தமிழில் பெரும் வெற்றி பெற்ற ‘லப்பர் பந்து’ படத்தை இந்தியில் ஷாரூக்கான் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'கெத்து' தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா உள்படட்ட பலர் நடிப்பில், தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் 2024 செப்டம்பர் 20-ஆம் தேதி வெளியானது. தமிழில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது ‘லப்பர் பந்து’. விமர்சன ரீதியாகவும் இப்படம் கொண்டாடப்பட்டது. வசூலிலும் சாதித்தது. மேலும் பல்வேறு திரையுலக பிரபலங்கள் இப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டினார்கள். இதன் மூலம் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுக்கும் பெயர் கிடைத்தது.

இந்நிலையில் தற்போது ‘லப்பர் பந்து’ படத்தை ஷாரூக்கான் இந்தியில் ரீமேக் செய்ய விருப்பம் தெரிவித்திருப்பதாக நடிகை சுவாசிகா அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது கதாபாத்திரத்தில் தானே நடிக்க வேண்டும் என்று ஷாரூக்கான் கூறியிருப்பதாகவும் சுவாசிகா தெரிவித்துள்ளார். இதன்மூலம் கெத்து கதாபாத்திரத்தில் ஷாரூக்கான் நடிப்பார் என்று தெரிகிறது. இதன் மூலம் இந்தியில் ‘லப்பர் பந்து’ விரைவில் ரீமேக் ஆகவிருப்பது உறுதியாகி உள்ளது.
இதையும் படிங்க: லப்பர் பந்து சுவாசிகாவா இது? மாடர்ன் ட்ரெஸ்ஸிங் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்குறாங்களே!
இதையும் படிங்க: மகனுக்காக ஒன்று சேர்ந்த தனுஷ் - ஐஸ்வர்யா... Proud Parents ஆக மாறிய நெகிழ்ச்சி தருணம்!!