தமிழ் திரையுலகில் இன்று லாஸ்லியா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர் லாஸ்லியா.

இப்படி பட்டவரின் வாழ்க்கையில் கண்ணீரே இல்லை என்று பலரும் சொன்னாலும் கவினை பிரிந்தும் சந்தோஷமாக இருக்கிறாரே என சிலர் பேசினாலும் அதனை குறித்து துளி கூட கவலை படாமல் தனது வாழக்கையை பார்த்து வந்த லாஸ்லியா சமீபத்தில் "ஜென்டில்வுமன்" ஃப்ரமோஷனில் கலந்து கொண்ட பொழுது அவரை பார்த்து ரசிக்கத்தவர்களே இருக்க முடியாது.
இதையும் படிங்க: ரோபோ ஷங்கர் குடும்பம் களைகட்டிய கொண்டாட்டம்! இந்திரஜா பகிர்ந்த போட்டோஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா, சேரன், அபிராமி, சாக்ஷி என அனைவரும் கவினை புரட்டி எடுத்து கதறவிட்ட வேளையில் தானாக சேர்ந்த கூட்டம் போல் ஒன்றிணைந்த இந்த நரி கூட்டம் தான் "கவின், லாஸ்லியா, சாண்டி, முகின்ராவ், தர்ஷன்".

இந்த கூட்டணி ஒன்று சேர்ந்த பிறகு தான் பிக்பாஸ்3 ஆட்டத்தில் சூடு பிடிக்க துவங்கியது. வனிதாவை வறுத்தெடுத்து, சேரனை சேறோடு வெளியே தள்ளி, அபிராமியை ஜெயிலுக்கு அனுப்பி, ஷாக்ஷியை டாடா காண்பித்து வெளியே அனுப்பி மாஸ் காட்டினர்.

அதுமட்டுமல்லாமல், ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பாக நான்கு ஆண்கள் பாதுகாப்பாக இருக்க, "நாங்க வீ ஆர் தி பாய்ஸ்" என பாட்டு பாடி தமிழம்மட்டுமல்லாது இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் என பல நாடுகளில் ஃபேமஸ் ஆனார்கள்.

அதிலும் அடிக்கடி "நான் தப்பு செய்தால் பிக்பாஸ் கேட்கட்டும் நீங்கள் என்னை பற்றி கதைக்க வேண்டாம்" என கோபத்தில் முகம் சிவந்து பேசுவார். அழுதாலும் மனதை ஏங்கவிடுவார். இப்படிப்பட்டரிடம் பிக்பாஸே "லாஸ்லியா நீங்க தான செரியா இருக்கவங்க, மைக்க ஒழுங்கா மாட்டுங்க" என கலாய்க்கும் அளவிற்கு அழகுடையவர்.

இப்படி பட்ட லாஸ்லியாவின் உண்மையான பெயர் 'லாஸ்லியா மரியனேசன்'. இவர் இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சியில் 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரை தொகுப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் கடமையாற்றினார்.

பின்னர் 2019 ஆம் ஆண்டு தன் பணியில் இருந்து விலகி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டார். இதுதான் அவரது அப்போதைய பையோ கிராபி.

ஆனால் பிக்பாஸை விட்டு வெளியே வந்த லாஸ்லியா பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார். குறிப்பாக ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடித்த

"பிரண்ட்ஷிப்" என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, தற்போது "ஜென்டில்வுமன்" என்ற படத்தில் நடித்தும் இருக்கிறார்.
இதையும் படிங்க: மஞ்சு வாரியரை கண்ட இடத்தில் தொட்ட காமுகன்..! வீடியோவை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள்..!