தங்கம் விலை இன்று,ஒரே நாளில் 2,360 ரூபாய் சரிந்துள்ளது நகை வாங்க காத்திருப்போரை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்று காலை வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கம் கிராமிற்கு 165 ரூபாய் குறைந்து 8,880 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்து சவரன் 71,040 ரூபாய்க்கு விற்பனையானது.

இன்று மாலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 130 ரூபாய் 8,750 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,040 ரூபாய் குறைந்து 70,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிங்க: ஒரேநாளில் புதிய உச்சம்.. சர்ரென உயர்ந்த தங்கம் விலை; ஷாக்காகி நிற்கும் இல்லத்தரசிகள்..!
வெள்ளி விலை நிலவரம்:

வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு ஒரு ரூபாய் குறைந்து 109 ரூபாய்க்கும், கிலோவிற்கு 1,000 ரூபாய் குறைத்து ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சரிவுக்கான காரணம் என்ன?

இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியது. கடந்த வாரம் தங்கத்தின் விலை அதிகரித்தது. இந்த சூழ்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதனால் ஆசிய பகுதியில் போர் பதற்றம் தணிந்தது. இது தவிர அமெரிக்கா-சீனா இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது.
இதையும் படிங்க: சரசரவென சரிந்த தங்கம் விலை; ஒரு கிராம் விலை இவ்வளவு கம்மியா?