• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    பிக்பாஸ் வீட்டில் அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடி திருப்பங்கள்..!! ரூ.5 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேற முடிவு செய்த குமரன்? காரணம் இதுதான்..!

    ரூ.5 லட்சம் பணப்பெட்டியுடன் குமரன் வெளியேற முடிவு செய்த காரணம் தெரியவந்துள்ளது.
    Author By Bala Thu, 01 Oct 2026 11:16:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamil- bigg-boss-10-30th-september-2026-promo-3-cinima

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள், சண்டைகள், காதல், நட்பு, எதிர்பாராத வெளியேற்றங்கள் என பல்வேறு சம்பவங்கள் அரங்கேறுவது வழக்கம். ஆனால் இந்த முறை தொடங்கியுள்ள பிக்பாஸ் 10வது சீசனில் ஆரம்பம் முதலே எதிர்பாராத பல திருப்பங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வருவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி பிக்பாஸ் 10வது சீசன் தொடங்கிய நிலையில், நிகழ்ச்சி தொடங்கிய சில வாரங்களிலேயே போட்டியாளர்கள் தொடர்பாக பல்வேறு பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. குறிப்பாக, நிகழ்ச்சியில் வழக்கமான நடைமுறைகளுக்கு மாறாக சில முடிவுகள் எடுக்கப்பட்டு வருவது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

    அதில் முக்கியமாக பேசப்பட்டது 'Leader Exit Poll' தொடர்பான நடவடிக்கைதான். இந்த முறையை பயன்படுத்தி ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்ட நிலையில், பின்னர் அவருடன் மேலும் இருவர் இணைந்து மீண்டும் நிகழ்ச்சிக்குள் என்ட்ரி கொடுத்ததாக கூறப்பட்டது. இதனால் நிகழ்ச்சியின் போக்கு குறித்து ரசிகர்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புகள் உருவாகின.

    இதையும் படிங்க: பிக் பாஸ் 10 தொடக்கம்.. மீசை எங்கபோச்சி விஜய் சேதுபதி..!! தொகுப்பாளரின் புதிய லுக்கை பார்த்து கலாய்த்த மோகன்லால்..!

    இதற்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்கள்கூட நிறைவடையாத நிலையில், வைல்டு கார்டு என்ட்ரியும் நடைபெற்றது. ஏற்கெனவே வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் எண்ணிக்கை மற்றும் போட்டியின் சூழ்நிலை பரபரப்பாக இருக்கும் நிலையில், புதிதாக ஒருவர் வீட்டுக்குள் வந்தது நிகழ்ச்சிக்கு மேலும் விறுவிறுப்பை ஏற்படுத்தியது.

    bigg boss

    இப்போது அதைவிட சுவாரஸ்யமான ஒரு திருப்பம் நிகழ்ச்சியில் அரங்கேற இருப்பதாக தெரிகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை புதிய என்ட்ரி ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வர இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான புரொமோக்களும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.இப்படி நிகழ்ச்சியில் அடுத்தடுத்து புதிய மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது போட்டியாளர் குமரன் தொடர்பான விஷயம் தான் பிக்பாஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    பிக்பாஸ் 10வது சீசன் தொடங்கியபோது ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்களில் ஒருவராக குமரன் இருந்தார். நிகழ்ச்சியின் ஆரம்ப கட்டத்திலேயே அவரது செயல்பாடுகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், அவர் இறுதிப்போட்டி வரை செல்வார் என்ற எதிர்பார்ப்பும் பலரிடம் இருந்தது.ஆனால் தற்போது வெளியாகியுள்ள புரொமோ அந்த எதிர்பார்ப்பையே தலைகீழாக மாற்றியள்ளது.

