தென்னிந்திய சினிமாவில் படிப்படியாக வளர்ந்து வரும் இளம்பெண் நடிகைகளில் முக்கியமானவராகவும் அனைவரது கவனத்தையும் பெற்றவர் தான் நடிகை பிரீத்தி முகுந்தன்.. இவர் தற்போது தனது புதிய படத்தின் மூலம் மலையாள திரையுலகில் முதன் முறையாக களையிறங்கியுள்ளார். ‘ஓம் பீம் புஷ்’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை கடந்த ஆண்டில் தொடங்கிய இவர், தமிழில் கவின் நடிப்பில் வெளியான ‘ஸ்டார்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதையும் படிங்க: 'சேது' பட ரீ-மேக்கால் கிடைத்த வாழ்க்கை..! வலியோடு கிடைத்தது தான் இந்த வெற்றி - கிச்சா சுதீப் ஓபன் டாக்..!
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒவ்வொன்றாக தனது அடையாளத்தை பரப்பியதோடு, தற்போது மலையாள திரையுலகிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். இப்படியாக பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள புதிய மலையாளப் படம் ‘மைனே பியார் கியா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை பைசல் பாசிலுதீன் என்பவர் இயக்கியுள்ளார். இதில், கதாநாயகனாக சமீபத்தில் திரைக்கு வந்த த்ரில்லர் திரைப்படமான ‘முரா’வில் நடித்த ஹிருது ஹாரூண் நடிக்கிறார். ஹிருது, மலையாள சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரவேற்கப்படும் இளம் கதாநாயகர்களில் ஒருவர். இந்த படத்தில், பிரீத்தி மற்றும் ஹிருதுவுடன் சேர்ந்து, அனார்கலி மரிக்கார் மற்றும் அல்தாஃப் சலீம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தக் காட்சிகளில் நகைச்சுவை, காதல், உணர்வு என அனைத்து வகை உணர்வுகளும் கலந்து வந்திருப்பதாக டீசரில் தெரிவிக்கிறது. இப்படி இருக்க ‘மைனே பியார் கியா’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 1.5 நிமிடங்கள் நீளமுள்ள இந்த டீசர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

படத்தில் காதல், கலாசாரம், நகரப்பெரும் எதிர்கால கனவுகள், குடும்பத்தின் எதிர்பார்ப்பு, சமூக கட்டுப்பாடுகள் போன்ற பல பரிமாணங்கள் விவாதிக்கப்படுவதை இந்த டீசர் மூலம் உணர முடிகிறது. குறிப்பாக, ஹிருதுவும் பிரீத்தியும் பகிரும் காட்சிகளில் காணப்படும் இயற்கையான உளவியல் காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், அனார்கலி மரிக்காரின் உணர்ச்சி மிகுந்த நடிப்பும், அல்தாஃப் சலீமின் நகைச்சுவையுடனான பங்களிப்பும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன. மேலும் பிரீத்தி முகுந்தன் தற்போது தமிழில் ‘ஸ்டார்’, தெலுங்கில் ‘ஓம் பீம் புஷ்’ என தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், மலையாள திரையுலகிலும் தனது திறமையை நிரூபிக்க தயாராக உள்ளார். பல மொழிகளில் நுட்பமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம், பாரம்பரிய அழகு, நவீனத்துவம், நுணுக்கம் மற்றும் உணர்வு ஆகிய அனைத்தும் உள்ளடங்கிய ஓர் இளம் நடிகையாக திகழ்கிறார். இப்படத்தின் டீசர் வெளியீட்டில் பங்கேற்ற பிரீத்தி, "இந்த படம் எனக்கு ஒரு புதிய ஆரம்பம் மட்டுமல்ல.. என் மனதிற்கே நெருக்கமான படைப்பு" என தெரிவித்ததோடு, மலையாள ரசிகர்களின் ஆதரவை பெறத் துடிப்பதாகவும் கூறினார்.
👉🏻 Maine Pyar Kiya Official Teaser | Hridhu Haroon Preity Mukhundhan | click here 👈🏻
தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதுபோல, ‘மைனே பியார் கியா’ திரைப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் மியூசிக், ஒளிப்பதிவு, பின்னணி இசை, வசனங்கள் அனைத்தும் சமீபத்திய மலையாள சினிமா தரச்சான்றுகளை பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளன. கதை, நடிகர்கள், இயக்கம் என பல அம்சங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெரிதும் தூண்டியுள்ளன. மேலும் டீசர் வெளியானதிலிருந்து, சமூக ஊடகங்களில் இளசுகளின் பாராட்டுக்கள் அதிகளவு குவிந்து வருகின்றன. மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது, தமிழிலும் தெலுங்கிலும் பிரீத்தியின் ரசிகர்கள் இப்படம் குறித்த எதிர்பார்ப்பை வெளியிட்டு வருகிறார்கள். மொத்தத்தில் மலையாள சினிமா தற்போது பல புதிய முகங்களை வரவேற்கும் நேரத்தில், பிரீத்தி முகுந்தன் தனது திறமையாலும் அழகாலும், தனக்கென ஓர் இடத்தைப் பெற துடிப்புடன் களமிறங்கியுள்ளார். ஆகவே ‘மைனே பியார் கியா’, அவரது புதிய மொழிப் பயணத்தில் ஒரு முக்கிய கட்டமாகவே பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் டீசரால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருப்பதால், திரைப்படம் திரைக்கு வரும் ஆகஸ்ட் 29 அன்று தான் படம் எதிர்பார்க்கு ஏற்றவாறு உள்ளதா..? இல்லையா..? என்பது தெரிய வரும். இந்த படத்திற்கு மலையாள திரையுலகிலிருந்து மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் இருந்து வரவேற்பும், பாராட்டும் கிடைக்க பிரீத்தியின் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: 'சேது' பட ரீ-மேக்கால் கிடைத்த வாழ்க்கை..! வலியோடு கிடைத்தது தான் இந்த வெற்றி - கிச்சா சுதீப் ஓபன் டாக்..!