வைகைப்புயல் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்டும் வடிவேலுவின் திரையுலக பயணம் 1988 ஆம் ஆண்டு தொடங்கி 2005ம் ஆண்டு வரை நீடித்து கொண்டே இருக்கிறது. ஆனால் இவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் என்றால் அது கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் சிம்புதேவனின் இயக்கத்தில் வெளிவந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ தான். இப்படத்தில் தான் முதன் முதலாக இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடித்தார். இதனை தொடர்ந்து, 2008 ஆம் ஆண்டு தம்பிராமையா இயக்கத்தில் ‘இந்திரலோகத்தில் நான் அழகப்பன்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அதேபோல் தெனாலிராமன், எலி, நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற படங்களில் நடித்தார்.

இதனிடையே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக "மாமன்னன்" படத்தில் அட்டகாசமாக நடித்து இருந்தார் வடிவேலு. அந்த படத்தில் பஹத் பாசில் வில்லன் கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார். இந்த நிலையில், நடிகர் வடிவேலு-ம் பஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் "மாரீசன்". மலையாள இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் கிராமிய பின்னணியில் ட்ராவலிங் திரில்லராக உருவான இத்திரைப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது படமாக உருவாகும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இதையும் படிங்க: 3BHK பட வெற்றி விழாவில் சுவாரசியம்.. இசையமைப்பாளருக்கு காஸ்ட்லி கிப்ட் கொடுத்த சரத்குமார்..!

சமீபத்தில் இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி நான்கு மில்லியன் பார்வையாளர்களையும் கடந்ததால், "மாரீசன்" படத்தைப் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகி வருகிறது. முழுக்க முழுக்க காமெடி காட்சிகளை கொண்டிருக்கும் இந்த திரைப்படம் வரும் ஜூலை மாதம் 25ம் தேதி அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனை பார்த்த ரசிகர்கள் வடிவேலு மற்றும் பஹத் பாசில் காம்போவில் வெளியாகவுள்ள "மாரீசன்" பட ரிலீசுக்காக காத்திருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பகத் பாசிலின் பாடல் நாளை மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக படக்குழு தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: சீரியலில் நடிக்கும் ஸ்மிருதி இரானி... சம்பளம் எவ்வளவு தெரியுமா? வாயை பிளக்க வைக்கும் தொகை!!