• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ஒரு டேன்ஸ் போடுங்க.. விஜயாவை அசிங்கப்படுத்திய ஸ்ருதி அம்மா..!! கவலையில் அண்ணாமலை.. கடுப்பில் மீனா.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சிறகடிக்க ஆசையில் இன்று ஒரு டேன்ஸ் போடுங்க என விஜயாவை ஸ்ருதி அம்மா அசிங்கப்படுத்தி இருக்கிறார்.
    Author By Bala Tue, 12 May 2026 11:49:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-siragadikka-aasai-serial-may-12th-episode-update-muthu-s-bold-move-vijayalakshmi-s-humiliation-tamilcinema

    தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வரும் தொடர்களில் ஒன்றாக திகழ்கிறது சிறக்கடிக்க ஆசை. குடும்ப உறவுகள், உணர்ச்சி மோதல்கள், காதல், நகைச்சுவை மற்றும் சமூக வாழ்வின் இயல்பான தருணங்களை கலந்து ரசிகர்களை கவர்ந்து வரும் இந்த தொடர், ஒவ்வொரு நாளும் புதிய திருப்பங்களால் ரசிகர்களை எதிர்பார்ப்பில் வைத்திருக்கிறது. குறிப்பாக சமீபத்திய எபிசோடுகளில் குடும்பத்தினருக்குள் உருவாகும் மோதல்கள் மற்றும் கதாபாத்திரங்களின் உணர்ச்சி போராட்டங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.

    அந்த வகையில், மே 12ஆம் தேதிக்கான எபிசோடு ரசிகர்களுக்கு பல பரபரப்பான தருணங்களை கொடுத்துள்ளது. குறிப்பாக விஜயா, மனோஜ், ரோகிணி, முத்து, மீனா மற்றும் ஸ்ருதி குடும்பத்தினருக்கு இடையே நடந்த சம்பவங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளன.

    இன்றைய எபிசோடு ஆரம்பத்திலேயே மனோஜ் தனது ஷோரூமில் எலி தொல்லை அதிகமாக இருப்பதாக கவலையுடன் பேசுகிறார். இதற்கு உடனடியாக பதிலளிக்கும் ரோகிணி, “அதை விரட்ட நான் ஒரு ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறுகிறார். ஆனால் அதற்குப் பின்னால் ரோகிணி தனது மனதில் வேறு ஒரு திட்டத்தை வைத்திருப்பது போல காட்டப்படுகிறது. அதற்கு முன்பாக மனோஜ், “இன்னைக்கு இரவு நீ என் கூட ஷோரூம்ல தங்கி அந்த எலியை பிடிக்க உதவி பண்ணணும்,” என்று கேட்பது கதைக்கு ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது.

    இதையும் படிங்க: ஸ்ருதி வீட்டில் தாங்க முடியாத கொடுமையை அனுபவிக்கும் விஜயா..!! செய்வதறியாது தவிக்கும் முத்து மீனா.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    இதைக் கேட்ட ரோகிணி, மனதிற்குள் மகிழ்ச்சியடைந்து, “இது நல்ல வாய்ப்பு” என்று நினைக்கிறார். பின்னர் அவர் ஷோரூமுக்கு ஒரு பூனையை கொண்டு வந்து விடுகிறார். “இந்த பூனை எலியை பிடிச்சிடும்” என்று அவர் நம்பிக்கையுடன் சொன்னதும் மனோஜ் நிம்மதியடைகிறார். அதன் பின்னர் இருவரும் தனியாக அமர்ந்து பேசும் காட்சிகள் எபிசோடின் முக்கிய அம்சமாக அமைந்தது.

    siragadikka-aasai-serial

    அந்த நேரத்தில் மனோஜ், “அப்பா அம்மா ரெண்டு பேரும் பிரிந்து இருப்பது ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று வருத்தமாக பேசுகிறார். அதற்கு பதிலளிக்கும் ரோகிணி, “நானும் உன்னை பிரிந்து ரொம்ப கஷ்டப்படுறேன்” என்று உணர்ச்சிகரமாகவும் ரொமான்டிக்காகவும் பேசுகிறார். இந்த உரையாடலை பார்த்த ரசிகர்கள், மனோஜ் மற்றும் ரோகிணி இடையேயான உறவு இனி பெரிய பிரச்சனைகளை உருவாக்கப்போகிறதா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

    மறுபுறம், முத்து மற்றும் மீனா வீட்டில் மிகவும் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான சூழல் காணப்படுகிறது. அண்ணாமலை உட்பட அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் காட்சிகள் குடும்ப பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. அந்த நேரத்தில் முத்து, மீனாவையும் அவரது அம்மாவையும் உட்கார வைத்து அவர்களுக்கு சாப்பாடு பரிமாறுவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

