தமிழ் திரையுலகில் 1997ம் ஆண்டு வெளியான "ஒன்ஸ்மோர்" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை சிம்ரன். இதனை அடுத்து நடிகை சிம்ரன் தமிழில் பல படங்களில் நடிக்க அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. மேலும், 2000-ம் ஆண்டு காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் ஒரு படத்திற்கு ரூ.75லட்சம் சம்பளம் வாங்கிய முதல் நடிகையும் இவர் தான். இதனை அடுத்து, தமிழ் திரையுலகில் மட்டும் 10 விருதுகளை இதுவரை வென்றுள்ளார். மேலும், 4 பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

மும்பையில் பிறந்து வளர்ந்த சிம்ரன் தமிழில் இதுவரை, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், அவள் வருவாளா, கொண்டாட்டம், நட்புக்காக, ஜோடி, துள்ளாத மனமும் துள்ளும், வாலி, உன்னை கொடு என்னை தருவேன், பிரியமானவளே, 12 B, பார்த்தாலே பரவசம் , பஞ்சதந்திரம், பம்மல் கே. சம்பந்தம், ரமணா, கன்னத்தில் முத்தமிட்டாள், யூத், கோவில்பட்டி வீரலட்சுமி, உதயா, பிதாமகன், நியூ, ஆய்த எழுத்து, நம் நாடு, சத்தம் போடாதே, சேவல், வாரணம் ஆயிரம், ஐந்தாம் படை, தநா -07 அல 4777, பேட்ட, பாவ கதைகள், மகான், ராக்கெட்ரி: நம்பி விளைவு, கேப்டன், அந்தகன், குட் பேட் அக்லி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: படம் நல்லா இருந்தா மக்கள் பாக்க வராங்கய்யா.. வருங்கால இயக்குநர்களுக்கு நடிகர் சசிகுமார் கொடுத்த டிப்ஸ்..!

இப்படிப்பட்ட சிம்ரன், தற்பொழுது மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திரை உலக பயணத்தில் முக்கியமான படங்கள் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் "துள்ளாத மனமும் துள்ளும், வாலி, பிரியமானவளே, முதலிய படங்களில் நான் செய்த நடித்த கேரக்டர்கள் மிகவும் வலிமையானது. இந்த படங்களில் நடித்த போது தான், நான் சரியான இடத்திற்கு நடிக்க வந்துள்ளதாக உணர்ந்தேன்.

சிறிய வேடம், பாடல் காட்சி என எதுவாக இருந்தாலும் என்னுடைய முழு பங்களிப்பையும் அதில் செலுத்தி நடித்தேன். குறிப்பாக 1999ம் ஆண்டுக்கு மேல்தான் சரியான கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சண்டைய ஆரம்பிச்சுட்டீங்க... ஆனா மக்கள மறந்துட்டீங்க... நடிகை சிம்ரன் பேச்சு..!