தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பும், இயல்பான முகபாவனைகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தை படைத்தவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. 'பீட்சா, சூதுகவ்வும், 96, விக்ரம்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர், சமீபத்தில் வெளியான 'மகாராஜா' திரைப்படத்தின் மூலம் தனது நடிப்புத் திறனை மேலும் மெருகேற்றினார். அந்த வெற்றியின் பின்னர், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான 'தலைவன் தலைவி' திரைப்படம், 2025-ம் ஆண்டின் அற்புதமான படமாக வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்துள்ளது.
இந்தப் படத்தில் நித்யா மேனன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்க, இவர்களின் கெமிஸ்ட்ரி திரையரங்குகளில் பார்வையாளர்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இத்-திரைப்படம் வெளியாகிய நான்கு நாட்களில், உலகளவில் ரூ.40 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து, 'தலைவன் தலைவி' படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி, நித்யா மேனன் மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த கோபிநாத் பேசும் பொழுது, பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டன. ஆனால், நிகழ்ச்சியின் முக்கியமான நிமிடமாக மாறும் பொழுது, விஜய் சேதுபதி தனது தனிப்பட்ட வாழ்க்கை சம்பவம் ஒன்றை மிக நேர்மையாக பகிர்ந்தார். அவர் பேசுகையில், "இது நான் பொது மேடையில் சொல்லலாமா தெரியல. ஆனா ஒரு விஷயம் மனசுல இருந்தது. அதைக் கொண்டு நான் பேசுறேன்" என தொடங்கிய விஜய் சேதுபதி, ஒருமுறை என் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், மனஉளைச்சல் மற்றும் கோபத்தால் நான் அவளின் கழுத்தைப் பிடிச்சு, செவுத்துல வச்சுட்டேன். அது வெறும் ஐந்து நிமிஷம் தான் இருந்தது. ஆனா அதுக்கப்புறம் எனக்கு மிகவும் வருத்தமா இருந்தது. அவங்க என்ன தான் தப்பு செய்தாலும், கை வைக்கக்கூடாது. அது பெரிய தப்புனு உணர்ந்தேன். உடனே மன்னிப்பு கேட்டேன். மனசில ரொம்ப ஃபீல் பண்ணேன்" என கூறினார்.

அவரது இந்த உணர்வுப்பூர்வமான பகிர்வை கேட்ட உடன், நிகழ்ச்சியில் இருந்த அனைவருக்கும் ஒரு மெல்லிய புன்னகையோடு திமிர் கலந்த சிந்தனை கிளம்பியது. விஜய் சேதுபதியின் இந்த நேர்மையான பகிர்வு, ஒரு நடிகராக மட்டுமல்ல, மனிதராகவும் அவர் எவ்வளவு உணர்வுப்பூர்வமானவர் என்பதையும், தன் தவறை வெளிப்படையாக ஏற்று மன்னிப்புக் கேட்பதற்கும் தயங்காத தன்மையை நிரூபிக்கின்றது. இவரது இந்த வார்த்தைகள் சமூக ஊடகங்களில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. பலரும் அவரை பாராட்டி கருத்துக்கள் பகிர்ந்துள்ளனர். சிலர், "தன் தவறை ஏற்றுக்கொள்வது நல்ல பண்பு" எனவும் "விஜய் சேதுபதியின் உண்மை மனசாட்சி அவரை உயர்த்துகிறது" எனவும் "எதிர்பாராத அளவில் நம்மை ஆழமா பாதிக்கிறது இந்தக் காட்சி" என பாராட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதி - பூரி ஜெகநாத் கூட்டணியில் தயாராகும் புது படம்..! சீக்ரட்டாக கிறிஸ்துமஸ்-க்கு ரிலீஸ் செய்ய திட்டம்..!
இது மட்டுமின்றி, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் நித்யா மேனனும், இந்த அனுபவத்தை கேட்டு நெகிழ்ச்சியடைந்தனர். அவரை தொடர்ந்து நித்யா மேனன் கூறும்போது, "அந்த உண்மைத் தன்மை தான் விஜய் சேதுபதியை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்துகிறது" என தெரிவித்துள்ளார். மேலும் 'தலைவன் தலைவி' திரைப்படத்தின் வெற்றியோடு சேர்ந்து, விஜய் சேதுபதி நிகழ்த்திய இந்த நேர்மையான பகிர்வும், அவரை ரசிகர்கள் மத்தியில் இன்னும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்த நிகழ்வு, பிரபலங்களும் மனிதர்களே என்பதை மீண்டும் ஒருமுறை நினைவூட்டும் வகையில் அமைந்திருக்கிறது. ஒரு நடிகராக மட்டும் இல்லாமல், சமூகத்தில் ஒரு பொறுப்புள்ள நபராக விஜய் சேதுபதி தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்திய விதம், உண்மையில் பாராட்டத்தக்கது.

ஆகேவ நடிப்பிலும், வாழ்க்கையிலும் உண்மையை சொல்லும் தைரியம், தன்மானம், நேர்மை என இவை அனைத்தும் தான் உண்மையான தலைவனை உருவாக்குகின்றன.
இதையும் படிங்க: தினமும் புதுசு புதுசா பரோட்டா செய்து கொடுத்த விஜய் சேதுபதி..! முகம் சிவக்க நடிகை நித்யா மேனன் நெகிழ்ச்சி பேச்சு..!