    அதற்கு மீனாவின் அம்மா, “ஆம்பளைங்க சாப்பிட்ட பிறகுதான் நாங்க சாப்பிடுவோம்” என்று பழைய தலைமுறை எண்ணத்தை வெளிப்படுத்துகிறார். ஆனால் அதற்கு முத்து உடனடியாக, “அதெல்லாம் அந்த காலம். இப்போ அப்படி கிடையாது” என்று பதிலளிப்பது ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் “முத்துவின் இந்த வசனம் அருமை” என்று பதிவிட்டு வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து முத்து மற்றும் மீனா புதிதாக ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸில் சேர்ந்திருப்பது பற்றியும் குடும்பத்தினரிடம் பேசுகின்றனர். அந்த நேரத்தில் ஸ்வேதா தான் அங்கு இங்கிலீஷ் டீச்சராக வருகிறார் என்று முத்து கூறியதும் அண்ணாமலை மகிழ்ச்சியடைகிறார். “நீ கண்டிப்பா படிக்கணும்டா” என்று அண்ணாமலை கூற, அதற்கு முத்து, “இப்போ வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் ஆயிடுச்சு, அதனால கண்டிப்பா படிக்கணும்” என்று பதிலளிப்பது கதாபாத்திரத்தின் வளர்ச்சியை காட்டும் வகையில் அமைந்திருந்தது.

    இந்நிலையில், சத்யா தனியாக மாடியில் நின்று சோகமாக இருப்பதை கவனிக்கும் மீனா, அவரிடம் என்ன பிரச்சனை என்று கேட்கிறார். அப்போது சத்யா, ரேகாவுக்கு தனது அப்பா மீது சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக கூறுகிறார். இதைக் கேட்ட முத்து, “அவர் உன்கிட்ட எப்படி நடந்துக்கிறார்?” என்று கவலையுடன் கேட்கிறார். அதற்கு சத்யா, “இப்பவும் பழைய மாதிரி தான் நடந்துக்குறாரு. முக்கியமான பொறுப்புகளை என்கிட்ட தான் கொடுக்குறாரு” என்று சொல்கிறார். உடனே முத்து, “என்ன பிரச்சனை வந்தாலும் நாங்க இருக்கோம்” என்று ஆறுதல் கூறும் காட்சி ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.

    siragadikka-aasai-serial

    அதே நேரத்தில் ஸ்ருதி வீட்டில் பார்ட்டி ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக நடைபெறுகின்றன. ஸ்ருதியின் அம்மா உற்சாகமாக வேலைகளை கவனித்துக் கொண்டிருக்க, அதை பார்த்து கொண்டிருக்கும் விஜயாவிடம் “நீங்க இதுபோல பார்ட்டிக்கு போயிருக்கீங்களா?” என்று கேட்கிறார். அதற்கு விஜயா, “நாங்க பிறந்தநாள், கல்யாணம் மாதிரி நிகழ்ச்சிகளுக்குத்தான் போயிருப்போம்” என்று பதிலளிக்கிறார்.

    இதற்கிடையில் ஸ்ருதியின் அப்பா தனது நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருப்பது விஜயாவுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், அங்கு வந்திருந்த ஒருவர் விஜயாவை பார்த்து “மலையாள ஹீரோயின் மாதிரி இருக்காங்க” என்று பேசுவதும், பின்னர் அவரது அருகில் வந்து டான்ஸ் ஆட முயற்சிப்பதும் விஜயாவை கடும் கோபத்திற்கு உள்ளாக்குகிறது.

    அதற்கு மேலாக ஸ்ருதியின் அம்மா, “என் சம்மந்தியும் நல்லா டான்ஸ் ஆடுவாங்க” என்று கூறி விஜயாவையும் நடனமாட அழைக்கிறார். முதலில் மறுக்கும் விஜயா, தொடர்ந்து கட்டாயப்படுத்தப்பட்டதால் கடுப்பாகி, “நான் இங்க டான்ஸ் ஆடவா வந்திருக்கேன்?” என்று கோபமாக கத்துகிறார். அதன் பின்னர் மாடிக்கு சென்று தனியாக அமர்ந்து அழும் காட்சி ரசிகர்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இறுதியில், மனவேதனையில் இருக்கும் விஜயா, மனோஜுக்கு போன் செய்து “நான் உன்னோட ஷோரூமுக்கு வரேன்” என்று கூறுவதுடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது. இந்த முடிவு அடுத்த எபிசோடில் பெரிய திருப்பத்தை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

    siragadikka-aasai-serial

    மொத்தத்தில், குடும்ப உறவுகள், உணர்ச்சி மோதல்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் அமைந்த இன்றைய எபிசோடு ரசிகர்களை முழுமையாக ஈர்த்துள்ளது. குறிப்பாக விஜயாவின் கோபம், மனோஜ்-ரோகிணி நெருக்கம் மற்றும் முத்துவின் குடும்ப பாசம் ஆகியவை இந்த எபிசோடின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன.

