ஒட்டுமொத்த இந்தியாவுமே ஒரு படத்தை குறித்து தான் தற்பொழுது பேசி வருகிறது என்றால் அதுதான் டூரிஸ்ட் ஃபேமிலி. இப்படத்தை பார்த்து கண்ணீர் வடித்து வரும் கூட்டங்கள் அதிகமாக உள்ளது. மேலும் இலங்கையில் இப்படத்தை பார்த்த மக்கள் இப்படத்தின் இயக்குனருக்கு நன்றி செலுத்தி வருகின்றனர். மேலும் இப்படம் தற்பொழுது இந்தியாவை கடந்து ஜப்பானிலும் வெற்றி நடைபோட்டு வருகிறது.

இப்படி இலங்கையில் இருந்து தமிழகத்தை தேடி வரும் ஈழத்தமிழர்களின் வாழ்க்கை முறையை சொல்லும் சிறந்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளது. இந்த படத்தை பார்த்து விட்டு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரனின் நடிப்பு பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. மேலும் இப்படத்தில் முரளி என்ற கேரக்டரில் வரும் கமகேஷுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: ரசிகர்களின் ஹைப்பை எகிறவிட்ட சசிகுமாரின் அடுத்த படம்..! true story என்பதால் மக்கள் கொண்டாட்டம்..!

24 வயதே ஆன இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது முழு திறமையையும் இப்படத்தில் காண்பித்துள்ளார் என்றே சொல்லலாம். இலங்கை தமிழர்களின் வாழ்க்கையை நகைச்சுவையாக எடுத்து மக்கள் மத்தியில் கொண்டு சென்ற அவருக்கு இலங்கை தமிழ் மக்களும் தங்களது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெறிவித்து வருகின்றனர். படம் வந்ததிலிருந்து பலரது பாராட்டுகளை மட்டுமே பெற்று வரும் நிலையில் படத்தை குறித்து பல பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இப்படி பட்ட இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் தங்களது அபார நடிப்பை காண்பித்துள்ளனர். இப்படத்தை இதுவரை அமைச்சர் மா. சுப்ரமணியன், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், இயக்குனர் ராஜமௌலி, நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி, என படத்தை பார்த்த பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இப்படி ஒரு படத்தை தியேட்டரில் பார்த்த மக்கள் வீட்டிலேயும் பலமுறை பார்க்க ஆசைப்பட்டு இப்படம் ஓடிடியில் எப்பொழுது வெளியாகும் என கேட்டபடி இருந்தனர். இந்த நிலையில், இப்படம் ஓடிடியில் வெளியாகும் அப்டேட் தற்பொழுது கிடைத்துள்ளது. அதன்படி அனைவரும் எதிர்பார்த்த டூரிஸ்ட் ஃபேமிலி படம் பிரபல ஓடிடி தளமான "ஜியோ ஹாட் ஸ்டாரில்" வரும் ஜூன் மாதம் 2ம் தேதி வெளியாகிறது என்ற அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. இதனை பார்த்த மக்கள் தற்பொழுது மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிங்க: இப்படியா படம் எடுப்பாங்க..? டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குனருக்கு ஷாக் கொடுத்த ராஜமௌலி..!