இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகுந்த கவனத்தை பெற்றவர் தான் நடிகை பவானிஸ்ரீ. இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமாரின் தங்கையான இவர், தன்னுடைய நடிப்புத் திறமையாலும் கதைகளை தேர்வு செய்வதிலும் அதிக கவனம் செலுத்தும் புதிய தலைமுறை நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.
இப்படி இருக்க, தற்போது நடிகை பவானிஸ்ரீ, பல படங்களில் ஒப்பந்தமாகி, பிசியான நடிகையாக மாரியுள்ளார். அவருடைய நடிப்பில் வெளிவரவுள்ள படங்கள் மக்கள் மத்தியில் அதிகப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்று, பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. ஏனெனில் அந்த நேர்காணலில் சீனாவில் உள்ள அட்ஜெஸ்மண்ட் குறித்து பேசியுள்ளார். அதன்படி, பவானிஸ்ரீ நேர்காணலில், " சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் என்ற ஒன்றை நான் இதுவரை நேரில் சந்திக்கவில்லை. ஆனால், பெண்களின் பயம்தான் சில இடங்களில் சிலர் தவறிழைக்கும் சூழலுக்கு வழிவகுக்கிறது.

தயக்கமும், பயத்தையும் முதலில் பெண்கள் தவிர்க்க வேண்டும், இப்போது பெண்களின் பாதுகாப்புக்கு பல சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. பெண்களுக்கு நம்பிக்கையையும் துணிவையும் தரக்கூடிய பல இயக்கங்கள் உருவாகியுள்ளன. ஒருவர் உங்களை தவறாக அணுகினால், அதை வெளிக்கொண்டு வந்தாலே போதும். அது மற்றவருக்கு நடக்காமல் தடுக்க முடியும். பெண்ணாக இருப்பதால் பயப்பட வேண்டும் என்று யாரும் தயவு செய்து நம்ப வேண்டாம். மேலும், இப்போது நல்ல கதைகள் தான் வெற்றி பெறுகிறது.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்த நடிகை இலக்கியா..! 'வள்ளிமலை வேலன்' திரைப்படத்தில் தோன்றி கலக்கல்..!
கமர்ஷியல் படங்களிலும் கூட கதை இருந்தால் தான் மக்கள் ரசிக்கிறார்கள். கிளாமரை மட்டும் நம்பி எந்த கதையும் இங்கே ஓடுவதில்லை. அந்த மனநிலை தற்பொழுது மாறிக்கொண்டிருக்கிறது. அதனால், கிளாமர் இல்லாமலும் ஜெயிக்க முடியும் என்பதை ஆணித்தரமாக நான் நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு, தமிழ் சினிமாவின் தற்போதைய நிலைமையை மிக தெளிவாக வெளிப்படுத்தப்பட்டதாக இருந்தது. எனவே, அவரது இந்த பேட்டியானது சமூக வலைதளங்களில், அதிக அளவில் பகிரப்பட்டு, வருவதுடன் அவருடைய தைரியத்தையும், நேர்மையையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அனைத்துக் கருத்துக்களையும் தாண்டி, நடிகை பவானிஸ்ரீ கூறியுள்ள முக்கியமான உண்மை என்றால் "பெண்கள் பயப்பட வேண்டாம், தங்கள் உரிமைகளை அறிந்து வலிமையாக இருக்க வேண்டும்" என்பது தான் பலரது மனதில் தற்பொழுது ஆழமாக பதிந்துள்ளது.

ஆகவே, பவானிஸ்ரீ, சினிமா துறையை உள்ளிருந்து நன்றாக புரிந்துகொண்டு, சமூகப் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையான கருத்து தெரிவிக்கத் துணியும் ஒரு கலைஞர் என்பது இந்த நேர்காணலால் உறுதியாகிறது. இந்தப் பேட்டி, திரையுலகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் உண்மைகளை மீண்டும் ஒரு முறை பிரதிபலிக்கிறது.
இதையும் படிங்க: என் சாவுக்கு நடிகர் பாலா தான் காரணம்...! வாக்கு மூலத்துடன் வீடியோ வெளியிட்ட மூன்றாவது மனைவி..!