தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நிதி அகர்வால்.

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகங்களில் தொடர்ந்து நடித்துவரும் அவர், தற்போது பான் இந்திய அளவில் கவனம் பெறும் நடிகராக மாறியுள்ளார்.
இதையும் படிங்க: எல்லா இயக்குநரும் என்னிடம் எதிர்பார்த்ததே வேற..! நான் ஒத்துக்கல..அதுனால படமும் இல்ல - டாப்ஸி ஓபன் ஸ்பீச்..!

குறிப்பாக, பிரபல நடிகர் பிரபாஸ் ஜோடியாக நடித்துள்ள ‘ராஜா சாப்’ திரைப்படம் காரணமாக, நிதி அகர்வால் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், அந்த திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட போது ஏற்பட்ட ஒரு சம்பவமும், அதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட புகைப்படங்களும் தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன.

நிதி அகர்வால் சினிமாவில் அறிமுகமானதிலிருந்து, தனது தோற்றம் மட்டுமல்லாமல் நடிப்புத் திறமையாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் பல முக்கிய படங்களில் நடித்துள்ள அவர், தமிழிலும் சில படங்களில் வாய்ப்புகளைப் பெற்றுள்ளார்.

கதைக்கு ஏற்ற தோற்றம், நடிப்பில் இயல்பு, மேடைகளில் தன்னம்பிக்கை ஆகியவை அவரை இளம் தலைமுறை நடிகைகளில் தனித்துவமாக காட்டுகின்றன.
இதையும் படிங்க: சினிமா செட்டில் என்னை சுற்றிலும் ஆண்கள்..! கூசாமல் ஓபனாக கேப்பாங்க.. நடிகை ராதிகா ஆப்தே வருத்தம்..!