தயாரிப்பாளரும் இயக்குநருமான பூரி ஜெகநாத், தனது இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்தப் படம் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, பல மொழிகளில் வெளியாக உள்ள அற்புதமான படமாக அமைந்துள்ளது. இப்படி இருக்க சமீபத்திய தகவல்களின் படி, இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாம். அதன் பின்னர் ஃபோஸ்ட் ஃப்ரொடக்ஷன் வேலைகள் ஒழுங்கு செய்யப்பட்டு, படம் கிறிஸ்துமஸ் ரிலீஸாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், தற்போது வரை கிறிஸ்துமஸ் சீசனில் வெளியிடப் பெரிய படங்கள் எதுவும் இல்லை.ஆகவே அப்பொழுது இந்த படத்தை வெளியிட முடிவெடுத்து இருப்பது வரவேற்புக்குரியதாக பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு இணையாக முன்னணி நடிகைகள் பலர் நடிக்கின்றனர். அவர்களில் முக்கியமானவர்கள் தபு, சம்யுக்தா மேனன், நிவேதா தாமஸ் ஆகியோர் தான். அவர்களுடன் ‘துனியா’ விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர் நடிகைகள் பலர் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு கதாப்பாத்திரமும் தனித்துவம் மிக்கதாக இருப்பதாக படக்குழுவிர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. படத்தின் பெரும் ஆச்சரியங்களில் ஒன்று என பார்த்தால், இதுவரை இப்படத்தின் தலைப்பை வெளியிடப்படாமல் ரகசியமாகவே வைத்திருப்பதே.

இது படத்தின் மீதான குழப்பத்தையும், எதிர்பார்ப்பையும் மேலும் அதிகரிக்கிறது. ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரைத்துறையினர் என பலரும் இப்படம் குறித்த அப்டேட்டுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். பொதுவாக, பூரி ஜெகநாத் இயக்கும் திரைப்படங்கள் விறுவிறுப்பும், வேகமும், வித்தியாசமான கதை நடப்பும் கொண்டதாக இருப்பது வழக்கம். இவரது கடந்த படங்களைப் பார்த்தாலும், சில மோசமான தாக்கம் ஏற்படுத்தியிருந்தாலும், அவருடைய ஸ்டைல் மற்றும் தெளிவான கதைத்திறமைக்கு ஒரு ரசிகர் கூட்டம் எப்போதும் இருக்கிறது. இப்படத்தை நடிகை சார்மி கவுர் தயாரிக்கிறார். பூரி ஜெகநாதுடன் நீண்டநாள் தொழில்நட்ப இணைப்பில் உள்ள இவர், இப்படத்தின் பெரும் பொருளாதார பொறுப்புகளை ஏற்று வருகின்றார்.
இதையும் படிங்க: தினமும் புதுசு புதுசா பரோட்டா செய்து கொடுத்த விஜய் சேதுபதி..! முகம் சிவக்க நடிகை நித்யா மேனன் நெகிழ்ச்சி பேச்சு..!
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது. இப்போதைக்கு, இப்பட படப்பிடிப்பு முடிவடையும் வரை, படத்தின் தலைப்பும், பாடல்களும், டீசரும் வெளியிடப்படாமல் இருக்கலாம். ஆனால் ஓரிரு வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முழுக்க முழுக்க கமெர்ஷியல் கலவையுடன் உருவாகும் இப்படம், விஜய் சேதுபதியை இதுவரை யாரும் காணாத வேடங்களில் அவரை காட்டும் என்று சினிமா வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. இதுவரை அவர் தேர்வு செய்த கதைகளுக்கு முற்றிலும் மாறாக, வித்தியாசமான ஒரு மாஸ் அவதாரத்தில் அவரை காணமுடியும் என பூரி ஜெகநாத் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இப்படத்தின் இசை, ஒளிப்பதிவு, கலை இயக்கம் உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்தும் A-லிஸ்ட் தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகி வருகிறது. அதனால், பாக்ஸ் ஆஃபிஸில் இப்படம் வெற்றியைப் பெரும் என்ற நம்பிக்கையை படக்குழுவும், ரசிகர்களும் வைத்திருக்கின்றனர். இந்த கிறிஸ்துமஸ் சீசனில் எந்த பெரிய படமும் இல்லாத சூழலில், இப்படம் சூப்பர் ஹிட் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அதேசமயம், இது பூரி ஜெகநாத் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியின் முதல் முயற்சி என்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பும் அதிகப்படியாக நிலவுகிறது. தற்போது வரை பெயரிடப்படாத இப்படம், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது.
இதையும் படிங்க: A RUGGED LOVE STORY.. மாஸாக வெளியானது 'தலைவன் தலைவி' ட்ரெய்லர்..!