மலையாள சினிமாவில் இன்றும் பலரது பாராட்டைபெற்ற திரைப்படம் என்றால் அதுதான் பிரேமம்.. இந்த படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. இந்த திரைப்படம், தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் புது முகமாக அறிமுகமான இவரை, "காதல் தோழி மாலா"வாக இல்லாமல், இயற்கையின் இயல்பு அழகை கொண்ட நட்சத்திரமாக மாற்றியது.
இப்படி இருக்க, தென்னிந்திய சினிமாவில் இன்று பிரபலமாக இருக்கும் நடிகைகளை விட வேறுபட்ட பாதையை எடுத்துச் செல்வதோடு, தனது நடிப்புப் பாணியால் மட்டுமல்லாமல், அழகு குறித்த இயல்பான தோற்றத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார் சாய் பல்லவி. சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த பேட்டியில் சாய் பல்லவி, தனது சினிமா பயணத்தில் பெரும்பாலும் மேக் அப் இன்றி தான் நடித்துள்ளதாக கூறியுள்ளார். அவர் பேசுகையில், "நான் எனது முதல் படமான பிரேமம் படத்தில் இருந்து இன்று வரைக்கும், பெரும்பாலான கதாபாத்திரங்களில் மேக் அப் இல்லாமலே நடித்துள்ளேன். அதிகபட்சமாகக் நான் பயன்படுத்தியது என்றால் அது ஐ லைனர் மட்டுமே" என்றார்.

இவரது இந்த பேச்சு பலருக்கும் சாதாரணமாக தோன்றலாம், ஆனால் திரையுலகத்தில் மிகவும் அரிதாக பார்க்கப்படும் இந்த கருத்து, ரசிகர்களிடையே மிகப்பெரிய ஐக்கியத்தையும், பெருமையையும் உருவாக்கியுள்ளது. மேலும் சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் காட்சி மற்றும் மேக் அப் மூலம் திரையில் மின்னும் நிலையில், சாய் பல்லவி அந்த வழியைத் தேர்வு செய்யவில்லை. அதற்குப் பதிலாக, "அந்த கதையின் கேரக்டருக்கு தேவையான அளவில் மட்டுமே நம் தோற்றம் இருக்க வேண்டும்" என்ற ஒரு உணர்வுடனே நடித்து வருகிறார். இது அவரது நம்பிக்கை மட்டுமல்ல, ரசிகர்கள் மனதில் பதிந்த தனித்துவமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த தன்மையானது, அவரை மற்ற நடிகைகளிடமிருந்து வேறுபடுத்தியுள்ளது. திரைப்படங்களில் அவரது இயற்கையான தோற்றம், பார்வையாளர்களுக்கு கதையின் நம்பகத்தன்மையைக் கூட்டுவதோடு, "அழகு என்பது மேக்கப்பில் இல்லை இயல்பில் தான் இருக்க வேண்டும்" என்ற புரிதலையும் ஏற்படுத்துகிறது. சினிமாவிலும், வெளி நிகழ்ச்சிகளிலும் கூட சாய் பல்லவி பெரும்பாலும் சாதாரண சேலை, ஜிமிக்கி மற்றும் ஜடாமுடி தோற்றத்தோடு வருவது வழக்கம்.
இதையும் படிங்க: வாட்டர்மெலான் திவாகரை வெளுத்து வாங்கிய ஜி.பி.முத்து..! சூர்யா ரசிகர்களின் ஆதரவால் "பன்னிப்பயலே" வீடியோ வைரல்..!
பாரம்பரியத்தையும், தமிழ் கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் இவர், ரெட் கார்பெட் நிகழ்ச்சிகளிலும் மேக் அப் மற்றும் மெரு கூட்டிய உடைகளுக்கு பதிலாக சுத்தமான, பாரம்பரிய தோற்றத்துடன் மட்டுமே காட்சியளிக்கிறார். இதுமட்டுமல்லாமல் தற்போது, சீதா ராம் எனும் பான் இந்தியா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. பல மொழிகளில் வெளியாவதற்கான சூழலில் உருவாகும் இந்த திரைப்படம், சாய் பல்லவியின் நடிப்புத் திறனை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், அந்தந்த மொழிப் பார்வையாளர்களிடையே அவரது இடத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. மேலும், தற்போதைய தகவலின்படி, சாய் பல்லவி தெலுங்கு, ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக பார்க்கப்படுகிறார். இதுவே அவரது திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

ஆகவே, இயற்கையான தோற்றமும், இயல்பான நடிப்பும், தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் விதத்தில் வளர்ந்து வரும் நடிகை சாய் பல்லவியின் பார்வையும், பாதையும் இளைய தலைமுறைகளுக்குச் சிறந்த முன்னுதாரணமாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
இதையும் படிங்க: பிரியாமணி தனது காதல் கணவருடன் என்ன செய்திருக்கிறார் பாருங்க..! இணையத்தை அதிரவிட்ட கிளிக்..!