தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்தபடியான ஸ்டார் ஹீரோ என்றால் அவர்தான் ரசிகர்களால் அன்புடன் தளபதி என அழைக்கப்படும் நடிகர் விஜய். அப்படிப்பட்ட அவர் தனது அடுத்த படமான லியோ-2 வில் நடிப்பார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் இனி சினிமாவில் இருந்து விலகி முழு அரசியலில் ஈடுபட போவதாக கூறி அனைவரையும் திக்கு முக்காட வைத்தார். அதனைத் தொடர்ந்து தனது கடைசி படத்தை எச்.வினோத் இயக்கத்தில் "ஜனநாயகன்" திரைப்படத்தில், பூஜா ஹெக்டே,
பாபிஜியோல், மமீதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட சக நடிகர்களுடன் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.

இப்படத்தில் அரசியல் கட்சிகளில் ஜெயிக்க வாக்குகள் எவ்வளவு முக்கியம் என்றும் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் பற்றியும் பேசும் படமாக ஜனநாயகன் படம் உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதுதான் படத்தின் கதைக்களமாக இருக்கும் என்றும் அதுமட்டுமல்லாமல் விஜய் அரசியலில் களமிறங்கி இருப்பதால் புரட்சிரமான வசனங்களை இப்படத்தில் எழுதி இருக்கிறார் இயக்குநர் ஹெச். வினோத். மேலும் பல பன்ச் வசனங்கள் அனைத்தும் தீயாய் இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இதையும் படிங்க: விஜயின் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் ட்ரீட்.. பட்டையை கிளப்ப மீண்டும் வருகிறது தளபதியின் ஹிட் படம்..!

இந்த படம் 2026 ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்திற்கான அப்டேட்டுகளை படக்குழுவினர் கொடுத்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அட்லி ஆகிய மூன்று பேரும் இப்படத்தில் வரும் குறிப்பிட்ட பாடலில் "நடிகர் விஜய்க்கு சென்ட் ஆஃப் கொடுக்கும் காட்சிகளில்" நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, இப்படத்தில் நடிகர் விஜயுடன் பூஜா ஹெக்டேவும் சிறப்பு நடனம் ஆடியுள்ளதால் இப்படத்தின் முதல் பாடல் தளபதி விஜயின் பிறந்த நாள் அன்று வெளிவரும் என படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 'ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் விஜய் பிறந்தநாளை ஒட்டி, வரும் 22ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. போஸ்டரை வெளியிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம். இதனை அறிந்த விஜயின் அன்பு நெஞ்சங்கள் செம குஷியில் உள்ளனர். மேலும் இது விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இதையும் படிங்க: பெண் பிள்ளைகள் மீது விஜய் கைபோடுறாரா.. துடுக்காக பேசிய வேல்முருகனை திணறடிக்க செய்த தாடி பாலாஜி..!