தமிழ் திரை உலகம் மட்டுமல்லாது ஃபான் இந்தியா ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகை ராய் லட்சுமி. இவரது நடிப்பு ஒரு புறம் அழகாக இருந்தாலும் இவரது கவர்ச்சிக்கு மயங்காத ஆட்களே இருக்க முடியாது.

அதுமட்டுமல்லாமல் நடிகர் ராகவா லாரன்ஸின் திரைப்படத்தில் 'கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள நிக்கிறியே' என்ற பாடலுக்கு கருப்பு நிற சேலை கட்டி இவர் ஆடிய நடனம் இன்றும் பலரது கவனத்தை ஈர்த்து இருக்கிறது. இன்றைய கால சிகர்களால் லட்சுமி ராய் என்று அன்புடன் அழைக்கப்படும் நடிகை ராய் லட்சுமி இந்திய திரைப்பட உலகில் நடிகை மற்றும் மாடலாக திகழ்ந்து வருகிறார். இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான 'கர்க கசதரா' என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார். இதில் இவரது தோற்றம் மக்களுக்கு பிடித்து போக அடுத்ததாக இயக்குனர் ஆர். பார்த்திபனுடன் இணைந்து 'குண்டக்க மண்டக்க' என்ற நகைச்சுவை திரைப்படத்தில் நடித்தார்.
இதையும் படிங்க: ஏகே 64 படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..! அதிர்ச்சியில் சினிமா பிரபலங்கள்..!

இதனை அடுத்து இயக்குனர் பேரரசு இயக்கிய 'தர்மபுரி' என்ற அதிரடி மசாலா திரைப்படத்தில் 2006-ம் ஆண்டு நடித்து பலரது நெஞ்சங்களை கவர்ந்தார். மேலும் 2007-ம் ஆண்டு காதல் படமான 'நெஞ்சத்தைத் தொடு' என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்க 2008 ஆம் ஆண்டு நடிகர் ஜீவா இயக்கிய அதிரடி திரில்லர் திரைப்படமான 'தாம் தூம்' திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படி பல படங்களில் நடித்து இன்று முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராய் லட்சுமி உண்மையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்.

இப்படிப்பட்ட ராய் லட்சுமி இதுவரை தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சினிமா துறையில் நுழைவதற்கு முன்பாக பிரபல மாடலாக இருந்த இவர் சரவணா ஸ்டோர், ப்ரூவ் காபி மற்றும் பேரன் லவ்லி போன்ற பல விளம்பரங்களில் மாடலாகவும் நடித்திருக்கிறார். இப்பொழுதுவரை கவர்ச்சி நடிகையாக பார்க்கப்படும் ராய் லட்சுமி 'மங்காத்தா' திரைப்படத்தில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி பலரது நெஞ்சங்களை கவர்ந்தும் இருக்கிறார்.

இப்படிப்பட்ட ராய் லட்சுமி இதுவரை வெள்ளித்திரை, தாம் தூம், வாமணன், நான் அவன் இல்லை 2, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், பெண் சிங்கம், காஞ்சனா, மங்காத்தா, தாண்டவம், வனயுத்தம், ஒன்பதுல குரு, இரும்புக்குதிரை, அரண்மனை, பெங்களூர் நாட்கள், சௌகார்பேட்டை, நீயா 2, உல்ஃப், மிருகா, சிண்ட்ரெல்லா, தி லெஜன்ட் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இன்னும் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ள ராஜா சரவணன் இயக்கத்தில் உருவான ரவுடி பேபி என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் ராய் லட்சுமி.

இந்த நிலையில் தனது பிறந்தநாளை தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அட்டகாசமாகவும் உற்சாகமாகவும் பிரமாண்டமாகவும் கொண்டாடி இருக்கிறார் நடிகை ராய் லட்சுமி. தற்பொழுது அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பல வருடங்களுக்குப் பின்.. மீண்டும் சிம்பு - சந்தானம் காம்போ.. ஒரே ரெய்டில் படத்திற்கு ஆப்பு வைத்த ED..!