ரஷ்மிகா மந்தன்னா கடந்த 2016-ம் ஆண்டு நடித்த 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.

இப்படத்தை தொடர்ந்து, 2018-ம் ஆண்டு "சலோ" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளர்.

பின்னர் அதே ஆண்டு, விஜய் தேவர்கொண்டா உடன் 'கீதா கோவிந்தம்' என்னும் திரைப்படத்தில் நடித்து தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய அத்தனை மொழி திரையுலகிலும் பிரபலமானார்.
இதையும் படிங்க: இப்படியும் போட்டோ ஷூட் பண்ணலாமா..! ராஷ்மிகாவின் "நச்" கிளிக்ஸ்..!

இதுவரை தமிழில் இயக்குனர் பாரத் கம்மா இயக்ககத்தில் 2019ம் ஆண்டு வெளியான "டியர் காம்ரேட்", இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான "புஸ்பா (தி ரைஸ்)",

இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான "சுல்தான்", இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் 2022ம் ஆண்டு வெளியான "சீதா ராமம்",

இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளியான "அனிமல்", இயக்குநர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளியான "வாரிசு", இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் 2024ம் ஆண்டு வெளியான "குபேரா", இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் 2024ம் ஆண்டு வெளியான "புஷ்பா (தி ரூல்)" ஆகிய திரைப்படங்களில் சிறப்பாக நடித்து உள்ளார்.

இதனை அடுத்து, நடிகை ராஷ்மிகா மந்தண்ணா நடிப்பில் சமீபத்தில் வெளியான "சாவா" படம் பல கோடிகளை கடந்து வெற்றி படமாக மாறி இருந்தது.

இந்த சூழலில், தற்போது ராஷ்மிகா Zee Cine Awards 2025 விருது விழாவில் கலந்துகொண்டு இருக்கிறார். அந்த நிகழ்ச்சிக்கு செம கிளாமர் ஆன உடையில் வந்து இறங்கியிருக்கிறார். இதனை பார்த்த அனைவரும் வாயைப்பிளந்து பார்த்து இருந்தனர்.

இந்த நிலையில், தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்த ராஷ்மிகா அதன்கீழ், "சிறிது நேரத்திற்குப் பிறகு, நான் மீண்டும் சிவப்பு கம்பளத்தில் அமர்ந்தேன். அனைத்து அன்பும் என் இதயத்தை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிறது. அன்று நான் என்ன அணிந்திருந்தேன் என்பதை உங்களுக்குக் காட்ட விரும்பினேன். என் அணிக்கு மிகப்பெரிய பாராட்டு. அவர்கள் எப்போதும் என் ஆதரவைப் பெற்றிருக்கிறார்கள். இந்த நம்பமுடியாத கடினமான, பரபரப்பான நாட்களில் நான் உயிர்வாழ ஒரே வழி அவர்களும் என் குடும்பத்தினரும் தான். உங்கள் ஒவ்வொருவருக்கும் எலும்பை நொறுக்கும் அணைப்புகளை கொடுக்கிறேன்" என பதிவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: இப்படியும் போட்டோ ஷூட் பண்ணலாமா..! ராஷ்மிகாவின் "நச்" கிளிக்ஸ்..!