அதாவது, ரேவதி வெளிநாடு கிளம்ப தயாராகுகிறாள். அதே போல் சிவனாண்டி ஊருக்கு வந்திருக்கிறான். அப்போது அபிராமி காஸ்மெட்டிக் கம்பெனியின் அருகே கார்த்திக் ஒரு வெள்ளைக்காரனுடன் கை கொடுத்து கொண்டு இருப்பது போல் ஒரு பேனர் இருக்கிறது.
இதை பார்த்த சிவனாண்டி ஷாக் ஆகி விசாரிக்க டிரைவராக இருப்பது ராஜா இல்ல கார்த்திக் என்ற விஷயம் தெரிய வருகிறது, ராஜசேதுபதியின் பேரன் என்ற விஷயத்தையும் அறிகிறான். உடனே ஊருக்கு கிளம்புகிறான்.

ஊருக்கு வந்ததும் சந்திரகலாவை சந்தித்து மொத்த உண்மைகளையும் உடைக்கிறான். அதுமட்டுமின்றி சந்திரக்கலாவை வைத்து சாமுண்டீஸ்வரிக்கு உண்மைகளை தெரியப்படுத்த திட்டம் போடுகிறான்.
இதையும் படிங்க: Karthigai Deepam: கார்த்திக் செய்த சம்பவம் - மன்னிப்பு கேட்ட ரேவதி! காதல் மலருமா?
அவனது திட்டத்தின்படி வீட்டிற்கு வந்த சந்திரகலா நீ வா அக்கா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லணும் என்று சாமுண்டீஸ்வரியை கார்த்தியின் ஆபிஸிற்கு அழைத்து செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை தொடர்ந்து பாருங்கள்.
இதையும் படிங்க: Karthigai Deepam: சாமுண்டீஸ்வரிக்கு வந்த புது சிக்கல்; ரேவதிக்கு தெரியவரும் உண்மை?