    அதில், குமரன் ரூ.5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது குறித்து பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. இதற்கான காரணமாக அவர் தனது தந்தையின் உடல்நிலையை குறிப்பிட்டிருப்பது பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவருக்கு அதிகமாக மறதி ஏற்படுவதாகவும் குமரன் வேதனையுடன் பேசுகிறார். இதுபோன்ற சூழ்நிலையில் தான் பிக்பாஸ் வீட்டுக்குள் தொடர்ந்து இருப்பது சரியா என்ற கேள்வியும் அவருக்குள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

    “அப்பாவுக்கு ஏதாவது ஆகிவிட்டால், அதற்குப் பிறகு என்னால் என்னை மன்னித்துக்கொள்ளவே முடியாது” என்ற வகையில் அவர் கண்ணீர் மல்க கூறும் காட்சிகள் புரொமோவில் இடம்பெற்றுள்ளன. தனது குடும்ப சூழ்நிலையை நினைத்து குமரன் கதறி அழும் நிலையில், அவருடன் இருக்கும் சக போட்டியாளர்களும் உணர்ச்சிவசப்பட்டு அழும் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

    bigg boss

    பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் பொதுவாக தங்களது தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம் மற்றும் வெளியில் இருக்கும் உறவுகளை நினைத்து உணர்ச்சிவசப்படுவது வழக்கம். ஆனால், குமரனின் இந்த முடிவு அவரது தனிப்பட்ட குடும்ப சூழ்நிலையுடன் நேரடியாக தொடர்புடையதாக இருப்பதாக புரொமோவில் காட்டப்பட்டுள்ளது.

    குறிப்பாக, இறுதிப்போட்டி வரை செல்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த ஒரு போட்டியாளர், திடீரென ரூ.5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறுவது போன்ற சூழ்நிலை உருவாகியிருப்பது நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

    அதே நேரத்தில், குமரன் உண்மையிலேயே பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அல்லது இது நிகழ்ச்சியின் அடுத்தடுத்த எபிசோடுகளில் வேறு ஒரு திருப்பத்திற்கு வழிவகுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பது முழுமையாக தெரியவில்லை. இதற்கான பதில் நிகழ்ச்சியின் அடுத்த எபிசோடில் தான் தெரியவரும்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் புரொமோ காட்சிகள் மூலம் ஒரு விஷயம் பரபரப்பாக காட்டப்பட்டு, அதன் முழு பின்னணி எபிசோடில் வெளியாகும் சம்பவங்கள் ஏற்கெனவே பலமுறை நடந்துள்ளன. எனவே குமரனின் இந்த முடிவும் எந்த திசையில் செல்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    bigg boss

    இருப்பினும், தந்தையின் உடல்நிலை குறித்து குமரன் பேசியிருக்கும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டி, வெற்றி, பணம் ஆகியவற்றை விட குடும்பம் முக்கியம் என்ற அவரது உணர்வு பலரையும் நெகிழ வைத்துள்ளது.

    ஒருபுறம் பிக்பாஸ் வீட்டுக்குள் புதிய போட்டியாளர் வருகிறார் என்ற எதிர்பார்ப்பு; மறுபுறம் ரசிகர்கள் இறுதிப்போட்டி வரை செல்வார் என்று கணித்த குமரன் வெளியேறப் போகிறார் என்ற அதிர்ச்சி தகவல் என இந்த வார இறுதி எபிசோடுகள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    ரூ.5 லட்சம் பணப்பெட்டியை குமரன் உண்மையில் எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா? அவரது தந்தையின் உடல்நிலை தொடர்பான காரணம் என்ன? குமரனின் முடிவை சக போட்டியாளர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? மேலும், இந்த முடிவால் பிக்பாஸ் 10வது சீசனின் ஆட்டத்தில் என்ன மாற்றம் ஏற்படப்போகிறது? என்பதற்கான விடை வரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    எதிர்பாராத திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் 10வது சீசனில், குமரனின் இந்த முடிவு ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு முக்கியமான தருணமாக அமையப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.

    இதையும் படிங்க: மீசைய முறுக்கு 2: 5 நாட்களில் பல கோடி வசூலா..!! படத்தின் தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை கேட்டா ஆடிபோயிடுவிங்க..!

