தென்னிந்திய சினிமாவின் தனிச்சிறப்பு வாய்ந்த நடிகராகவும், தனித்துவமான இயக்குநராகவும் அதிகளவு ரசிகர் பட்டாளத்தை கொண்டவராகவும் இருப்பவர் எஸ்.ஜே.சூர்யா. இவரது அட்டகாசமான நடிப்பு, தமிழ் சினிமாவில் அவரை தனி பிரபலமாகவே மாற்றி உயர்த்தியுள்ளன. தற்போது, "கில்லர்" என்ற மாஸ் கலந்த அதிரடி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இத்திரைப்படத்தை, எஸ்.ஜே.சூர்யா இயக்கியும் நடித்தும் இருக்கிறார் என்பது மட்டுமல்ல, இந்தப் படம் பான் இந்தியா அளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.
இது அவரது இயக்கம் என்பதால் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது என்று சொல்லலாம். இத்திரைப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் என்ற பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் கதாநாயகியாக, நடிகை பிரீத்தி அஸ்ரானி இணைந்திருக்கிறார். முன்னதாகத் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்திருக்கும் பிரீத்தி, கில்லர் படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் அறிமுகமாக உள்ளார். மேலும், இப்படத்தின் இசையை உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் அமைக்கிறார். இப்படத்தின் பூஜை விழா ஜூலை 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் படக்குழுவினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் துவங்கும் நிலையில் உள்ளன.

இந்த சூழலில், ரசிகர்களுக்கு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தும் செய்தியை எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது, “கில்லர்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6.09 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டீசரை டெலிட் பண்ணுங்க முதல்ல..! "பேட் கேர்ள்" படத்திற்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!
கில்லர் படத்திற்கான எக்ஸ் தள அப்டேட் - கிளிக் செய்து பார்க்கலாம்.
இந்த தகவல் வெளியானதிலிருந்து, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உற்சாகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதிகப்படியான கலைநயமும், சக்திவாய்ந்த கதையும், மாபெரும் தொழில்நுட்பமும் கலந்த மிகுந்த தரமான படமாக "கில்லர்" படம் உருவாக உள்ளது.
இது வெறும் படம் அல்ல, எஸ்.ஜே.சூர்யாவின் கடந்த 10 வருடங்களாகக் காத்திருத்தலின் விளைவு என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். அதுவும் எஸ்.ஜே.சூர்யா, “கில்லர்” படத்தில் எவ்வகையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்? அவரது கதை சொல்லும் விதம் நடை முறையில் என்ன மாற்றத்தை கொண்டு வரும்? ஏ.ஆர். ரகுமானின் இசையில் எந்தவிதமான புதியத் திருப்பங்கள் இருக்கும்? எனும் கேள்விகள் ரசிகர்களிடையே அதிகமாக எழுந்து வருகின்றன. படத்தின் தலைப்பு "கில்லர்" என்பதிலிருந்து, இது ஒரு அதிரடி ஆக்ஷன் திரில்லர் ஆக இருக்கும் என கருதப்படுகிறது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் போது, எஸ்.ஜே.சூர்யாவின் புதுப்பரிமாணத்தை கண்டிப்பாக கண்முன் நிறுத்தலாம்.

இந்த நிலையில், “கில்லர்” படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாகவுள்ளதால், இது ரசிகர்களிடையே மிகுந்து ஆவலை கிளப்பியுள்ளது. இதன் பிறகு, டீசர், பாடல்கள், ட்ரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: கிங்காங் மகளை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய நடிகர் சிவகார்த்திகேயன்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!