பரோட்டோ சாப்பிட்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த காமெடி நடிகர் என்றால் அவர் தான் நடிகர் சூரி. இந்த நிலையில், முதன் முதலாக நடிகர் சூரியின் எழுத்தில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி தற்பொழுது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ள திரைப்படம் தான் 'மாமன்' திரைப்படம். இத்திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே நல்ல வரவேற்பை பெற்று உள்ள நிலையில் படம் மிகுந்த பாசம் கலந்த கலவையாக உள்ளது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்தப் படத்தை குறித்து பார்த்தால், தாய்மாமன் உறவையும் அதன் முக்கியத்துவத்தையும், அக்கா தம்பியின் உறவை குறித்தும், கணவன் மனைவியின் இல்லற வாழ்க்கைகளை குறித்தும், வெளிப்படையாக சொல்லும் திரைப்படமாகவே இப்படம் உள்ளது என மக்கள் அனைவரும் கூறி வருகின்றனர். நன்றாக இருக்கும் அக்கா தம்பியின் உறவுகளுக்கு விரிசல் விட காரணமாய் அக்காவின் மகனே இருக்கிறார். ஆதலால் தனது தம்பியின் வாழ்க்கையை காப்பாற்ற தனது மகனையும் தம்பியையும் பிரிக்க அக்கா செய்யும் திட்டம் ட்விஸ்ட்களிலேயே அல்டிமேட் ஆக இருந்தது.
இதையும் படிங்க: என்ன பெத்தாரே.. முருகன் தந்தாரே..! ரசிகரை திட்டிய சூரி இப்ப எங்கு இருக்கிறார் பாருங்க..!

இப்படி இருக்க சமீபத்தில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து இருந்தாலும் விசேஷமாக பார்க்கப்படுவது கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பஞ்சமி ஒருவரே. ஏனெனில் தனது சிறு வயதிலேயே திருமணம் செய்து 3 குழந்தைகளுக்கு தாயான பஞ்சமி, பல வருடங்களுக்குப் பிறகு தனது கனவை நினைவாக்க இந்த நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் நடனத்தில் அனைவரது பாராட்டியும் பெற்று வரும் பஞ்சமியின் நிறைவேராதா ஆசை ஒன்று சமீபத்தில் நடிகர் சூரியின் காதுகளில் விழுந்தது.

அதன்படி மாமன் திரைப்பட ரிலீஸுக்கு பின்பாக, டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சூரி, பஞ்சமியின் நடனத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டார். இதனை அடுத்து உங்களுக்கு ஏதாவது ஆசை இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் என நடிகர் சூரி கேட்க அதற்கு பஞ்சமி, எனது மூன்று மகன்களுக்கும் இதுவரை காது குத்தப்படவில்லை எனக் கூறினார். இதனை கேட்ட நடிகர் சூரி, சற்றும் யோசிக்காமல் மேடைக்கு வந்து பஞ்சமியிடம், என் படம் வெளியான இந்த நேரத்தில் காது குத்தப்படவில்லை என நீங்கள் சொன்ன காரணத்தினால் உங்கள் மூன்று மகன்களுக்கும் தாய் மாமன் ஸ்தானத்திலிருந்து நானே காது குத்தி அழகு பார்க்கிறேன் என வாக்கு கொடுத்தார்.

அவர் கொடுத்த இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு அவரது சொந்த செலவில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சந்த வேலூர் பகுதியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பஞ்சமியின் மூன்று மகளான தர்ஷத், அசோகமித்திரன், ஆதித்ய வர்மா ஆகிய மூன்று பேருக்கும் தாய்மாமன் ஸ்தானத்தில் இருந்து நடிகர் சூரி அவரது மடியில் அமர வைத்து காதணி விழாவை சிறப்பாக நடத்தினார். இப்படி சொன்ன வாக்கை காப்பாற்றும் வகையில் நடிகர் சூரி செய்த இந்த காரியத்தை பார்த்து நெகிழ்ந்த பஞ்சமி, சற்றும் யோசிக்காமல் கலங்கியவாறு நடிகர் சூரியன் கால்களில் விழுந்தார். இதனால் திகைத்துப் போன நடிகர் சூரி, பெண்கள் யார் கால்களிலும் விழக்கூடாதுமா..! எனக் கூறி அவரை ஆசுவாசப்படுத்தினார்.
இதையும் படிங்க: மாமன் படத்தில் மட்டும் பாசம் அல்ல.. படப்பிடிப்பு முழுவதுமே பாச மழைதான்..! நடிகை ஸ்வாசிகா வெளியிட்ட போட்டோஸ்..!