நகைகள் என்றாலே பெண்களுக்கு ஒரு அலாதி பிரியம். தங்க நகை விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி அதை வாங்க மட்டும் பெண்கள் மறப்பதில்லை. எவ்வளவு விலை ஏறினாலும் அதை வாங்க ஒரு கூட்டம் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் தங்கம் வாங்குவது கனவில் தான் என்று இருக்கின்றனர் நடுத்தர மக்கள்.
சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சமீபகாலமாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் உள்ளது. 70 ஆயிரம் ரூபாயை கடந்து ஒரு சவரன் தங்கம் விற்பனை செய்யப்படுவது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை கவலை அடையச் செய்துள்ளது. அது மட்டுமில்லாமல் தங்கம் வாங்க வேண்டும் என்ற கனவையே இந்த விலையேற்றம் கலைத்து விடுகிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைந்தது.
இதையும் படிங்க: வரலாற்றின் புதிய உச்சம்.. தாறுமாறு உயர்வு.. ரூ.75 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை..!!
தங்கம் விலை நிலவரம் (24/07/2025):
இந்நிலையில் ஏறுமுகத்தில் இருந்த வந்த தங்கம் விலை, இன்று (வியாழக்கிழமை) சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1000 குறைந்து ஒரு சவரன் ரூ.74,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.125 குறைந்து ஒரு கிராம் ரூ.9,255-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.75 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை, இன்று ரூ.75 ஆயிரத்திற்கு கீழ் இறங்கியுள்ளது இல்லத்தரசிகளுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.136 குறைந்து ஒரு கிராம் 10 ஆயிரத்து 097 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.1088 குறைந்து ஒரு சவரன் 80 ஆயிரத்து 776 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை நிலவரம்:
தங்கம் விலை குறைந்த நிலையில், வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.128-க்கும், கிலோவிற்கு ரூ.1000 குறைந்து ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வியாபாரிகள் கணித்தபடி, இதே வேகத்தில் தங்கம் விலை பயணிக்குமானால், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு சவரன் ரூ.90 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் என்ற விலையில் விற்றால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அமெரிக்கா எடுக்கும் சில முடிவுகள், பொருளாதாரம், பங்கு சந்தைகளில் பிரதிபலிக்கிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதே அதிகம் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதால், மீண்டும் தங்கம் விலை ஏறுமுகத்தை நோக்கிய பயணத்தில் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தொடர்ந்து ஏற்றத்தில் தங்கம் விலை.. கலக்கத்தில் நகைப்பிரியர்கள்..!