    மேலும் படிங்க
    பட்டாசு ஆலை வெடி விபத்து..! தரைமட்டமான கட்டடம்... இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு..!

    பட்டாசு ஆலை வெடி விபத்து..! தரைமட்டமான கட்டடம்... இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு..!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையருக்கு எதிராக திரண்ட மக்கள் கூட்டம்! மும்பை சிவாஜி பூங்காவில் CJP போராட்டம்!

    தேர்தல் ஆணையருக்கு எதிராக திரண்ட மக்கள் கூட்டம்! மும்பை சிவாஜி பூங்காவில் CJP போராட்டம்!

    இந்தியா
    கரண்ட் இல்லையா.. இனி கவலை வேண்டாம்..! புகார் எண்களை அறிமுகம் செய்த அமைச்சர் நிர்மல் குமார்..!

    கரண்ட் இல்லையா.. இனி கவலை வேண்டாம்..! புகார் எண்களை அறிமுகம் செய்த அமைச்சர் நிர்மல் குமார்..!

    தமிழ்நாடு
    "செல்லமே மாமாவ பாருடா"..! தவெக துண்டுடன் வந்த குழந்தை... அள்ளிக் கொஞ்சிய முதல்வர் விஜய்..!!

    "செல்லமே மாமாவ பாருடா"..! தவெக துண்டுடன் வந்த குழந்தை... அள்ளிக் கொஞ்சிய முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    "மூக்கணாங்கயிறு கட்டிய பசு மாடு போல"..! "மோடி, அமித் ஷாவிடம் சீரழியும் தேர்தல் ஆணையம்".! மனோ தங்கராஜ் விமர்சனம்..!!

    "மூக்கணாங்கயிறு கட்டிய பசு மாடு போல"..! "மோடி, அமித் ஷாவிடம் சீரழியும் தேர்தல் ஆணையம்".! மனோ தங்கராஜ் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    யாரையோ திருப்திபடுத்த அரசு மருத்துவர்கள் மீது வீண் பழியா? தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கொந்தளிப்பு!

    யாரையோ திருப்திபடுத்த அரசு மருத்துவர்கள் மீது வீண் பழியா? தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கொந்தளிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பட்டாசு ஆலை வெடி விபத்து..! தரைமட்டமான கட்டடம்... இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு..!

    பட்டாசு ஆலை வெடி விபத்து..! தரைமட்டமான கட்டடம்... இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு..!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையருக்கு எதிராக திரண்ட மக்கள் கூட்டம்! மும்பை சிவாஜி பூங்காவில் CJP போராட்டம்!

    தேர்தல் ஆணையருக்கு எதிராக திரண்ட மக்கள் கூட்டம்! மும்பை சிவாஜி பூங்காவில் CJP போராட்டம்!

    இந்தியா
    கரண்ட் இல்லையா.. இனி கவலை வேண்டாம்..! புகார் எண்களை அறிமுகம் செய்த அமைச்சர் நிர்மல் குமார்..!

    கரண்ட் இல்லையா.. இனி கவலை வேண்டாம்..! புகார் எண்களை அறிமுகம் செய்த அமைச்சர் நிர்மல் குமார்..!

    தமிழ்நாடு

    "செல்லமே மாமாவ பாருடா"..! தவெக துண்டுடன் வந்த குழந்தை... அள்ளிக் கொஞ்சிய முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு

    "மூக்கணாங்கயிறு கட்டிய பசு மாடு போல"..! "மோடி, அமித் ஷாவிடம் சீரழியும் தேர்தல் ஆணையம்".! மனோ தங்கராஜ் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    யாரையோ திருப்திபடுத்த அரசு மருத்துவர்கள் மீது வீண் பழியா? தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கொந்தளிப்பு!

    யாரையோ திருப்திபடுத்த அரசு மருத்துவர்கள் மீது வீண் பழியா? தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கொந்தளிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share