திறமைசாலியான நடிகர்கர்கள் வரிசையில் முக்கியமான ஒருவராக பார்க்கப்படுபவர் தான் விஜய் சேதுபதி. இவர் தனது தனித்துவமான நடிப்புத் திறமையால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பெற்றுள்ளார். வித்தியாசமான கதைகளையும், சிக்கலான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து, திரையுலகில் தனக்கென ஒரு ஒரு இடத்தை பிடித்து அமர்ந்து இருக்கிறார். இப்படி இருக்க சமீபத்தில் வெளியான ‘தலைவன் தலைவி’ என்ற திரைப்படம், விஜய் சேதுபதியின் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பாண்டிராஜ் இயக்கிய இந்த திரைப்படத்தில் நித்யா மேனன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த இத்திரைப்படம், வெளியான முதல் 6 நாட்களில் ரூ. 50 கோடிக்கு மேலான வசூலை பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த சூழலில் திரைப்பட வெற்றிக்கு பிறகு, விஜய் சேதுபதி தனது அடுத்த படைப்பை ஓடிடி தளத்தில் கொண்டு வர தயாராகி இருக்கிறார். அவரின் அடுத்த முயற்சி ஒரு வெப் சீரீஸாம்.. ‘முத்து என்கிற காட்டான்’ என்ற தொடரை இயக்கியிருப்பவர் மணிகண்டன், தமிழ்சினிமாவில் 'காக்கா முட்டை', 'அண்டவன் கட்டளை', 'கடைசி விவசாயி' போன்ற சமூக உணர்வுகள் மிக்க திரைப்படங்களை வழங்கியவர். இப்போது, இந்த வெப்சீரீஸ் விஜய் சேதுபதியின் தயாரிப்பில், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த ‘முத்து என்கிற காட்டான்’ என்பது வெறும் வெப்சீரீஸ் அல்ல. இது ஒரு உணர்வும், இயற்கையும், சமூக கருத்துகளும் கலந்த ஒரு அருமையான தொடர் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் சேதுபதி, ஒரு வனப்பகுதியில் வசிக்கும் சாதாரண மனிதனாக நடிக்கிறார். அவர் சமூகத்தில், இயற்கையுடனும், மனிதர்களுடனும் கொண்ட உறவுகள், அரசியல் பிணைப்புகள், நம்பிக்கைகள் என அனைத்தும் இந்த தொடரின் சுழற்சி ஆக இருக்கிறது.

இந்த தொடரில், பல ஆண்டுகள் ஹிந்தி சினிமாவை ஆட்சி செய்த ஜாக்கி ஷெராப், முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமிழ் திரையுலகில் இது அவருக்கான மிக முக்கியமான பங்களிப்பாகும். அவரது வலுவான காட்சிகள், இயற்கையான நடிப்பு, விஜய் சேதுபதியின் பாசாங்கில்லாத பண்பு என இருவரின் இணைப்பு இந்த தொடரை ஒரு புதிய அளவுக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக மணிகண்டன் இயக்கும் படைப்புகள் வழக்கமாக மனித நேயம், சமூக விமர்சனம், இயற்கை அழகு, மற்றும் வாழ்க்கையின் மீதான நுண்ணறிவான பார்வை ஆகியவற்றைக் கொண்டிருக்கும். ஆகேவ ‘காக்கா முட்டை’ படம் குழந்தைகள் வாழ்க்கையின் பின்னணியில் நகரும்போது, ‘கடைசி விவசாயி’ ஒரு மரணத்தை நோக்கிச் செல்லும் வயதான விவசாயியின் துயரச் சுவடுகளைச் சொன்னது. அதே போல, ‘முத்து என்கிற காட்டான்’ தொடரும், காட்டை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு மனிதக் கதை எனக் கூறப்படுகிறது. தனக்கென ஒரு பாதையை வகுத்து, ஆழமான கதையமைப்புடன், மென்மையான காட்சிகளைச் சொல்வதில் மணிகண்டனின் இயக்கத் திறமை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருமண நாளை இப்படியும் கொண்டாடலாமா..! நிக்கோல் சச்தேவ் – வரலக்ஷ்மி பகிர்ந்த வீடியோ வைரல்..!
இந்த முறை விஜய் சேதுபதி மற்றும் மணிகண்டன் கூட்டணி, தமிழ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. மேலும் ‘முத்து என்கிற காட்டான்’ வெப்சீரீஸ், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியிடப்படுகிறது. சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்காக விரைவில் அறிவிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, வெளியான படப்பிடிப்பு ஸ்னாப்கள், பின் தயாரிப்பு காட்சிகள், மற்றும் விஜய் சேதுபதியின் ராஸிக ஹெவி லுக்க், சமூக ஊடகங்களில் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆகவே ‘தலைவன் தலைவி’ படத்தின் சாதனையை தொடர்ந்து, இப்படியான சமூக வாசனை மிக்க ஒரு இணையத் தொடரில் விஜய் சேதுபதி நடிப்பது, அவரின் வேரியட் தேர்வுகளை மேலும் வலுப்படுத்துகிறது. பொதுவாகவே, விஜய் சேதுபதி வணிக ரீதியாக வெற்றி பெறும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுப்பவர் அல்ல. ஆகவே ‘முத்து என்கிற காட்டான்’ தொடரும், அவரது திரைபயணத்தில் ஒரு கலாசாரப் பூர்வமான, சிந்தனையூட்டும் படைப்பு என பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் விஜய் சேதுபதி, மணிகண்டன், ஜாக்கி ஷெராப் என பலதரப்பட்ட திறமைகள் இணையும் இந்த புதிய வெப்சீரீஸ், தமிழ் ஓடிடி உலகத்தில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'முத்து என்கிற காட்டான்' ஒரு வெறும் வனப் பகுதியில் நடக்கும் கதை அல்ல.

அது மனிதம், இயற்கை, சமூகக் கருத்துக்கள், மற்றும் வாழ்வின் அடிப்படை உணர்வுகளை உள்ளடக்கிய ஒரு கலைப்படைப்பு என்று விமர்சகர்களும் எதிர்பார்த்து கருத்து தெரிவிக்கின்றனர். எனவே ஜியோ ஹாட்ஸ்டாரில் விரைவில் வெளியிடப்படும் இந்த தொடருக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா.. வெட்கக்கேடு..! இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் பதிவால் சர்ச்சை..!