கார் ரேஸில் முதல் இடத்தை பிடிப்பார் என அவரை வாழ்த்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: "ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்" திரைப்படத்தில் நடிகர் அஜித்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!