    இதையும் படிங்க: வீட்டில் இருக்கணுமா அப்ப Dance ஆடு..!! விஜயாவை பாடாய்ப்படுத்தும் ஸ்ருதி அம்மா.. கைவிட்ட பார்வதி.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    மேலும் படிங்க
    நான் ராமரையும் கிருஷ்ணனையும் பார்த்ததே இல்லை..!! ஆனால் இன்று மோடி ரூபத்தில் பார்க்கிறேன்.. நடிகர் தனிகெல்லா பரணி பதிவு வைரல்..!

    நான் ராமரையும் கிருஷ்ணனையும் பார்த்ததே இல்லை..!! ஆனால் இன்று மோடி ரூபத்தில் பார்க்கிறேன்.. நடிகர் தனிகெல்லா பரணி பதிவு வைரல்..!

    சினிமா
    "போதைப்பொருள்" தடுப்பு படை..! அரசாணை வெளியீடு..! அடுத்தடுத்து அதிரடி காட்டும் முதல்வர் விஜய்..!

    "போதைப்பொருள்" தடுப்பு படை..! அரசாணை வெளியீடு..! அடுத்தடுத்து அதிரடி காட்டும் முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு
    “தலையை வெட்டி விடுங்கள்...” - விஜய் சொன்னதுமே ஜர்க்கான  சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்... குட்டி ஸ்டோரி சொன்ன தளபதி...!!

    “தலையை வெட்டி விடுங்கள்...” - விஜய் சொன்னதுமே ஜர்க்கான சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்... குட்டி ஸ்டோரி சொன்ன தளபதி...!!

    அரசியல்
    ஹீரோவாக அறிமுகமான தயாரிப்பாளர் கே.ஜே.ஆர்..!! மிரட்டும் "அங்கீகாரம்" படத்தின் டிரெய்லர் அப்டேட்..!

    ஹீரோவாக அறிமுகமான தயாரிப்பாளர் கே.ஜே.ஆர்..!! மிரட்டும் "அங்கீகாரம்" படத்தின் டிரெய்லர் அப்டேட்..!

    சினிமா
    விஜய் சொல்லமாட்டாரு.. சொன்னா செய்யாம விடமாட்டாரு..!! அதுதான் அவர் கேரக்டரே..

    விஜய் சொல்லமாட்டாரு.. சொன்னா செய்யாம விடமாட்டாரு..!! அதுதான் அவர் கேரக்டரே.. 'ஜனநாயகன்' பட தயாரிப்பாளர் பாராட்டு..!

    சினிமா
    திமுக மீது வீண்பழி..! அதிமுகவுடன் கூட்டணி முயற்சியா..? ஆர்.எஸ்.பாரதி விளக்கம்..!

    திமுக மீது வீண்பழி..! அதிமுகவுடன் கூட்டணி முயற்சியா..? ஆர்.எஸ்.பாரதி விளக்கம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "போதைப்பொருள்" தடுப்பு படை..! அரசாணை வெளியீடு..! அடுத்தடுத்து அதிரடி காட்டும் முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு
    “தலையை வெட்டி விடுங்கள்...” - விஜய் சொன்னதுமே ஜர்க்கான  சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்... குட்டி ஸ்டோரி சொன்ன தளபதி...!!

    “தலையை வெட்டி விடுங்கள்...” - விஜய் சொன்னதுமே ஜர்க்கான சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்... குட்டி ஸ்டோரி சொன்ன தளபதி...!!

    அரசியல்
    திமுக மீது வீண்பழி..! அதிமுகவுடன் கூட்டணி முயற்சியா..? ஆர்.எஸ்.பாரதி விளக்கம்..!

    திமுக மீது வீண்பழி..! அதிமுகவுடன் கூட்டணி முயற்சியா..? ஆர்.எஸ்.பாரதி விளக்கம்..!

    தமிழ்நாடு
    #BREAKING: பேரதிர்ச்சி..! நீட் தேர்வு ரத்து... தேர்வு முகமை அதிரடி அறிவிப்பு!

    #BREAKING: பேரதிர்ச்சி..! நீட் தேர்வு ரத்து... தேர்வு முகமை அதிரடி அறிவிப்பு!

    இந்தியா
    இபிஎஸ் போட்ட பிச்சையில் வெற்றி..! ஈனத்தனம் இல்லையா..? அதிமுக கண்டனம்..!

    இபிஎஸ் போட்ட பிச்சையில் வெற்றி..! ஈனத்தனம் இல்லையா..? அதிமுக கண்டனம்..!

    தமிழ்நாடு
    பொதுச்செயலாளர் பதவியும் காலி...? - இபிஎஸுக்கு எதிராக காய் நகர்த்தும் சி.வி.சண்முகம்... எடப்பாடிக்கு பறந்த நேரடி வார்னிங்...!

    பொதுச்செயலாளர் பதவியும் காலி...? - இபிஎஸுக்கு எதிராக காய் நகர்த்தும் சி.வி.சண்முகம்... எடப்பாடிக்கு பறந்த நேரடி வார்னிங்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share