தமிழ் சினிமாவில் எப்படி பிரபலங்கள் நிறைய பேர் இருக்கிறார்களோ அதே போல் தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்கள் நட்சத்திர நாயகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் திவ்யதர்ஷினி, பாவனா , என பலர் வெளியே சென்ற பொழுது அவர்களுக்கு ஆல்டர்நேடிவாக ஒருவரை தேடிக் கொண்டிருந்த பொழுது அவர்கள் கண்களுக்கு நட்சத்திரமாக தெரிந்தவர் தான் தொகுப்பாளனி பிரியங்கா.

எந்தம் சூழ்நிலையாக இருந்தாலும் சரி, எப்படிப்பட்ட இடமாக இருந்தாலும் சரி, எப்படிப்பட்ட கூட்டங்கள் தனக்கு முன்பாக அமர்ந்திருந்தாலும் சரி, ஒன்றுக்கும் கவலைப்படாமல் மேடை ஏறி நின்று மைக்கை பிடித்து அடை மழை பொழிவதைப் போல தனது கவுண்டர்களையும் காமெடிகளையும் தனது பேச்சுத் திறமைகளால் அருமையான குரலில் பேசிப் பேசியே அனைவரையும் மயக்கி இருப்பவர்தான் தொகுப்பாளினி பிரியங்கா. நடிகர் சூரி செல்வதை போல சர்க்கஸ் என்றால் சிங்கம் இருக்கணும் சபை என்றால் சங்கம் இருக்கணும் என்று சொல்வதைப் போல, நிகழ்ச்சி என்றால் போட்டியாளர்கள் இருக்கணும் தொலைக்காட்சி என்றால் கண்டிப்பாக பிரியங்கா இருக்க வேண்டும் என பலரும் அவரை எதிர்பார்க்கும் அளவிற்கு தன்னுடைய ஸ்டேட்டஸை உயர்த்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: முதல் முறையாக ரொமான்டிக் லுக்கில் தொகுப்பாளினி பிரியங்கா..! கணவருடன் செய்த சேட்டை காட்சி..!

இப்படிப்பட்ட பிரியங்கா தேஷ் பாண்டே பார்க்க அழகாகவும் கொலு கொழுப்பு கவர்ச்சி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இருப்பவர். கிட்டத்தட்ட தொலைக்காட்சிகளில் 10 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளனியாக வலம் வரும் பிரியங்கா, இதுவரை சூப்பர் சிங்கர், டான்ஸ் நிகழ்ச்சிகள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள், ஸ்டார் மியூசிக் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தனக்கான இடத்தை பிடித்திருக்கிறார். இப்படி பேர் புகழையும் சம்பாதித்த பிரியங்காவிற்கு சமீபத்தில் திடீரென ஒரு சறுக்கல் விழுந்தது. அதுதான் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கியது.

குக் வித் கோமாளி செட்டில் தொகுப்பாளனி பிரியங்காவிற்கும் தொகுப்பாளனி மணிமேகலைக்கும் இடையே யார் பெரிய ஆங்கர் என்ற போட்டி எழ, ஒரு நாள் மணிமேகலை இனி தான் குக் வித் கோமாளியின் பயணிக்க போவதில்லை என்றும் பிரியங்காவால் தான் பட்ட இன்னல்களை குறித்தும் வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டார். மேலும், இனி அந்த தொலைக்காட்சியில் நான் பணிபுரிய போவதில்லை என்றும் அதற்கும் காரணம் பிரியங்கா தான் எனவும் கூறி வெளியேறினார். இதனால் பிரியங்காவை பலரும் வசை பாடி தீர்த்து வந்தனர்.

இப்படிப்பட்ட தான சூழலில் நீண்ட நாட்களாக அமைதியாக இருந்த தொகுப்பாளனி பிரியங்கா, திடீரெனஒரு நாள் பிஸ்னஸ் மேன் வசி என்பவருடன் ரகசிய திருமணம் செய்துகொண்டார். பின் பாவனி கல்யாணத்திற்கு தனது புது கணவருடன் சென்ற பிரியங்கா, அதற்கு பிறகு ஹனிமூனில் பிசியாக இருந்து வருகிறார். மேலும் கல்யாணத்திற்கு பிறகு வாழ்க்கை ஜாலியாக உள்ளது என தெரிவித்து இருந்தார். இப்படி அவர் மகிழ்ச்சியாக இருப்பதில் யார் கண்பட்டதோ தெரியவில்லை, பிரியங்காவின் காலில் பலமாக அடிபட்டுள்ளது. இதனை தனது இன்ஸ்ட்டாகிராம் மூலமாக தெரிவித்த பிரியங்கா, காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்திற்கு கீழ் Fracture said pause, I said POSE! என பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அவரை நலம் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: என்ன சாமி இப்படியாகிப்போச்சு..! தக் லைஃப் படத்தை வெளியிட கர்நாடக வர்த்தக சபை சம்மதம்..!